முக்கிய செய்தி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேச்சு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேச்சு
நாட்டின் பொருளாதாரம் கீழ் திசையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது
பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கூச்சமின்றி ஏற்றுக்
கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் தி.மு.க. வேட்பாளர்
நா. புகழேந்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில்
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேச்சு

விக்கிரவாண்டி, அக். 16-

நாட்டின் பொருளாதாரம் கீழ் திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும், பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கூச்சமின்றி ஏற்றுக்கொண்டிருக்கும் அ.தி. மு.க. அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் தி.மு.க. வேட்பாளர் நா. புகழேந்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேசினார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு. கழக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து விக்கிர வாண்டி பஸ் நிலையம் அருகில் (15-10-2019) செவ்வாய்கிழமை மாலை 5. 30 மணியளவிலும், அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் கானை பஸ் நிலையம் அருகிலும்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம். அமீர் அப்பாஸ் தலைமையில் உதய சூரியனுக்கு ஆதரவு கேட்டு பிரச்சார கூட்டம் நடை பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பி னர்கள் செல்வம், விஷ்ணு பிரசாத், தி.மு.க. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும் விக்கிரவாண்டி நகர தேர்தல் பொறுப்பாளருமான சுந்தரம் எம்.எல்ஏ,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் மௌலானா தளபதி ஏ. ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ, மாநில செயலாளர் கே.எம் .நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செஞ்சி கலீல், Ýஹம்புட்˜ க்ஷ்க்ணு¬யூ ஷஹˆஷிறூ˜.

இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மக்களவை கட்சி கொறடா கே. நவாஸ் கனி எம்.பி ஆகியோர் வாக்கு கேட்டு உரையாற்றினர்.

விக்கிரவாண்டியில் நடை பெற்ற பிரச்சார கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் பேசியதாவது:-
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடை யோனு மாகிய எல்லாம்வல்ல இறைவ னின் திருப்பெயர் போற்றித் துவக்குகிறேன்.

உதயசூரியன் சின்னம்

விக்கிரவாண்டி தொகு திக்கு நடைபெறும் இந்த இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தின் வேட்பாளர் அருமை நண்பர் புகழேந்தி அவர்களுக்கு வாக் காளர் பெருமக்க ளாகிய நீங்கள், உதயசூரியன் சின்னத் தில் வாக்களித்து, பெருவாரி யான வாக்குகள் வேறுபாட்டில் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டுவதற்காக நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் என்ற முறையில் இங்கே நானும், என்னுடன் மாநில -மாவட்ட - நகர நிர்வாகிகளும், அங்கத் தினரும், அதுபோல திமுக சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் -முன்னாள் அமைச்சர் -நம்மைப் பொருத்த வரை எந்நாளும் அமைச்சர் பொன்முடி அவர்களும், அவரது கட்டளையைத் தலை மேல் தாங்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிற கட்சியின் அங்கத்தினரும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து இங்கே வாக்கு சேகரிக்க வந்திருக்கிறோம்.

இன்முகத்துடன் வரவேற்பு

இந்தத் தொகுதிக்குள் நுழையும்போது, திமுகவின் தேர்தல் அலுவலகத்திற்கு நாங்கள் சென்றோம். அங்கு எங்களை இன்முகத்துடன் வரவேற்றதை நன்றியுடன் இங்கே நினைவு கூரக் கடமைப் பட்டிருக்கிறோம். அதனைத் தொடர்ந்து, இந்த பஜார் வீதியில் -பெருமைக்குரிய பொது மக்கள், கண்ணியத்திற் குரிய தாய்மார் களாகிய உங்க ளிடத்தில் இந்த வேட்பாளர் அன்புச் சகோதரர் புகழேந்தி அவர்களுக்கு ஆதரவு கேட் பதற்காகத்தான் இங்கே நாங்கள் வந்திருக்கிறோம்.

ஜனநாயம் - பேரறிஞர்  அண்ணா

நமது நாடு ஜனநாயக நாடு. ஜனநாயகம் குறித்து பேரறிஞர் அண்ணா கூறும்போது, ""வேட்டு முறையில் ஆட்சி மாற்றம் செய்வதற்குப் பெயர் ஜனநாயகமல்ல! மாறாக, ஓட்டு முறையில் ஆட்சி மாற் றம் செய்வதற்குப் பெயரே ஜனநாயகம்!"" என்று நமக்குப் பாடம் சொல்லித் தந்திருக் கிறார். ஆக, ஓட்டு முறை என்பது ஜனநாயக முறை. உலகில் இன்று ஐக்கிய நாடுகள் சபையில 197 நாடுகள் அங்கம் வகித்துள்ள போதிலும், பல்வேறு நாடுகளில் ஜனநா யகம் முறையாக இல்லை என்ற காரணத்தால், ஆங்காங்கே வேட்டு முறையில் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையை நாம் பார்க்கிறோம். ஆனால் நமது இந்தியா எனும் இந்த மாபெரும் நாட்டில் ஜனநாயகத்தின் மீது, அதற்குக் காரணமான - பல்வேறு மத, இன, பிராந்திய, மொழி, கலாச்சார மக்கள் ஒட்டுமொத்தமாக அளிக்கிற தீர்ப்பின் மீது நம்பிக்கை கொண்டு ஆட்சியில் அதற்குரியவர்கள் அமர்த்தப் படுகின்றனர்.  அவ்வாறு, இத்தனை அம்சங்களிலும் நம்பிக்கை கொண்டவர்களாக நாம் அளிக்கும் தீர்ப்பு நியாயமானதாக, கடவுளுக்கும் - மனசாட்சிக்கும் பயந்ததாக இருக்கும். மனசாட்சிக்குப் பயப்படுவது கடவுளுக்குப் பயப்படுவதுதான். அப்படி மனசாட்சிக்குப் பயந்து இயங்குகிற காரணத்தால்தான், 132 கோடி மக்கள் வாழும் இந்த மாபெரும் ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்கிக் கொண்டிருக்கிறது.

அண்டை நாடுகள் - ஜனநாயகம்

நமக்கு அருகிலேயே நம்மை விட அதிகளவில் -அதாவது 150 கோடி மக்கள் தொகையைக் கொண்ட சீன நாட்டில் ஜனநாயகம் இல்லை. அதுபோல, நமக் கருகில் இருக்கக் கூடிய - ஜனநாயகத்தைக் கடைப்பி டிக்கிறோம் என்று சொல்லப் படுகிற நாடுகளில் கூட, அநியா யங்களும், அட்டூ ழியங்களும் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளதால், அங் கெல்லாம் ஜனநாயகம் இருப்பதாக நமக் குத் தெரியவில்லை. ஆனால், இவர்களுக் கெல்லாம் பாடம் புகட்டும் வகையில் - இந்த மாபெரும் நிலப்பரப்பையும், மக்கள் தொகையையும் கொண்டுள்ள நமது இந்திய நாட்டில், இந்நாடு விடுதலை பெற்றது முதல் தொடர்ந்து 72 ஆண்டுகளாக மனசாட்சிப்படி நாட்டு மக்களாகிய நாம் செயல்பட்டுக் கொண்டிருப்பதால்தான் இந்நாட்டில் ஜனநாயகம் சிறப்புற வாழுகிறது. அந்த ஜனநாயகத்தைப் பாது காப்ப வர்களாக நாம் திகழ் வதன் மூலம், ஜன நாயக அடிப்படையில் நமக்குப் பிடித்தவர்களை ஆட்சி யில் ஏற்றவும், நம் கொள்கை களுக்கு மாற்றமாக இயங்க நினைப்பவர்களை ஆட்சியிலி ருந்து மாற்றவும் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

புகழைத் தாங்கியிருக்கிற புகழேந்தி

அந்த அடிப்படையில் இந்த விக்கிரவாண்டி தொகுதியில், அருமை நண்பர் புகழேந்தி அவர்கள் உதயசூரியன்  சின்னத்தில் உங்களிடையே வாக்கு கேட்க வந்திருக்கிறார். அவரைப் பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெறச் செய்து, பெயரிலேயே புகழைத் தாங்கியிருக்கிற இந்தப்  புகழேந்திக்கு எம்.எல்.ஏ. பட்டத்தைச் சூட்டி, அயராத மக்கள் சேவைக்கு அவரை ஆளாக்குவதன் மூலம் அவரது புகழை இன்னும் மேலோங்கச் செய்ய வேண்டும் என - தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் என்ற முறையில் நாங்கள் உங்கள் முன் வந்து பேசிக் கொண் டிருக்கிறோம். திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின், காங்கிரஸ் கட்சியின்  தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி என இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களெல்லாம் உங்களை வந்து சந்தித்து ஆதரவு கேட்டுக் கொண்டிருக்கிறோம்
.
எதிர் அணியினர்

‘‘நடைபெறுவதோ இடைத்தேர்தல். மாநில சட்ட மன்றத்தில் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்குத்தான் ஆட்சி இருக்கும். அதற்குப் பிறகு பொதுத்தேர்தல் வரும். எனவே, இப்போது ஆட்சி யிலிருக்கும் அதிமுகவுக்கு வாக்களித்தால் அது தொகு திக்கு நல்லதாக அமையும்... அதை விட்டுவிட்டு, எதிர்க் கட்சியான திமுகவிற்கு வாக்க ளித்தால் என்ன நடந்துவிடப் போகிறது?"" என்று இங்கு வந்து வாக்கு கேட்கும் பிற எதிரணியினர் கேட்பார்கள். அப்படிக் கேட்பது அவர்கள் உரிமை. ஆனால், அது சரிதானா என்று சீர்தூக்கிப்  பார்க்க வே ண்டி யது உங்களுக்குத்தான் கடமை. 

மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் - நீதிமன்றம்

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - அதன் தலைவர் கலைஞர் அவர்களின் இறுதிக் காலம் வரை இருந்தபோது, இந்தத் தொகுதிக்கு என் னென்ன நலவுக ளெல் லாம் கிடைத்துள்ளன என்ப னவற்றை - ஒரு தாளையும், எழுதுகோலையும் வைத்துக் கொண்டு பட்டியல் போட்டுப் பாருங்கள். உங்களுக்கே உண்மை புலப்படும். திமுக ஆட்சியில்தான் இங்கே மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், பாலம், சாலை, மருத்துவக் கல்லூரி என பலவும் கட்டியெழுப்பப்பட்டு, சீரும் - சிறப்புமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஏழை - எளியோரின் கடன்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப் பட்டிருக்கின்றன. ஏழை விவசாயிகளுக்கு நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்ப ட்டிருக் கின்றன. அவர்களது கடன்கள் தள்ளுபடி செய்யப் பட்டிருக்கின்றன. இப்படி யாகப்  பட்டியல் நீளும். ஆக, தமிழகம் முழுமைக்குமல்ல! இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் திமுக ஆட்சியில் என்னென்ன கிடைத்திருக்கிறது என்று பட்டியலிட்டுப் பார்த்தாலே - யாரை ஆதரிப்பது சரியாக இருக்கும் என உங்கள் மனசாட்சி நொடிப்பொழுதில் சொல்லி விடும். 

வன்னியர் சமுதாய மக்கள்

இங்கே, வன்னியர் சமுதா யத்தைச் சேர்ந்த பொது மக்கள் நிறைவாக வாழ்கி றீர்கள். இந்த சமுதாயத் தவர் களால் நடத்தப்படும் கட்சி யாருடன் கூட்டணியில் இருக்கிறதோ - அந்தக் கட்சியின் தலைவி மறைந்த ஜெயலலிதா அம்மையார் - வன்னியர் சமுதாய மக்களை ‘மரவெட்டிகள்’ என்று சட்டமன் றத்திலேயே சொன்னார்.  ஆனால், இட ஒதுக்கீட்டுக்காகப் போராடி, அதற்காக உயிர் நீத்த வன்னியர் சமுதாய மக்களையெல்லாம் சமூக நீதிக்காகப் போராடிய வர்களாகக் கணக்கில்  எடுத்துக் கொண்டு, அவர்களது மறை வால் துயரிலிருக்கும் குடும்பத் தாருக்கு பென்சன் உதவித் தொகை வழங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் உங்களோடுதான் இருக்கிறார். 

டாக்டர் ராமதாஸ்

இதே திமுக கூட்டணியில் அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்களும் இணைந்திருந்த நிலையில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், நம் கூட்டணி நாற்பதுக்கு நாற்பது என அனைத்துத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்றது. பின்னர் - வெற்றி பெற்ற அந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அப்போது, ‘‘இதுவரை கலைஞர் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தோம்... இனி அவர் திமுகவின்  தலைவர் மட்டுமல்ல! எல்லா சமுதாய மக்களுக்கும் அவர்தான் தலைவர்! எங்கள் வன்னியர் சமுதாயத்துக்கும் அவரே தலைவர்!"" என டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்கள் கூறினார்கள். ‘‘அரசியலில் இருந்தால் பொய் சொல்வார்கள்"" என்று பலபேர் கூறக் கேள்வி யுற்றிருக்கிறேன். ஆனால் நான் பொய் சொல்வதில்லை. என் வாழ்வில் ஒரேயொரு முறை ஒரேயொரு பொய் சொல்லி, அதனால் கவலையுற்று -நாற்பது நாட்கள் காய்ச்சலில் அவதியுற்றேன்.  அன்றிலிருந்து மறந்தும் கூட பொய் சொல்வதேயில்லை.

ஆக, அவர்கள் வாயாலேயே ‘‘எங்கள் சமுதாயத்திற்கும் கலைஞர்தான் தலைவர்!"" என்று சொன்ன அப்படிப் பட்ட கலைஞர், அவரது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி பற்றியெல்லாம் இன்று அவர்கள் தாறுமாறாகப் பேசிக் கொண்டிருக்க வேண் டிய அவசியம் எதுவும் எழ வில்லை. திமுக முன்பு ஆட்சி யிலிருந்தது. இப்போது இல்லை. மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவ்வளவுதான்.

மின்சார பகிர்வு

ஏன் எங்களுக்கு அப்படி யொரு விருப்பம்? நம் தமிழகத்தில் ஏறக்குறைய 25 ஆண்டுகள் அஇஅதிமுக ஆட்சியிலிருந்திருக்கிறது. ஜெயலலிதா அம்மையாரின்  மறைவுக்குப் பிறகும் இப் போது நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்து கொண் டிருக்கிறது. இப்படியிருக்க, அவர்கள் இந்தத் தொகு திக்கு மட்டுமாவது செய்த நன்மைகள் என்ன என்று நீங்கள் பட்டியல் போட்டுப் பாருங்கள். இந்த விக்கிரவாண்டி தொகுதி - ஏழைகளையும், அன்றா டங்காய்ச்சிகளையும் பெரு வாரியாகக் கொண்ட பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. அங்கு சுற்றுப்பயணம் செய்து,  குறைந்தபட்சம் அப்பகுதிகளில் மின்சாரப் பகிர்வு எப்படி இருக்கிறது என்றாவது பாருங்கள்.

மின்உற்பத்தி - தினமலர்

இதோ என் கையில் உங்களுக்கு ஆதரவான ‘தின மலர்’ பத்திரிக்கையை வைத்திருக்கிறேன். தமிழகத் தில் மின்சார உற்பத்தி தாழ்நிலைக்குச் சென்று, ஒட்டுமொத்த இந்தியாவிலும் 33ஆவது இடத்திற்குத் தரமிறங்கியிருக்கிறது என இன்று அப்பத்திரிக்கை எழுதியிருக்கிறது. இதுதான் இவர்களின் ஆட்சியில் இந்த மாநிலத்திற்கும் - குறிப்பாக இந்தத் தொகு திக்கும் கிடைத்திருக்கிற நன்மைகளா, சொல்லுங்கள்! இவர்களின் ஆட்சியில் உடிஅஅளைளiடிn, உடிசசரயீவiடிn, உடிடடநஉவiடிதோன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தளபதியார் அடிக்கடி சொல்வார். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களால் நியமிக்கப் பட்ட ஒரு வேட்பாளரை நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப் பினால், அவர்களால் கண்டு கொள்ளப்படாத, எந்த நலத்திட்டங்களும் செய்யப் படாத, மக்களின் எதிர்பார்ப் புகள் சட்டை செய்யப்படாத நிலைதான் இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் நீடிக்கும். 

வீரச் சிங்கங்கள்

ஆனால், இந்தப் புகழேந்தி அவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் வீரச் சிங்கங்களுடன் இவரும் இணைந்தமர்ந்து, இந்தத் தொகுதியின் நன்மைக்காகவும், நம் மாநிலத்தின் உரிமைக ளுக்காகவும் உரக்கக் குரலெ ழுப்புவார்... இன்னும் ஒன்றரை ஆண்டில் ஆட்சி முடிந்து, மீண்டும் தேர்தலில் மக்கள் முன் நிற்க வேண்டியிருக்கிறதே என்ற அச்சத்தில் ஆட்சியி லிரு ப்பவர்களும் வேறு வழியி ல்லாமல் இவரது கோரிக்i ககளை ஒன்று விடாமல் நிறைவேற்றித் தருவதற்கான சூழல் அமையும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண் டும்.

தமிழ்நாட்டை வாழ வைப்பதற்காக....

அதற்காகத்தான் இவருக்கு வாக்களிக்க உங்களைக் கேட்கிறோம். இவருக்கு வாக்களிப்பது திமுகவுக்கு ஆதரவு கேட்பதற்காக அல்ல. மாறாக, தமிழ்நாட்டை வாழ வைப்பதற்காக! நாம் வாக்களித்து வெற்றி பெறச் செய்தாலும் திமுக இருக்கும். வெற்றிவாய்ப்பை இழந்தாலும் இருக்கும். கலைஞர் அவர் களது காலத்தில் பல்லாண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திராத நிலையில் இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கவில்லையா? மக்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கவில்லையா? 

ஆனால், நீங்கள் அனைவரும் இணைந்து திமுக வேட்பாளராகக் களத்தில் உள்ள இந்தப் புகழேந்திக்கு வாக்களித்தால், இந்தத் தொகுதிக்கும் - நம் மாநிலத்திற்கும் தேவையான நலவுகளுக்காக அரசிடம் உரக்கக் குரல் கொடுத்துப் பெற்றுத் தரும் சூழலைத் தரவல்ல சிறந்த உந்துசக்தியாக செயல்வீரர் பொன்முடி அவர்களோடு, இந்தப் புகழேந் தியும், சுந்தரமும் திகழ்வார்கள் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. அந்த ஒன்றுக்காகத்தான் நாங்கள் உங்களிடத்தில் ஆதரவு கோரிக் கொண்டிருக்கிறோம். 

அரசியல் லாபங்கள்

இவருக்கு ஆதரவு திரட்ட நாங்கள் வந்திருப்பது ஏதோ அரசியல் லாபங்களுக்காக என்று மட்டும் கருதி விடா தீர்கள். இன்றைய தமிழக அரசின் நடவடிக்கைகள் என்ன லட்சணத்தில் இருக் கிறது என தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் அறிந்தே வைத்திருக்கிறார்கள். அப்படி யிருக்க, ஏதோ அறியாமையில் அவர்களுக்கு நீங்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்துவிட்டால், இந்த மாநிலத்தில் குறையற்ற - சுபிட்சமான ஆட்சி நடக்கிறது என உண்மைக்குப் புறம்பாக அடையாளப்படுத்துவதாக ஆகிவிடும். 

கலைஞர் ஆட்சியில் 70 வயது முதியவர்களுக்கு பென்ஷன்

உண்மையிலேயே தமிழக த்தில் இன்றிருக்கும் ஆட்சியில் நடக்கும் அனைத்தும் நன்றாகத்தான் நடக்கின்றன என உங்கள் நெஞ்சங்களில் கைவைத்து மனசாட்சியுடன் சொல்ல முடியுமா? இதுவரை கலைஞர் ஆட்சியில் இங் குள்ள கிராமங்களின் எழு பது, என்பது வயதுக் முதியவர்களுக்கு வழங்கப் பட்ட முதியோர் பென்சன் - உதவித்தொகையை நிறுத்த வேண்டியதன் அவசியம் என்ன...?"" என்று இங்கே தம்பி கேட்டாரே...? ஏன் நிறுத்தினீர்கள்? உங்கள் கூட்டணியாளர்களான பாஜக கட்சி உங்களிடம் கேட்டுக் கொண்டதால், அவர்களின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டு நிறுத்தி விட்டீர்களா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா என்று நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று கேளுங்கள் அவர்களை.

மக்கள் உரிமை பறிப்பு

இன்று மத்தியில் ஆட்சி யிலிருப்பவர்கள், மாநிலங் களில் வசிக்கும் மக்களின் உரிமைகளை ஒவ்வொன் றாகப் பறித்துக் கொண்டிருக் கிறார்கள்... அதற்கு இந்த மாநில ஆட்சியாளர்கள் மக்களை மறந்து துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாகத்தான் இன்று நாடு முழுக்க ஒரே ரேஷன் கார்டு கொண்டு வர வேண்டும் என்றும், மக்களுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்றும் பாஜக கூறிக்கொண்டும், ஒவ்வொன் றாகச் செயல்படுத்திக் கொண் டும் இருக்கிறது. நாடு முழுக்க ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு என இன்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்களே...? அது நடைமுறைச் சாத்திய மானதுதானா?

இந்துத்துவா கொள்கை

நாம் ஒன்றும் பாரதீய ஜனதா கட்சிக்கு விரோதி களல்ல. அது தலையில் வைத்துக் கொண்டாடும் இந்துத்துவக் கொள்கையைத் தான் நாம் எதிர்க்கிறோம். ஜனநாயகத்தில் ஓர் அரசியல் கட்சி இன்னோர் அரசியல் கட்சிக்கு விரோதமாக இருக்க இயலாது. ஆனால், அதன் கொள்கைக்கு விரோதமாக இருக்க முடியும். 

பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர் களாக இருக்கின்ற போதிலும், அவர்கள் அண்ணன் -தம்பி, அக்காள் - தங்கை, மாமன் - மச்சான் என உறவுமுறை கொண்டாடி, உல குக்கே எடுத்துக் காட்டாகத் திகழ்கிற மக்களைக் கொண்ட புனிதமான மண் இந்தத் தமிழகத்து மண். அப் படிப் பட்ட இந்த மண்ணில் மதமாச்சரியம், ஜாதிப் பிரிவினைகளைத் திணித்து, அவற்றின் மூலம் மக்களின் உள்ளங்களில் வேறுபாட்டை உருவாக்கிக் குளிர்காய நினைக்கும் இவர்களின் குறுகிய அரசியல் இந்த மண்ணில் நடந்தேற முடியுமா என்றுதான் உங்களை நான் கேட்க விரும்புகிறேன்.

ஒன்றே குலம்; ஒருவனே தேவன்

அப்படி யெல்லாம் இருந்தால் இங்கே -‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"" என்று சொல்கிற திருக்குறளும், அதை இயற்றிய திருவள்ளுவரும் எதற்கு? ‘‘ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!!"" என்று சொன்ன திருமூலர் எதற்கு? ‘‘உலக மக்கள் அனைவரும் ஒரே தாய் - தந்தைக்குப் பிறந்தவர்களே! எனவே எல்லா மக்களும் சமமானவர்களே!"" என்று பேசிய வள்ளலார் எதற்கு? அவர்களெல்லாம் இந்த நாட்டிலே பிறந்தவர்கள் இல்லையா? அவர்களின் எழுத் துக்களுக்கும், அதன் வாயிலாக இந்த மக்களிடம் எதிர்பார்த்த நலவுச் சிந்தனைகளுக்கும் இங்கே என்ன மரியாதை கிடைக்கும்?
ஆக, மக்களைப் பிரித் தாள நினைப்பவர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகி - திருவள்ளுவர், திருமூலர்,  வள்ளலார் உள்ளிட்ட நற்சிந்தனை யாளர்களின் போதனைகளையெல்லாம் இந்த மண்ணிலே குழி தோண்டிப் புதைக்கப் போகி றீர்களா? சொல்லுங்கள்! எனவே, தமிழகத்தின் பாரம் பரியத்தைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று கருதினால், இந்த நாட்டின் இறையாண்மை யையும் - இந்நாட்டு மக்களின் நல் லிணக்கச் சூழலையும் சின்னா பின்னமாக்க முயன்று கொண் டிருக்கும் இங்குள்ள ஆளுங் கட்சிக்கு ஆதரவாகப் போக முடியும்.

மோடிக்கு பாராட்டு

பாஜகவுக்கும், எங்களுக்கும் வேறென்ன விரோதம் இருந்து விடப் போகிறது? உங்களுக்கு ஒன்றைச் சொன்னால் வியப் புறுவீர்கள். நான் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த போது, இப்போது இந்தியப் பிரதமராக இருக்கும் மோடி அப்போது குஜராத்  மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டிருக்கிறார். அப்போது அவரை ஒரு விஷயத்திற்காக நான் பாராட்டிப் பேசியிருக்கிறேன். 

பவர் கமிட்டி - மின் திருட்டு

இந்திய நாடாளுமன்றத்தில் பவர் கமிட்டி என்று ஒன்று இருக்கிறது. இந்திய மாநிலங்களின் மின்சாரத் துறை மினிஸ்டர்கள் அத்தனை பேரும் அதில் இருப்பார்கள். நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் மின் உற்பத்தி எந்த நிலையில் உள்ளது என்று ஆய்ந்தறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கமிட்டி அது. அதன் சார்பில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில், ‘‘உத்தரப் பிரதேசத்தில் 47 சதவிகித மின்சாரம் திருடு போகிறது... தமிழகத்தில் 17 சதவிகித மின்சாரம் திருடு போகிறது."" என ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் மின் திருட்டு குறித்துப் பட்டியலிட்டுக் கொண்டே வந்தார்கள்.
 
குஜராத் மாநிலம் 

குஜராத் மாநிலம் குறித்துக் குறிப்பிடுகையில், ‘‘அங்கே மின்சாரம் அதிக வளர்ச்சியில் இருக்கிறது... அங்கு மின் திருட்டே இல்லை"" என்று குறிப்பிடப்பட்டது. அப்போது அந்தக் கூட்டத்தில் நான், ‘‘ஒரு மாநிலத்தில் தேவைக்கதிகமாக மின் உற்பத்தி செய்ய இயலும்... அங்கு மின் திருட்டை முற்றி லுமாகத் தடுக்க இயலும்! என்று பறைசாற்றும் வகையில் குஜராத் மாநிலம் திகழ்ந்து கொண்டிருக்கிறதே...? இந்தியாவின் அனைத்து மாநிலங்களது மின் உற்பத்திக்கும் இந்த குஜராத்தை முன்னுதாரணமாக ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?"" என்று மோடி அதன் முதல மைச்சராக இருந்த நேரத்தில் நான் பேசினேன்.

நான் சென்னைக்குத் திரும்பி மூன்று நாட்கள் கழித்த பிறகு என் வீட்டுக் கதவை ஒருவர் தட்டினார். யாரென நான் வினவியபோது, ‘‘நான் குஜராத் மாநில கேபினட் செயலாளர் வந்திருக்கிறேன்"" என்றார். ‘‘குஜராத் மாநில செயலாளருக்கு இங்கே வருவதற்கான அவசியம் என்ன?"" என்று நான் கேட்க, ‘‘உங்களைப் பார்த்துப் பாராட்டிவிட்டு வருமாறு எங்கள் முதலமைச்சர் என்னை அனுப்பினார்..."" என்றார். ‘‘நான் உங்களைத் தனிப்பட்ட முறையில் பாராட்டவில்லை... உங்கள் செயல் சரி என அறிக்கை சொன்னது... அதனால் பாராட்டினேன்"" என்று அவரிடமே சொன்னவன் நான். அரசியலில் நடக்கும் நலவுகள் எதுவாக இருந்தாலும் -அதைச் செய்தோர் யாராக இருந்தாலும் அதை -அவர்களைப் பாராட்டுவது என்பது அரசியல் நாகரிகம். அதைத்தான் நானும் செய்தேன்.
உண்மையை உணர்ந்து அப்படியெல்லாம் பாராட்டிய நான்தான் இன்றும் உண் மையை உணர்ந்தவனாகச் சொல்கிறேன்... 

மக்கள் நலனுக்கு
எதிரான திட்டங்கள்

இன்று பாரதீய ஜனதா கட்சி இந்த நாட்டில் கொண்டு வர விரும்பும் - இந்திய அரசியல் சாசனத்திற்கும், மக்கள் நலனுக்கும் எதிரான திட்டங்கள் அனைத்தும் ஜனநாயக மாண்பைச் சிதைப் பனவாகவும், இந்திய அரசிய லையே கேலி செய்வதாகவும் அமைந் துள்ளது! அதனால் தான் எதிர்க்கிறோம்.

கஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து

கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிச் சட்டம் இயற்றியிருக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் கட் டமைப்பை மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு உரிமை உண்டுதான். ஆனால், அதைச் செய்வதற்கென ஒரு முறை இருக்கிறது. எந்த மாநிலத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளதோ - அந்த மாற்றம் குறித்து அந்த மாநிலத்து மக்களின், அரசின் கருத்துக்களை அறிந்து கொண்டு, அதனடிப் படையில் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த முறையும் மரபும். இதுதான் இந்திய அரசியல் சட்டத்தில் சொல்லப் பட்டிருப்பது.

அரசியல் தலைவர்கள் - வீட்டுச்சிறை

இந்த வழிகாட்டல் படித்தான் செய்தீர்களா? திடீரென அம்மாநில அரசைக் கலைத்தீர்கள்... அங்குள்ள அரசியல் தலைவர்களை யெல்லாம் வீட்டுச் சிறையில் வைத்தீர்கள்... தலைவர்களை மட்டுமின்றி, மாநிலத்தின் அனைத்து மக்களையும் கூட நேற்று வரை வீட்டிற்குள் பூட்டி வைத்தீர்கள்... இன்றுதான் திறந்து விட்டிருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். ஆக, ஒரு மாநிலத்தையே சிறைச் சாலையாக்கி, மாநில மக்கள் அனைவரையும் சிறைக் கைதிகளாக்கியிருக்கிறீர்களே...? இது என்ன நியாயம்? 

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம்

இதோ அருகில்தான் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் இருக்கிறது. ""எங்க ளுக்கு யூனியன் பிரதேசம் என்ற தரம் வேண்டாம்! பாண் டிச்சேரியை மாநிலமாக அறிவியுங்கள்!"" என அங்குள்ள மக்கள் நீண்ட காலமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்... அது கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், இத்தனைக் காலம் மாநிலமாக இருந்த கஷ்மீரை - அம்மாநிலத்து மக்களின் விருப்பங்களுக்கு விரோதமாக - அம்மாநிலத்தைப் பிரித்து, யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்திருப்பது என்ன நியாயம்? அம்மாநில மக்கள் உங்களிடம் கேட்டார்களா? அங்குள்ள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைn வற்றினார் களா? அங்குள்ள அரசியல் தலைவர்கள் ஏதாவது கோரிக்கை வைத்தார்களா? 

இறையாண்மை - அரசியல் சாசன சட்டம்

எனவேதான் சொல் கிறோம்... பாஜக இந்த நாட்டின் இறையாண்மையை, அரசியல் சாசன சட்டத்தைக் கால்களுக்குக் கீழ் போட்டு மிதித்துவிட்டு, சர்வாதி காரமாகச் செயல்பட முனைந்து கொண்டிருக்கிறது. இது இந்த நாட்டுக்குப் பொருந் தாது. இந்த நாடு ஃபாஸிஸம், நாஸிஸத்தில் வளர்ந்த நாடல்ல. வள்ளுவர், வள்ளலார், திருமூலர் போன்ற பெருமக்களும், காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், விவேகானந்தர் போன்ற பெருந்தலைவர்களும் பயிற்றுவித்த தத்துவங்களின் அடிப் படையில் வளர்த் தெடுக்கப்பட்டதே இந்த நாடு. எனவே, இங்கு சர்வாதி காரத்தைத் திணிக்க முடியாது.
 
சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன?

கஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்தை மட்டும் நீக்கியிருக்கி றீர்களே...? நாகாலாந்து, அஸ்ஸாம், மேகா லயா, அருணாச்சல பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய பிராந்தியங்களுக்கும் சிறப்பு அந்தஸ்துகள் உள்ளனவே? அவற்றை நீங்கள் நீக்கினீர்களா? சிறப்பு அந்தஸ்து என்று சொன்னதும் என்னவோ, ஏதோ என்று சிந்திக்கத் தேவையில்லை. ஒரு மாநிலத்தின் உரிமையை - அங்குள்ள மக்களின் நிலை மையைக் கருதிப் பாது காப் பதற்காக வழங்கப் பட்டதே சிறப்பு அந்தஸ்து என்பது.

நாகலாந்து

 நாகாலாந்திற்குச் சென்று யாரும் நிலம் வாங்க முடியாது. ஏன் அவ்வளவுக்குச் செல்ல வேண்டும்? நம் மாநிலத்திலேயே இருக்கிற நீலகிரியில் உள்ள மலைப் பகுதியில் தோடர்கள் வசிக்கிறார்கள். அங்கு சென்று நிலம் வாங்க இதர பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இயலாது. இந்த விதியைத் தாண்டி, முறையான அரசு உத்தரவு எதுவும் பெறாமல் - நீலகிரி மலையில் நூறு வணிக முதலாளிகள் கட்டி வைத்திருக்கும் ரிசார்ட்டுகளை யெல்லாம் இடித்தகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சொல்லி யிருக்கிறதா, இல்லையா?
ஆங்கிலேயர் ஆட்சி

பஞ்சமி நிலம்

உங்கள் மாவட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஆங்கிலேயர் இந்நாட்டை ஆண்ட காலத்தில், இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பஞ்சமி நிலத்தை வழங்கி னார்கள். அதை வேறு யாரும் வாங்க முடியாது. அப்படியான ஒரு பஞ்சமி நிலத்தில் மறைந்த ஜெயலலிதா அம்மையார் ஓர் அரண்மனை கட்டினார் என்பதற்காக அதனை எதிர்த்து இங்குள்ள அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை நாடவில்லையா?
வாழ்வியல் சூழல்
இவையெல்லாம் அவர் களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துகள்தான். அவரவர் சூழலைக் கருதி -உரிமைகளைப் பாதுகாத்துக் கொடுக்கும் பொருட்டு அவர்களுக்கு இதுபோன்ற சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப் பட்டுள்ளன. அதுபோலத்தான் கஷ்மீர் மக்களின் வாழ்வியல் சூழலைக் கருத்திற்கொண்டு அங்கும்  சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆக, சிறப்பு அந்தஸ்து என்பது ஏதோ கஷ்மீர் மக்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கஷ்மீர் மாநிலத்தில் பணக் காரர்களும், படித்த வர்களும் மட்டும் இருக்கவில்லை. மலை வாசிகளும், நாடே hடிகளும் இருக்கிறார்கள். ‘குஜ்ஜார்’ என்ற முஸ்லிம் நாடோடிச் சமூகத்தினர் அங்குதான் வசிக்கிறார்கள். அவர்கள் ஓரிடத்தில் நிரந்தர மாக இருக்க மாட்டார்கள். ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு - ஊர் ஊராகப் போய்க் கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஆடு, மாடுகளை மேய்க்கும் பகுதி களுக்குள் யாரும் நுழையக் கூடாது என்பது அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து. இப்போது அந்தச் சிறப்பு அந்தஸ்துதான் நீக்கப் பட்டிருக்கிறது. இதன் விளைவாக பெரிய பெரிய பண முதலைகளெல்லாம் அங்கே சென்று ஹோட்டல் களையும், சொகுசு விடுதிகளையும் கட்டலாம் என வழி திறந்து விடப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஆக, இந்தச் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்ப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் வரும் என்று நம்புகிறோம். ""வை ளை ரnஉடிளேவவைரவiடியேட! ஐவ ளை டைடநபயட!!""அரசியல் சட்டத்திற்கு முரணானது! சட்ட விரோத மானது!"""" என இந்திய உச்ச நீதி மன்றம் நிச்சமாகச் சொல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்.

72 ஆண்டு காலம் -ஜனநாயக விழுமியம் 

எனவேதான் சொல்கி றோம்... இந்தியாவில் கடந்த 72 ஆண்டு காலமாகப் பாது காத்து வந்த ஜனநாயக விழுமியங்களை இந்த பாஜக அரசு குழிதோண்டிப் புதைத்து விட்டு, ஓர் ஏகாதிபத்திய - சர்வாதிகார - ஃபாசிஸ - நாசிஸப் போக்கைக் கடைப்பிடிக்கிற ஆட்சிமுறையைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகப் பாரம்பரி யத்திலிருந்து வந்த, அதைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிற இந்தத் தமிழ் மண்ணிலிருந்து அதை நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கீழ் நின்று வலிமையாக எதிர்க்கிறோம்... அதன் விளைவுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு பேரடியை, பேரிடியை இந்தத் தமிழகம் த