முக்கிய செய்தி

நெல்லையில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி

நெல்லையில்  இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி
பாபரி மஸ்ஜித் நிலவழக்கில் வாதங்கள் நிறைவு; 1989-ம் ஆண்டிலிருந்தே கூறி வந்ததைப்போன்று 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்படுவோம் 
நெல்லையில்  இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி

திருநெல்வேலி, அக். 17-

பாபரி மஸ்ஜித் நில வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 1989-ம் ஆண்டிலிருந்தே கூறி வந்ததைப்போன்று உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்படுவோம் என்று நெல்லை கைலாசபுரத்திலுள்ள இ. யூ. முஸ்லிம் லீக் மாவட்ட அலுவ லகத்தில் இன்று 17.10.2019 வியாழக்கிழமை காலை 11.00  மணியளவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர்  கே.எம். காதர்மொகிதீன் தெரிவித் துள்ளார்.

பாபரி மஸ்ஜித் நிலவழக் கில் கடந்த 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இறுதி விசாரணையில் இருதரப்பு வாதங்கள் நேற்றுடன் (16-10-2019) நிறைவடைந்தன. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபரி மஸ்ஜித் அமைந்திருந்த 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, 
மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனர் இது தொடர் பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர்நீதி மன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகி யோரைக் கொண்ட அரசி யல் சாசன அமர்வு விசாரித்தது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் சமரசத் தீர்வு காண் பதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவை உச்சநீதி மன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. சமரசப் பேச்சு வார்த்தையின் போது அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று அந்தக் குழு கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தது.

இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வந்தது. அனைத்து வாதங்களையும் அக்டோபர் 17-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதைத்தொடர்ந்து கடந்த 40 நாட்களாக தொடர்ந்து நடந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் நேற்று (16-10-2019) மாலை 4 மணியுடன் நிறைவடைந்தன. இதைத்தொடர்ந்து தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பதாக பாபரி மஸ்ஜித் நிலவழக்கில் தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் நாங்கு நேரி இடைத்தேர்தல் பிரச் சாரத்திற்கு திருநெல்வேலி வருகை  தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப் பதாவது:-
பாபரி மஸ்ஜித் நிலவழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதி மன்றத்தில் தினசரி அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றும், தீர்ப்பு முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் 1989-ம் ஆண்டிலிருந்தே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தி வந்துள்ளது. 

தற்போது ஆகஸ்ட் 6-ந்தேதி முதல் தினசரி அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று நேற்றுடன் (16-10-2019) முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
ஒரு வழக்கில் ஒருவருக்கு சாதகமான அல்லது பாதகமான தீர்ப்பு வரலாம். இது முக்கியமல்ல. தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு கட்டுப்பட வேண்டும். வழக்கு தொடுத்தவர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கருத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் மத்தியிலும் ஆதரவு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 
எந்த அரசியல் கட்சியும் தங்களது அரசியல் ஆதாயத் திற்காக இந்த தீர்ப்பை பயன் படுத்த கூடாது.
இவ்வாறு பேட்டியில் தெரிவித்தார். 

ம்ðஙீர்துக்ம்ðட்¶ மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மாவட்ட தலைவர் ணி™.ம்லி.ணிஎ. மீரான் மைதீன், மாவட்ட செயலாளர் பாட்டபத்து முஹம்மது அலி, மாவட்ட பொருளாளர் கானகத்து மீரான், மண்டல இளைஞரணி அமைப்பாளர் பாட்டபத்து கடாஃபி, மாவட்ட துணைத் தலைவர் நாகூர் கனி, சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் சேரை கமால் பாட்சா, மேலப்பாளையம் நகர தலைவர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், செயலாளர் ஜாஹிர், பொருளாளர் மில்லத் காஜா, வீரவநல்லூர் இலியாஸ், பட்டதாரி அணி செயலாளர் ஹனிபா வழக்கறிஞர்கள் மதார் மைதீன், பீர்முஹம்மது, மைதீன் பிச்சை, கௌது ராஜா, அலி மைதீன் ஙிழ்டீஙீம்ஸிட்˜ ஙிஸிணுஙுற்ஷிறூ˜.

இதனிடையே பாபரி மஸ்ஜித் நில வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று அகில இந்திய உலமா கவுன்சில் அமைப்பின் பொதுக் செயலாளர் மௌலானா மஹ்பூப் தர்யாதி கூறியுள்ளார்.
.இதே போல் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிப்போம் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினர் மௌலானா செய்யது கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், """"இது நில உரிமை தொடர்பான வழக்கு. இந்த வழக்குக்கு போதுமான ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து விட்டோம். வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம். தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதற்கு மதிப்பளிப்போம்"""" என்றார்.