முக்கிய செய்தி

சென்னையில் நடைபெற்ற தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரி நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு

சென்னையில் நடைபெற்ற தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரி நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு
 திருக்குர்ஆன் கருத்துக்களையும்,நபிகளாரின் பொன்மொழிகளையும் முன்வைக்காமல் முஸ்லிம்கள் அரசியல் செய்ய இயலாது
 மத்திய அரசில் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறையை பெற்றுத்தந்த சூரா ஃபாத்திஹாவின் வழிகாட்டல்
 முஸ்லிம் சமுதாயம் மார்க்க ரீதியாக எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு தீர்வு காண
உலக அளவிலான மார்க்க அறிஞர்களை கொண்ட சர்வதேச முஸ்லிம்
தனியார் சட்ட வாரியத்தை அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்

சென்னையில் நடைபெற்ற தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரி நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு

சென்னை, டிச. 03-

முஸ்லிம் சமுதாயம் மார்க்க ரீதியாக எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு தீர்வு காண உலக அளவிலான மார்க்க அறிஞர்களை கொண்ட சர்வதேச முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்த அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று சென் னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

உத்தம பாளையம் மௌ லானா, அல்ஹாஜ் அல்லாமா எஸ்.எஸ். முஹம்மது அப்துல் காதர் ஸாஹிப் மொழிபெயர்த்த  தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரி இரண்டாம் பாகம் நூல் வெளி யீட்டு விழா 01-12-2019 ஞாயிறு மாலை 4. 30 மணி அளவில் சென்னை கீழ்ப்பாக் கத்தில் அமைந்துள்ள ஆர்.எஸ்.டி. பார்ட்டி மஹாலில்  பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடை பெற்றது.

மௌலானா ஜாபர் ஜமாலி நூல் அறிமுகவுரை நிகழ்த்த, மௌலானா பி.எஸ்.ஏ. அபு தாஹிர் தொகுத்து வழங்கினார்.

முதல் பிரதியை நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி வெளியிட ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்ற கொறடாவுமான கே. நவாஸ் கனி பெற்றுக்கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் உலமா பெருமக்கள், மார்க்க அறிஞர் கள், சமுதாய புரவலர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அடையாறு குராசான் மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா எம். ஷதீத்துத்தீன் பாகவி மௌலானா ஆகியோர்  சிறப்புரை ஆற்றினர்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் மௌலானா அப்துல் ரஹ்மான் ஹஸ்ரத், மௌலானா முஜிபுர் ரஹ்மான், மௌலானா கலீலுர் ரஹ்மான், சீனாதானா அறக்கட்டளை அறங்காவலர் செய்யது அப்துல் காதர்,  தொழிலதிபர் எஸ்.பி. நூர் முஹம்மது, 
மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாவட்ட தலைவர் யூசுப் குலாம் முஹம்மது, மாவட்ட துணைத் தலைவர் முத்தரசர் காலித், மாவட்ட துணைச் செயலாளர் சேப்பாக்கம் ஆலம்கான், ஆர்.எஸ். தர்வேஸ் மைதீன், மணிச்சுடர் மஹபூபர் ஷரீப், எஸ்.டி. கூரியர் அரபாத் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்பேசியதாவது:-

அல்ஹாஜ் அல்லாமா எஸ்.எஸ். முஹம்மத் அப்துல் காதிர் ஸாஹிப் 

திருக்குர்ஆனுக்குத் தமிழில் முதன்முறையாக விரிவுரை தந்த உத்தம பாளையம் மவ்லானா அல்ஹாஜ் அல்லாமா எஸ்.எஸ். முஹம்மத் அப்துல் காதிர் ஸாஹிப் பாக்கவீ அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட """"தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரீ"" -இரண்டாம் பாகம் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனை வரையும் துவக்கமாக நான் மனதார வரவேற் கின்றேன்.

உத்தமபாளையத்தின் சிறப்பு

உத்தமபாளையம் பல சிறப்புகளைப் பெற்ற ஊர். அந்த ஊரோடு மவ்லானா அவர்களின் பெயரும் கலந்து, """"அல்லாமா முஹம்மத் அப்துல் காதிர் அவர்களது ஊர்தானே?"" என்று கேட்கு மளவுக்கு ஊருக்குப் பெருமை சேர்க்கப் பட்டிருக்கிறது. ஷேக்ஸ்பியரால் லண்டனும், லண்டனைக் கொண்டு ஷேக்ஸ்பியரும் எப்படிப் பெருமை பெற்றனரோ அதுபோன்றதொரு சிறப்பை முஸ்லிம் உலகத்தில் இந்த உத்தமபாளையம் ஊர் பெற்றிருக்கிறது. உத்தமர்கள் வாழ்ந்து சிறந்து, இந்த ஊருக்காக உழைத்திருக்கிற காரணத்தால், அந்த ஊருக்கு இப்படியொரு பெயரும், புகழும் கிடைத்திருக்கிறது.

புகாரீ ஷரீஃப்

ஒப்புக்கொள்ளப்பட்ட ஹதீஸ் - நபிமொழித் தொகுப்பு களிலேயே புகாரீ ஷரீஃபுக்கு த்தான் முதலிடம் என உலமாக்களால் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. அப்படிப் பட்ட புகாரீ ஷரீஃபின் விளக்கவுரை நூலுக்கான தமிழாக்கத்தைத் தாங்கியதே இங்கு வெளியிடப்படும் இந்த நூல். நபிகளார் அவர்களால் திருமறை குர்ஆனும், அவர் களது வாழ்க்கை நெறியும் என இவ்விரண்டும் மனித சமுதாயத்திற்கு விட்டுச் செல்லப் பட்டிருக்கிறது. திருக்குர் ஆன் 23 ஆண்டு காலம் சிறுகச் சிறுக வசனங்களாக இறக்கப்பட்டு, நம்மிடம் இன்று ஒட்டு மொத்தக் கோர்வை யாகத் தரப்பட்டிருக்கிறது. ஆக, அத்தனை ஆண்டுகளாக வஹீ மூலம் வசனங்களாக நபிகளாரி டம் இறைவனால்  தரப்பட்டு, அவை நபித் தோழர்களால் மனனம் செய்யப்பட்டு, """"நபிகளாருக்கு இன்னின்ன தருணங்களில் இன்னின்ன வசனங்கள் இறக்கப் பட்டன..."" என்று பட்டியலிட்டுச் சொல்லப் பட்டுள்ள இந்த வரலாற்றுக்கு ஈடு, இணை, ஒப்பு, உவமை உலகில் வேறெதற்கும் இதுவரை இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை. அப்படி, தம் வாழ்நாளிலேயே தமக்கு 23 ஆண்டுகளாக சிறுகச் சிறுகத் தரப்பட்ட வசனங்களை ஒட்டுமொத்தக் கோர்வை யாக்கி, முழு குர்ஆனாக நம்மிடம் தந்திருக் கிறார்கள்  நபிகளார் அவர்கள்.

இரண்டை விட்டுச் செல்கிறேன்

""""நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கி றேன்... அவற்றைப் பற்றிப் பிடிக் கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள்... அவை: அல்லாஹ்வின் வேதமும், எனது வழிமுறையும்"" என்று நபிகளார் கூறினார்களே...? அதில் முதலாவதான குர்ஆன் வசனங்கள் மீது யாரும் எந்தச் சந்தேகமும் எழுப்புவதில்லை. காரணம், அந்த வசனங்கள் எவ்வித மாற்றமும் இன்றி நம்மிடம் அப்படியே தரப் பட்டி ருக்கிறது.

கலீஃபாக்கள் ஆட்சி

ஆனால், நபிகளாரின் வாழ் வியல் வழிமுறைகள் அப்படி யல்ல. நபிகளார் வாழ்ந்த காலத்தில், அவர்க ளோடிருந்த நபித் தோழர்கள் நபிகளாரி டமிருந்து கேட்டவற்றை உடனுக் குடன் பின்பற்றி வந்தனர். உள்ளங்களில் எழுந்த சந்தேகங்களை உடனுக்குடன் நபிகளாரிடம் கேட்டுத் தெளிவு பெற்று, அவற்றைக் கடைப் பிடித்தொழுகினர். நபிகளாருக்குப் பிறகு வந்த கலீஃபாக்கள் ஆட்சி வந்தது. அவர்கள் நபிகளாரிடம் தாம் கண்டவை, கேட்டவை ஆகியவற்றைக் கொண்டும், நபிகளாரைத் தொடர்புபடுத்தி - அந்நேரத்தில் வாழ்ந்த நபித் தோழர்கள் கூறிவற்றைக் கொண்டும் அவர்கள் ஆட்சி செய்தனர்.

இமாம்கள் காலம்

அவர்களுக்குப் பிறகு காலம் செல்லச்செல்ல, இஸ் லாமிய ஆட்சி மதீனாவி லிருந்து மக்காவிற்கும், பின்னர் முழு அரபகத்திற்கும் பரவி, மத்திய ஆசியா முழுக்க அரபு சாம்ராஜ்யம் பரவி, பின்னர் அய்ரோப்பாவிற்குள் சென்று விரிந்து, அங்கிருந்து ஆசியாவிற்குள் வந்து, அங்கிருந்து ஆப்பிரிக்கா விற்குப் போய், அங்கிருந்து சீனா எல்லை வரை என உலகெங்கும் பரவிவிட்டது. இப்படியாக இஸ்லாமிய ஆட்சி உலகெங்கும் பரவிய நேரத்தில்தான், இஸ்லாமிய ஆட்சியின் சட்டதிட்டங்கள், ஒழுங்குமுறைகள் என்னென்ன என்ற கேள்வி பரவலாகத் தோன்றிய நேரத்தில் இமாம்கள் களத்திற்குள் வருகிறார்கள். அவர்கள்தான் நபி மொழிகளை யெல்லாம் பல்வேறு சிரமங்களுக் கிடையே நீண்ட தொலைவு களுக்கு அன்றாடம் பயணித்து, தேடித் தொகுத்து, அவற் றைப் பகுத்தாய்ந்து, சட்ட திட்
ட ங்களை வகுத்தளிக்கிறார்கள்.

இமாம் அபூஹனீஃபா

அப்படி ஒப்புக் கொள் ளப்பட்ட நான்கு முதன்மை இமாம்களுள் அபூஹனீஃபா இமாம் அவர்களுக்கு உயர்ந்த இடத்தை முஸ்லிம் உலகம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இமாம் அவர்கள் திருமறை குர்ஆனுக்கோ அல்லது நபிமொழிகளுக்கோ விளக்கம் கூறும்போது அவர்களது மாணவர்கள் 40 பேர் அந்த அமர்வில் இருப்பார்களாம். அவர்கள் அனைவரும் ஏகோபித்து ஒப்புக்கொண்ட பிறகே இமாம் அவர்களின் ஒரு கருத்து வெளியிடப்படுமாம். 39 பேர் சரிகண்டு, ஒருவர் மட்டும் ஒப்புக்கொள்ளாவிட்டால் - அந்த ஒருவரிடம் பேசி, விளக்கி, அவர்களும் ஒப்புக்கொண்ட பிறகே அக்கருத்து மக்கள் உலகிற்கு வெளிப் படுத்தப் படும். இப்படியாக நாம் படிக்கும்போது, அது மிகப்பெரிய வியப்பை நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற ஒன்றை உலகில் நாம் எங்குமே பார்த்ததில்லை; படித்ததுமில்லை.

தீர்ப்பு

இன்று பிரச்சினைக்குரிய ஒரு வழக்கிற்கு உச்ச நீதி மன்றத்தின் நீதிபதிகள் தீர்ப் பளித்தால் கூட அவர் களுள் ஓரிருவர் வேறு வகை யான தீர்ப்பளித்தாலும், பெரும் பான்மை நீதிபதிகளின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் ஒரேயொரு தீர்ப்பு உறுதிப் படுத்தப்படுகிறது. ஆனால், இமாம் அபூஹனீஃபா அவர்களின் 40 மாணவர்களுள் ஒரேயொருவர் வேறெங்காவது சென்றிருந்தாலும், அவர் வந்த பின் அவரிடம் அது குறித்து எடுத்துக் கூறி, அவரும் முழுமையாக அதை அங்கீகரித்த பின்னரே அது சட்டமாக வெளியுலகுக்கு அறிமுகப் படுத்தப்பட்ட வரலாறு நம்முடையது. அப்படியாக அவர்கள் சேர்த்துத் தந்த சட்ட திட்டங்களைத்தான், அவர்களுக்குப் பின் இறைநேசர்களும், இன்று வாழும் மக்களுக்கு மார்க்க அறிஞர்களான உலமாக்களும் எடுத்தியம்பிக் கொண்டிரு க்கிறார்கள். அதனால்தான் அவர்கள் பாராட்டுக் குரியவர் களாகின்றனர்.

1400 ஆண்டுகால வரலாறு

இஸ்லாம் மார்க்கம் 1400 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. ஆக, இஸ்லாமை இடையில் எங்கோ ஓரிடத்தில் மட்டும் கருத்தில் எடுத்துப் பார்க்கக் கூடாது. ஒட்டுமொத்த 1400 ஆண்டுகால வரலாற்றையும் ஒருங் கிணைத்தே இஸ்லாமைப் பார்க்க வேண்டும். சீனா தானா அவர்கள் கூறியதைப் போல, நிலையான ஸதக்கத்துன் ஜாரியா எனும் நன்மையில் கிணறு வெட்டுதல் போன்ற பொதுநலக் காரியங்களும், நமக்காகப் பிரார்த்திக்கும் நல்ல குழந்தைகளும் இரண்டு அம்சங்களாக இருந்தாலும், அவர் விட்டுச் சென்ற பயனுள்ள கல்வி அதில் முதன்மை இடத்தைப் பெறுகிறது. காரணம், ஞானவான்கள் விட்டுச் சென்ற கல்வியறிவை உட்கொள் பவர்கள் ஆயிரமாயிரம் கிணறுகளை வெட்டு வார்கள். அவர்களின் நன்மைகள் அனைத்தும் அந்த அறிவைப் புகட்டியவருக்குத்தானே செல்லும்? தம் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என இந்த மஹான்கள்தான் பாடம் புகட்டியிருக்கிறார்கள். அதைப் பின்பற்றி உலகிலுள்ள  தந்தையர் அனைவரும் தம் குழந்தைகளை நன்றாக வளர்த்து, அவர்கள் தம் தந்தை யருக்காகப் பிரார்த்திக்கும் நிலைக்குக் கொண்டு வந்தால், அதன் நன்மைகளையும் அந்தப் பாடத்தைப் புகட்டிய அறிஞர் பெருமகனார் பெறுகிறார். கிணறு வெட்டுபவரும், நல்ல பிள்ளையாக தம் மக்களை வளர்த்தெடுப்பவரும் தத்தம் செயல்களையே செய்கின்றனர். 

அனைத்திலும் சிறந்தது கல்விச்சேவை

ஆனால், ஆயிரமாயிரம் கிணறுகளை வெட்டவும், ஆயிரமாயிரம் தர்மங்களைச் செய்யவும், ஆயிரமாயிரம் மக்களை நல்லொழுக்க விழுமி யங்கள் அடிப் படையில் வளர்த் தெடுக்கவும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் தூண்டி யெழுப்புவது மார்க்க அறிஞர்கள் தரும் நூல்கள்தான். எனவேதான், அனைத்திலும் சிறந்த சேவையாக இவர்களின் கல்விச் சேவை பார்க்கப்படுகிறது.

திருமறை குர்ஆன்-தமிழாக்கம்

திருமறை குர்ஆனுக்கு முதல் தமிழாக்கத்தைத் தந்தது அ.கா.அப்துல் ஹமீத் பாக்கவீ அவர்கள்தான். சமுதாயப் புரவலர் ஜமால் முஹம்மத் ஸாஹிப் அவர்களின் குடும்பம் ஜமாலிய்யா அரபிக் கல்லூரி, திருச்சியிலுள்ள ஜமால் முஹம்மத் கல்லூரியின் அன்றைய அனாதை நிலைய வளாகத்தில் இயங்கிய இஸ்லாமிய அச்சகத்தின் மூலம்தான் அதன் அச்சுப்பணி நடை பெற்றிருக்கிறது. அதில், மவ்லானா அப்துல் காதிர் ஹஸ்ரத் அவர்களும் பணியாற்றியிருக்கிறார்கள். ஆக, திருக்குர்ஆனுக்கு முதல் தமிழாக்கத்தைத் தந்தது அ.கா.அப்துல் ஹமீத் பாக்கவீ அவர்கள். ஆனால், அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியது சொற்ப பகுதிக்குத்தான். தமிழில் முதல் விளக்கவுரையை முழுமையாகத் தந்தது எஸ்.எஸ்.அப்துல் காதிர் பாக்கவீ ஹஸ்ரத் அவர்கள்தான். அவர்களது அந்த விளக்கவுரைக்குப் பிறகுதான் தமிழகத்தில் பிறரது விளக்கவுரை களெல்லாம் வெளிவந்தன. 

ஜவாஹிருல் குர்ஆன்

ஆதம் ட்ரஸ்ட் சார்பில் அப்துர் ரஹ்மான் ஹஸ்ரத் அவர்கள், பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி யிலிருந்து வெளியான """"ஜவாஹிருல் குர்ஆன்"" போன்றவை முழுமை யாக வெளிவந்த திருக்குர்ஆன் விளக்கவுரைகள். அதற்குப் பிறகும் விளக்க வுரைகள் கொஞ்சங் கொஞ்சமாக வெளி வந்தன. இப்படி எத்தனையோ வெளிவந் திருந்தாலும்,  திருமறை குர்ஆனுக்கு முழு மையாக விளக்க வுரையைத் தமிழில் வழங்கிய பெருமை  வரலாற்றுப் பூர்வமாக இந்த மவ்லானா அவர்களுக்குத்தான் சாரும்.

அரசியல் அணுகுமுறை

தமிழகத்தில் அரசியலை எவ்வாறு அணுகுவது என்பதில் பெருங் குழப்பம் இருந்த நேரம். தலைவர் சிராஜுல் மில்லத் அவர்க ளோடு நாங்கள் பயணித்த காலகட்டங்களில் சில பல நேரங்களில் குழப்பத்தில் இருந்திருக் கிறோம். அத் தருணத்தில், தமிழகத்தில் அரசியலை அணுகு வதற்கான வழி காட்டலைக் கூட மவ்லானா அவர்களின் திருக்குர்ஆன் விளக்கவுரை யிலிருந்துதான் நாங்கள் பெற்றோம். அவர்களது விளக்கவுரையில் ஒரு பகுதியில் ஓர் உதாரணத்தைக் கதையாக எடுத்துரைக்கிறார்கள்:

ஒரு காட்டில் - சிங்கம், ஓநாய், நரி ஆகிய மூன்றும் வேட்டைக்குச் சென்றன. நிறைவில் ஒரு மாடு, ஒரு மான், ஒரு முயல் ஆகியன வேட்டைப் பிராணிகளாகக் கிடைத்தன. அவற்றை எப்படிப் பங்கிடுவது என்பது குறித்து ஆலோசனை தருமாறு சிங்க ராஜா கேட்க, """"நீங்க காட்டுக்கே ராஜா... எனவே மாட்டை நீங்க வச்சிக்கோங்க... நான் மானை எடுத்துக்கிறேன்... நரிக்கு முயலைக் கொடுப்போம்..."" என்றது ஓநாய். அடுத்த கணமே அதன் கன்னத்தில் பலமாக ஓர் அறையை விட்ட சிங்கம், அடுத்து நரியிடம் யோசனை கேட்டது. அதுவோ, """"நீங்கதானே காட்டுக்கே ராஜா...? உங்கள் உழைப்புதானே அதிகம்...? உங்களுக்குத்தானே நிறைய உணவு தேவைப்படும்...? எனவே, இந்த மாட்டை காலை உணவுக்கும், மானை மதிய உணவுக்கும், முயலை இரவு டிஃபனுக்கும் என நீங்களே மூன்றையும் வைத்துக் கொள்ளுங்கள்... இதுதான் நன்றாக இருக்கும்!"" என்று நரி சொல்ல, அதைக் கேட்ட சிங்கம் நரியைப் பாராட்டி, வேட்டைப் பிராணிகளி லிருந்து ஒரு பகுதியையும் அதற்கு வழங்கியது.

திராவிட முன்னேற்றக் கழகம்

இந்த உதாரணம்தான், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தொடர்ந்து தொய்வின்றி உறவோடு நாங்கள் இருப் பதற்கான முதன்மைக் காரணம். எப்படிப் பங்கு போடுவது என்று வரும்போது, பலரும் ஓநாய் சொன்னது போலச் சொல்லி, அடி வாங்கிச் சென்ற கதை தமிழகத்தில் நிறைய உண்டு. அப்படியான கதை நமக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இதனை நாங்கள் பின்பற்றிக் கொண் டிருக்கிறோம். இதை நான் வெளியில் சொன் னதில்லை. இப்போதுதான் சொல்கிறேன்.
இங்கு நான் கூற வருவது என்ன வெனில், திருமறை குர்ஆனின் கருத்துக் களையும், நபிகளாரின் பொன் மொழி களையும் முன் வைக்காமல் முஸ்லிம்கள் அரசியல் செய்ய இயலாது என்பதை உணர்த்துவதற் காகத்தான். அந்த வகையில், மவ்லானா அவர்களின் 
திருக்குர்ஆன் விளக்கவுரை

அரிசியலில் எங்களுக்கு வழிகாட்டிக் கொண்டி ருக்கிறது.

திருக்குர்ஆனின் திருவசனங்கள்

இதோ இங்கே சீனா தானா அவர்கள் இருக் கிறார்கள். """"என்னைக் கவர்ந்த திருக்குர் ஆனின் திருவசனங்கள்"" எனும் தலைப்பில் அவர் ஒரு நூலைத் தந்திருக்கிறார். அதை நானும் படித்திருக்கிறேன். அதன் மூலம் நான் பெற்ற பலன் ஒன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

38 முஸ்லிம் உறுப் பினர்கள்

நான் வேலூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, என்னையும் சேர்த்து 38 முஸ்லிம் உறுப் பினர்கள் நாடாளு மன்றத்தில் இருந்தோம். இ.அஹ்மத் ஸாஹிப் அவர்களின் தலை மையில் எங்கள் அனைவரின் கூட்டம் ஒன்று நடக்கவிருக்க, அவர்கள் வர இயலாமற்போன நிலையில் என் தலைமையில் ஹைதராபாத்தில் இருக்கும் அஸதுத்தீன் உவைஸி அவர்களது இல்லத்தில் அக்கூட்டம் நடைபெற்றது.

64 துறைகள்

மத்திய அரசாங்கத்தில், க்ஷஊ, ளுஊ, றுடிஅநn யனே ஊhடைனசநn, டுயbடிரச என பலதரப்பட்ட மக்களுக்கும் என மொத்தம் 64 துறைகள் உள்ளன. ஆனால், முஸ்லிம்களையும் உள்ளடக்கிய மைனாரிட்டி மக்களுக்கென ஒரு துறை கூட இல்லை. எனவே, அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் சென்று நாம் இதுகுறித்து கோரிக்கை வைப்போம் என்று பேசி முடிவெடுக்கப்பட்டு, அதன்படி பிரதமரிடம் நேரம் கேட்டு, அவரும் நேரம் தந்தார். நாங்கள் 38 பேரும் அவரைச் சந்திக்கச் சென்றோம். மிகக் குறைந்த நேரமே தரப் பட்டிருந்ததால், எல்லோரும் பேசத் தேவையில்லை என்றும், நம் அனைவரின் சார்பில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் என இருவர் மட்டும் பேசலாம் என்றும் தீர்மானித்து உள்ளே சென்றோம்.

சொந்த தொகுதி பிரச்சினைகள்

கூட்டம் துவங்கியது. உ.பி.யைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர், நமது கோரிக்கையை முன் வைப்பார் என்று பார்த்தால், அவர் தொகுதி யிலுள்ள பிரச்சினைகளை முன்வைத்து பத்து நிமிடங்களுக்கும் மேல் பேசி முடித்துவிட்டார். சரி... மஹாராஷ்டிராவைச் சேர்ந்த உறுப்பினராவது நம் கோரிக்கையை முன்வைப்பார் என்று பார்த்தால், அவர் முந்தையவருக்குச் சளைத் தவரல்ல என்பதைப் போல அவர் தொகுதிப் பிரச்சினை களை முன்வைத்து அவர் ஒரு பத்து நிமிடம் பேசினார். ஆக, நேரமே கிடைப்பது அரிது என்ற நிலையிலுள்ள பிரதமர் சந்திப்பில் இருபது நிமிடங்கள் இப்படி வீணாகக் கடந்தது. அத்தனைக்கும் பிறகு, ஏதோ நினைவுக்கு வந்தவராக நமது கோரிக்கை குறித்தும் கடைசியில் இரண்டு நிமிடங்கள் பேசினார். பிரதமரோ முதல் இருபது நிமிட உரையால் சலிப்புற்று, முக்கியமான கோரிக்கையைக் கடைசியாகக் கேட்டதால், """"லுடிர மnடிற...? ழடிற ளை வை யீடிளளiடெந? றுந hயஎந வடி வாiமே வை டிஎநச"" என்று சொல்லிவிட்டார். அத்துடன் அந்தச் சந்திப்பு முடிந்து போனது. பல நாட்கள் சிந்தித்து, பல்வேறு அலுவல்களுக்கிடையில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஓரிடத்தில் அமர்ந்து எடுத்த முடிவின் படியான கோரிக்கை ஒன்றுமில்லாமல் போனது.

அல்ஃ பாத்திஹா அத்தியாயம்

வெளியில் வந்தபோது, நான் உவைஸி அவர்களிடம் சொன்னேன்... """"ஹளயனரனனநநn! றுந’எந னடிநே ய பசநயவ டெரனேநச - நாம் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டோம்..."" என்று. அவர் என்ன என்று கேட்க, """"ஒரு பெரிய காரியத்தைச் சாதிக்கச் செல்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என எங்கள் ஊரில் உள்ள உலமாக்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள்... எந்த ஒரு காரியத்தைச் சாதிக்கவும் யாரையாவது நாடிச் சென்றால், முதலில் அவரிடமுள்ள நல்லவற்றைப் புகழ்ந்துரைப்பது... பின்னர் அவரிடம் - உங்களை விட்டால் எங்களுக்கு வேறு கதியே இல்லை என்று கூறுவது கடைசியாகவே கோரிக்கையை முன் வைப்பது என்பதே அந்த வழிகாட்டல். இதற்கு திருக்குர்ஆனின் அல்ஃ பாத்திஹா அத்தியாயம்தான் சான்று. அதில் முதற்பகுதி இறைவனைப் புகழ்ந்தும், இரண்டாம் பகுதி அவனிடம் சரணாகதியாகியும், மூன்றாம் பகுதி கோரிக்கையை முன் வைத்தும் அமைந்திருக்கிறது... அந்த முறையைப் பேணினால் காரியத்தைச் சாதிக்கலாம்"" என்றேன். இந்த வழிகாட்டலை நான் வேறெங்கும் பெறவில்லை. """"என்னைக் கவர்ந்த திருக்குர்ஆனின் திருவசனங்கள்"" என்ற சீனா தானா அவர்களின் நூலிலிருந்துதான் பெற்றேன்.

இதை உவைஸியிடம் சொன்னதைக் கேட்டதும் அவர், """"றுhல னனைn’வ லடிர வடிடன அந வாளை நயசடநைச? றுhயவ ய றசடிபே றந’எந னடிநே? ஹலேறயல, டிம யடாயஅனர டடைடயா"" என்று அங்கலாய்த்துக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் அடுத்த பதினைந்து நாட்களுக்குப் பிறகு அதே 38 பேரைக் கொண்ட இன்னொரு கூட்டம் அதே உவைஸி வீட்டில் நடத்தப்பட்டது. ஹைதராபாத் பிரியாணி யையும் சாப்பிட்டுவிட்டு மாலையில் கூட்டம்  நடத்தி னோம். கூட்ட அரங்கிற்குள் நுழையுமுன், உவைஸியிடம், """"மீண்டும் அவங்களையே பேசச் சொல்லுங்கள்! ஆனால் இப்படி இப்படி முறையைக் கையாளச் சொல்லுங்கள்!"" என்று கூறினேன். அதன்படி பிரதமர் சந்திப்பும் நடை பெற்றது. அவரிடம் பேசத் துவங்கியதுமே, """"டாக்டர்! நீங்களும் சிறுபான்மை யினத்தின் பிரதிநிதி... நாங்களும் சிறுபான்மை யினத்தின் பிரதிநிதிகள்தான்... நீங்கள் சிறுபான்மை யினத்தின் பிரதிநிதியாக இருந்த போதிலும், உங்கள் அரசு நிர்வாகம் அனைத்துத் தரப்பி னராலும் பாராட்டப் படும் அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது... இதை நினைத்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி யடைகிறோம்... அண்மையில் நமது இந்தி யாவைப் பிரதிநிதித்து வப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் நீங்கள் ஆற்றிய உரை நம் நாட்டிற்குப் பல நன்மைகளைத் தரவல்லது... இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்..."" என் றெல்லாம் புகழ்ந்துவிட்டு, """"இந்த நாட்டிலுள்ள எல்லோ ருக்கும் நல்லது செய்திருக் கிறீர்கள்... எங்களைப் பற்றியும் கொஞ்சம் கவலைப் பட்டால் என்ன என்று கேட்கவே நாங்கள் இங்கே வந்தோம்... 

சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை

""""கூhடிரபா றந’எந படிவ 64 னநயீயசவஅநவேள in வாந ஊநவேசந, றந னடிn’வ hயஎந ய னநயீயசவஅநவே கடிச ஆinடிசவைல ஹககயசைள... மத்தியில் 64 துறைகள் இருக்கின்ற போதிலும், சிறுபான்மை யினர் விவகாரத்தைக் கவனிக்கவென ஒரு துறை இல்லை... மொழி, மதம், பிராந்தியம் எனப் பல வகைகளிலுள்ள சிறுபான்மை யினருக்கு, அவர்களின் விவகாரங்களைத் தனிக்கவனத்துடன் எடுத்துத் தீர்வளிக்க ஒரு துறையை அமைக்கலாமே...?"" என்று பிரதமரிடம் கேட்டோம். மொத்தமே 15 நிமிடங்கள்தான் பேசினோம் என்றாலும், எங்கள் பேச்சுவார்த்தையின் முறை இப்படித்தான் இருந்தது. அனைத்தையும் கேட்ட பிரதமர், """"லுநள, வை ளை ய எநசல படிடின னைநய! றுந’டட னடி வை!"" என்று அவர் சொன்ன அடுத்த வாரமே இந்திய அரசாங்கத்தில் ஆinடிசவைல ஹககயசைள துறை துவக்கப்பட்டு, ஏ.ஆர்.அந்துலே அத்துறைக்கான அமைச் சராகவும் நியமிக்கப்பட்டார்.

ஞானப் பெட்டகம்

இதை நான் இங்கே குறிப்பிட்டுக் கூறக் காரணம், திருக்குர்ஆனும் - நபிமொழி களும் வெறுமனே வீட்டில் அமர்ந்து படிப்பதற்காக மட்டும் என்று யாரேனும் கருதினால் அது தவறு. அவை மனித வாழ்க்கையின் அனைத்துச் சூழல்களுக்கும் வழிகாட்டு வதற்காகத் தரப்பட்ட ஞானப் பெட்டகம். அப்படிப் பட்ட ஞானப் பெட்டகத்தை உணர்த்த வேண்டிய முறையில் உணர்த்திய பெருமை அல்லாமா அவர்களுக்குண்டு. அதைத் தொடர்ந்துதான் சீனா தானா போன்றவர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே சில முக்கியமான தகவல் களைச் சொல்லி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.

திருக்குர்ஆனுக்கு மாற்ற மாக ஹதீஸ்கள் இல்லை. அப்படி இருப்பதாகத் தென் பட்டால் அவை ஸஹீஹானவை அல்ல என்று பிரித்திருக்கிறார்கள் வல்லுநர்கள். குர்ஆனில் சொல்லப் பட்டவற்றைப் பின்பற்று வதற்கும், ஹதீஸில் சொல்ல ப்பட்டவற்றைப் பின்பற்று வதற்கும் அடிப் படையிலேயே ஒரு மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. குர்ஆனில் சொல்லப் பட்டுள்ள சட்டதிட்டங்கள் எல்லாக் காலத்திற்கும், எல்லோருக்கும் பொருந்தும். அதற்குக் கால நிர்ணயமெல்லாம் கிடையாது. ஆனால், ஹதீஸில் வரும் சட்டதிட்டங்கள் என்பது அப்படியல்ல! அந்தந்தக் காலத்தில், அந்தந்தத் தரப் பினருக்குச் சொல்லப் பட்ட தனிச் சட்டங்களும், அறிவுறுத்தல்களும் உள்ளன. எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் அறிவுரைகளும், சட்டங்களும் உள்ளன. இங்கே நான் கூற வருவது, திருக்குர்ஆனைப் போல எல்லாக் காலத்திற்கும், எல்லாச் சூழலுக்கும் பொதுவான சட்டதிட்டங்களா என்பது குறித்து சிந்தையில் எடுக்க வேண்டியிருக்கிறது.

முத்தலாக் தடை சட்டம்

நம் நாட்டில் முத்தலாக் தடைச் சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அல்லாஹ் வின் திருக்குர்ஆனில் - இந்த நாட்டில் பின்பற்றப்பட்டு வந்த முத்தலாக் நடைமுறை என்பது இல்லை. ஹதீஸில் உள்ள வழிகாட்டல் அடிப்படையில் அதை நாம் நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறோம். ஆனால், உச்ச நீதிமன்றமோ - """"குர்ஆனில் இல்லாத ஒன்றை நீங்கள் ஏன் பின்பற்ற வேண்டும்?"" என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு நம் நிலை வந்திருக்கிறது.
இந்த இடத்தில்தான் உலமாக்களாகிய உங்களிடம் ஒரு சிந்தனையை நான் பணிவுடன் முன்வைக்க விரும்புகிறேன்... இந்தியாவில் முத்தலாக் நடைமுறையை நாம் எதிர்த்துக் கொண்டிரு க்கிறோம். ஆனால் பாகிஸ்தானில் உள்ள உலமாக்கள் சபை முத்தலாக் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று கூறியிருக்கிறது. இப்படி யாக, பல்வேறு முஸ்லிம் நாடுகளைப் பார்த்தால் இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்கள் என நாம் பின்பற்றுவது ஒன்றாகவும், அவர்கள் பின்பற்றுவது வேறொன்றாகவும் இருந்து கொண்டி ருக்கிறது. இந்த முரண் தவிர்க்கப்பட வேண்டி யது காலத்தின்  கட்டாயம்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்

இந்தியாவில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் - ஹடட ஐனேயை ஆரளடiஅ ஞநசளடியேட டுயற க்ஷடியசன என்று வைத்தி ருக்கிறோம். மற்ற நாடுகளில் அவரவருக்கென தனித்தனி வாரியங்கள் இருக்கும். உலக முஸ்லிம்கள் அனைவ ருக்குமே திருக்குர்ஆன் ஒன்றுதான். நபிமொழிகளும் பொது வானவைதான். இஸ்லாம் மார்க்கம் இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. உலகம் முழுமைக்குமானது. ஆனால், சட்டங்களை மட்டும் ஆளுக்கொன்றாக வைத்துக் கொண்டிருக்கிறோமே...? இதில் நமக்குள் தெளிவான - ஒரே நடைமுறை இருக்க வேண்டாமா? இன்றிருக்கும் நிலையிலேயே நாம் இருந்தோமானால் இஸ்லாமிய சட்டதிட்டங்களின்  நிலை என்னவாகும் என்பது நம் முன் உள்ள மிகப்பெரிய கேள்வி. இதற்கு விடிவு என்ன என்பதைத்தான் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
கிலாபத் அரசாங்கம்

உலக முஸ்லிம்களை ஒருங்கிணைத்து ஒரு காலத்தில் கிலாஃபத் அரசாங்கம் இருந்தது. உலகே ஒரு கொடியின் கீழிருந்தது. இப்பொழுது அதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டிய அவசிய மில்லை. உலகம் முழு வதும் முஸ்லிம்கள் ஆட்சியதி காரத்தால் ஓரணியில் வர யோசிக்க வேண்டிய தில்லை. 

சர்வதேச முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்

நாம் தீர்க்கமாகச் சிந்தையில் கொள்ள வேண்டியது என்ன வென்றால், இந்தியாவில் """"அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்"" என்று அமைப்பு இருப்பதைப் போல, மற்ற நாடுகளில் அவரவருக்கென இதுபோன்ற அமைப்புகள் இருப்பதைப் போல, ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களுக்கும் என உலகளவிலான மார்க்க அறிஞர் பெருமக்களைக் கொண்ட ஐவேநசயேவiடியேட ஆரளடiஅ ஞநசளடியேட டுயற க்ஷடியசன - சர்வதேச முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் என்று ஓர் அமைப்பை ஏன் துவக்கக் கூடாது என்பதைத்தான்.

இந்த மிகப்பெரிய கேள்வியை அறிஞர்களும், உலமாக்களும் வீற்றிருக்கும் இந்த மேடையில் முன் வைப்பது பொருத்தம் எனக் கருதுகிறேன். இந்தச் சிந்தனை நீண்ட காலமாக என்னுள் இருக்கிறது. பல்வேறு இடங்களில் அதை வெளிப் படுத்த நினைத்து, பின்னர் தயங்கி விட்டிருக் கிறேன். ஆனால், இந்த மேடை அதை முன் வைக்கப் பொருத்தமான இடம் என்பதால் முன்வைத்து விட்டேன். இது குறித்துச் சிந்தித்து முடிவுக்கு வர வேண் டியது காலத்தின் கட்டாயம். அரசியல் ரீதியாகவோ, சஊதி அரபிய்யா நாடு சொன்னதைப் போல ராணுவ ரீதியாகவோ ஒன்றிணையச் சொன்னால் அதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என்று கூறுவதை விட, அதை வெறுப்போடுதான் பார்ப்பர். ஆனால், முஸ்லிம் உலகிலுள்ள மார்க்க அறிஞர்கள் சர்வதேச முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தை அமைத்து, அதில் அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக அமர்த்தி, முஸ்லிம் சமுதாயம் மார்க்க ரீதியாக எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் குறித்துக் கலந்தாலோசித்து முடிவு சொல்லும் அளவுக்கோ அல்லது கருத்தையாவது தெரிவிக்கும் அளவுக்கோ ஆயத்தப்பட வேண்டும். இந்தக் கருத்தைச் சிந்தையில் ஏற்றி, இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதும், உலக மக்களுக்குச் சொல்ல வேண்டி யதும் அறிஞர் பெருமக்களின் கடமையாகும்.

இப்படியான ஒரு வாரியம்  அமைந்திட உலகில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை. அப்படியொன்று அமைந்தால், எப்படி அபூஹனீஃபா இமாம் அவர்கள் தன்னிடமுள்ள 40 மாணவர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் சட்டங்களை முன்வைத்து முக்கியத்துவம் பெற்றார்களோ அதுபோல, உலக முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாக மார்க்க அறிஞர்கள் அனை வரும் அமர்ந்து சொல்லும் கருத்துக்களுக்கு உலக முஸ்லிம் சமுதாயம் செவிசாய்க்கும் என்பதில் எள்ளளவும் சந்தேக மில்லை.

அதிவேகமாக பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்

இஸ்லாம் இன்று அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பா என உலகம் முழுக்க வேகமாகப் பரவி வரும் மார்க்கம் - குயளவநளவ பசடிறiபே சநடபைiடிn என்று சொல்லப் படுகிறது. இஸ்லாமிய மார்க்கச் சட்டங்கள், வழிகாட்டல்கள், விழுமியங்கள் இன்று உலக மக்கள் அனைவராலும் ஆர்வத் தோடு பார்க்கப்படுகிறது. உலக அறிஞர்கள் அனைவராலும் பெரிதும் விரும்பப்படுகிறது.

பாரிஸ் நகரில் மட்டும் 636 பள்ளிவாசல்கள்

நாவலர் ஏ.எம்.யூஸுஃப் அவர்களின் தம்பி ஃப்ரான்ஸ் நாட்டில் இருக்கிறார். அவர் மகளது திருமணத்திற்கு அழைப்பு விடுக்க அண் மையில் வந்தார். பத்து ஆண்டு களுக்கு முன்பு வந்தவர் அடுத்து இப்போதுதான் ஆறு மாதங்களுக்கு முன் வந்துள்ளார். """"பாரிஸில் எத்தனை பள்ளிவாசல்கள் உள்ளன?"" என அன்று அவரி டம் கேட்டபோது, ஏழெட்டு இருப்பதாக அப்போது கூறினார். இப்போது அவர் வந்த இடத்தில் அதே கேள்வியை நான் கேட்டபோது, 636 பள்ளி வாசல்கள் இருப்ப தாகக் கூறினார். """"அவ்வளவு பள்ளிவாசல்கள் எப்படி வந்தன தம்பீ?"" என்று நான் கேட்டபோது, """"கிறிஸ்து வர்கள் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த வழிபாட்டுத் தலங்களை யெல்லாம் விட்டு விட்டுச் சென்றுb காண்டிருக் கிறார்கள்... அங்கு வழிபாடுகள்  செய்வதற்கு இப்போத