முக்கிய செய்தி

புத்தாநத்தத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேட்டி

புத்தாநத்தத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேட்டி
ள திராவிட கொள்கைகளில் தெளிவாக இருப்பது தி.மு.க.
ள உள்ளாட்சி தேர்தல் என்ற அம்சத்தையே அ.தி.மு.க. கேலியாக்கியுள்ளது
ள ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையும், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையும் அடிப்படையில் வேறுபட்டவை
இந்துத்துவாவை கைவிட மாட்டோம் என்று கூறியிருப்பதை வைத்துக்கொண்டு சிவசேனை கூட்டணி ஆட்சியை நாம் கற்பனையாக எதுவும் கூறமுடியாது; பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
புத்தாநத்தத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேட்டி

திருச்சி, டிச. 05
மணிச்சுடர் ஊடகவிய லாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது தயார் மர்ஹூம் ஹாஜியானி உம்ம ஹபீபா ஓர்ஆண்டு நினைவு தினத்தையொட்டி து ஆ மஜ்லிஸ் அவரது ஊரான புத்தாநத்தத்தில் உள்ள அவரது இல்லத்தில் (03-12-2019) செவ்வாய்க்கிழமை நண்பகல் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பங்கேற்க வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறிய தாவது:-

உம்ரா புனிதப் பயணம்

இந்தப் புத்தானத்தத்தில், ‘மணிச்சுடர்’ செய்தியாளர் தம்பி ஷாஹுல் ஹமீதின் தாயார் மறைவை நினைவு கூரும் முதலாமாண்டு ஃபாத்தி ஹா நிகழ்ச்சியில் பங்கேற் பதற்காகவும், அவர் உம்ரா புனிதப் பயணம் செல்வதால் அவரை வழியனுப்பி வைப் பதற்காகவும் இங்கு வந்தோம். அப்படி வந்த இடத்தில் உங்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த நேரத்தில் கடமையுணர்வோடு வந்திருக்கும் ஊடக நண்பர் களாகிய உங்கள் அனை வருக் கும் முதற்கண் எனது நன் றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

மணி மார்க் குடை

மதுரையை உற்பத்தி மைய மாகக் கொண்டு இயங் குகிறது கனி ஹாஜியார் அவர்களின் மணி மார்க் குடை நிறுவனம். தமிழகத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரே குடை நிறுவனம் இதுதான். மற்றவை எல்லாம் பிற பகுதிகளிலிருந்து உற்பத்தியாகி, தமிழகத்திலும் விற்பனைக்கு வருபவை. தமிழகத்தில் பள்ளி மாணவ - மாணவியருக்கு பல்வேறு பயன்பாட்டுப் பொருட்கள் அன்பளிப்பாக தமிழக அரசால்  வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள் நலனில் பொதுமக்களும் பங்களிப்புச் செய்ய முன்வர வேண்டும் என தமிழக கல்வி அமைச் சர் வேண்டுகோள் விடுத் திருக்கிறார். உடல் நலன் குறித்து அனைவரும் அதிகம் விழிப்புணர்வோடு செயல் படும் இக்காலத்தில், மழை - கொடும் வெயிலை விட்டும் தற்காத்துக் கொள் வதற்காக இந்த மாணவ - மாண வியருக்குக் குடையையும் - இந்த மணி மார்க் நிறுவனம் அல்லது தமிழக அரசு விரும்பும் வேறு நிறுவனங்களில் கொள்முதல் செய்து கொடுக்கலாம்.

உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருவதை நாம் அறிவோம். உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான வழக்கு இம்மாதம் 05ஆம் நாளன்று அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தால் எடுக்கப் படவிருக்கிறது. தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்த லுக்குத் தடை கோரி திமுக வழக்குத் தொடுத்துள்ளதாக ஆளும் அதிமுக ஒருபுறம் கூறுகிறது. மறுபுறம் திமுகவோ -""""ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சட்டம் இருந்தும், மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் வரையிலும் இத்தேர்தலை நடத்தாமல் இருந்தது நாங்களா அல்லது நீங்களா?"" என்றும், """"நாங்கள் ஆட்சியி லிருந்தபோது அந்தந்தக் காலகட்டங்கள் உள்ளாட்சித் தேர்தலை முறைப்படி நடத்தினோமா, இல்லையா?"" என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இவ் விரண்டிலும் உள்ள உண்மைத் தன்மை என்னவென பாரபட்ச மின்றியும், பக்கசார் பின்றியும் சிந்திக்கும் பொதுமக்களும், ஊடகவிய லாளர்களும் நன்கறிவர். மொத்தத்தில், உள்ளாட்சித் தேர்தல் என்ற அம்சத்தையே ஆளும் அதிமுக கேலிக்குரியதாக்கியிருக்கிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இதை எளிதில் மன்னிக்க மாட்டார்கள்.

70 ஆண்டுகால வரலாற்றில்...

இதோ அறிவிப்பார்கள், அதோ அறிவிப்பார்கள் என்ற பொதுமக்களின் எதிர் பார்ப்பு களுக்கிடையே - கிராமங்களைக் களமாகக் கொண்ட ஊராட்சிகளுக்கு மட்டும் தற்போது தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். ஊராட்சி உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய செயலாளர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், அதன் தலைவர் என இவர்களை மட்டும் தேர்ந்தெடுப்பதற்கான தேர் தலையே அறிவித் திருக்கின்றனர். ஆனால் - பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தேர்தலை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விட்டனர். தமிழகத்தின் சுமார் 70 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்தும் ஒரே தவணையில் நடத்தி முடிக்கப்பட்டிருக்க, அந்த வழமைக்கு மாற்றமாக தற்போது பிரித்து ஒரு பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தலை அறி வித்திருப்பது உண்மை யிலேயே தேர்தலை  நடத்து வதற்குத்தானா அல்லது இதிலுள்ள அவநம்பி க்கையால் யாராவது தடை கோர மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பிலா என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. மொத்தத்தில், தனது தவறை மறைப்பதற்கு எதிர்க்கட்சிகள் மீது முந்திக்கொண்டு பழி போடுகிறது ஆளுங்கட்சி என்பதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கருத்தாகும்.

கேள்வி: அறிவிக்கப்பட்ட படி, ஊராட்சி அமைப்பு களுக்கு மட்டும் தேர்தல் நடந்தால் அதில் பங்கேற்பது குறித்த இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் நிலைப்பாடு என்ன?
பதில்: நாங்கள் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கி றோம். தேர்தல் முறைப்படி நடந்தால் அதில் பங்கேற்பது அரசியல் கட்சிகளின் ஜன நாயகக் கடமை. எனவே நாங்களும் அக்கடமையை உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் நூறு சதவிகிதம் களம் காண்போம், உழைப்போம், வெற்றி பெறுவோம். இதில் இருவேறு கருத்திற் கிடமில்லை. தேர் தலைப் புறக்கணிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருபோதும் சொன்னதில்லை.

இடஒதுக்கீடு

ஆனால், ஏன் உள் ளாட்சித் தேர்தலை இத் தனை ஆண்டு காலமாக நடத் தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தீர்கள்? நீதிமன்றத்தின் வாயை அடைப் பதற்காகத்தானே """"தேர்தலை நடத்துவோம்"" என நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தீர்கள்? அதன் பிறகு இப்போதுதானே ஒரு பகுதிக்கு மட்டும் தேர்தலை அறிவித் திருக்கிறீர்கள்? அதையாவது முறைப்படியான ஏற்பாடுகளுக்குப் பின் அறிவித்தி ருக்கிறீர்களா என்பதுதான் நாங்கள் கேட்க விரும்புவது. இத்தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வரையறுத்து அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் ளுஊ,ளுகூக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என சட் டம் கூறுகிறபோதிலும், இது வரை அந்த ஒதுக்கீட்டைச் செய்யாமல் தேர்தலை அறிவித் திருப்பது ஏன்?

9 மாவட்டங்கள்

மாவட்டப் பஞ்சாயத்துத் தேர்தலை நடத்தப் போவதாக அறிவித் திருக்கிறீர்கள். ஆனால், அண்மையில் ஒன்பது மாவட்டங்களைப் பிரித்து அறிவித்துள்ள நீங்கள் - இந்தப் புதிய மாவட்ட அமைப்புகளின் படி எந்தெந்த மாவட்ட ங்களுக்கு என்னென்ன அளவுகோல் படி தேர்தலை நடத்தப் போகிறீர்கள் என்று கூற வேண்டுமா, கூடாதா? 32 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப் போவதாகக் கூறியிருக்கிறீர்கள். ஆனால், இப்போது 37 மாவட்டங்களாகி விட்டனவே? கூடுதலான அந்த 5 மாவட்டங்களின் நிலை என்ன?

குழப்பங்களின் மொத்த உருவம்

ஆக, குழப்பங்களின் மொத்த உருவமாகவே தமிழக அரசின் இந்தத் தேர்தல் அறிவிப்பும், இதர அறிவிப்பு களும் இருந்து கொண்டிருக்கின்றன. மொத்தத்தில், இந்த ஒரு பகுதிக்கான தேர் தலைக் கூட அறிவித்த படி நடத்துவார்களா, மாட்டார் களா என்ற சந்தேகம் பொது மக்களிடையே மிக அழுத்தமாக இருந்து கொண்டிருக்கிறது. இதற் கான தெளிவான முடிவு இம்மாதம் 05ஆம் நாளன்று நீதிமன்றம் மூலம் கிடைக்கும். அப்படி கிடைக்கப் பெற்று, தேர்தலும் நடந்தால் நாங்கள் கண்டிப்பாகப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இதில் எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

கேள்வி: திமுக தலைமையிலான கூட்டணி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் உள்ளது. ஆனால், திமுக தலைவரோ - இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் உத்தவ் தாக்கரே உடைய பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ளாரே? இது குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்துத்துவாவையே கொள்கையாகக் கொண்ட பாஜகவும், சிவசேனா கட்சியும் இத்தனைக் காலமாகக் கூட்டணியில் இருந்தன. எதிர்க்கட்சிகளின் வேலையே ஆளுங்கட்சிகளின் கூட்டணியை உடைப்பதுதான். அதன்படி, தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொள்கையால் ஒன்றுபட்ட இரண்டு கட்சிகள் ஒரே கூட்டணியில் அங்கம் வகித்துப் பயணித்திருக்க, அது தற்போது உடைக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி களோடு சிவசேனா - குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப் படையில் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்தக் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இந்துத்துவ செயல்திட்டம் இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் உத்தவ் தாக்கரே இந்துத்துவத்திற்கு ஆதரவாகக் கூறியிருப்பது சிலரைச் சமாளிப்பதற்காக இருக் கலாம்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை

சில நாட்களுக்கு முன் கலைஞர் டீவியில் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டபோது நான் சொன்னது, பாஜக -சிவசேனா கூட்டணி உடைக்கப் பட்டிருக்கிறது... இதை நான் வரவேற்கிறேன்... இத்தோடு நின்றுவிடாமல், சிவசேனா - இந்திய தேசிய காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி கண்டு ஆட்சியமை த்திருப்பது ஜனநாயகத்தைப் பாதுகாப் பதற்கான நடவடிக்கை என்று நம்புகிறோம்... இம்முயற்சி தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம். அடுத்து, குறைந்தபட்ச செயல் திட் டத்தை அவர்கள் அறிவித் திருக்கிறார்கள்... மராட்டிய மக்க ளுக்கான சேவைகள் என் னென்ன என்பன குறித் தெல்லாம் அதில் கூறியிருக் கிறார்கள்...

ஒரு பெரிய மாற்றம்

சிவசேனா தமிழர்களுக்கு எதிராகத்தான் உருவானது. பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராகத் தன்னை ஆக்கிக் கொண்டது... பிறகு, மராட்டி யத்தில் எங்களைத் தவிர வேறு எவரும் இருக்கக் கூடாது என்ற மூன்றாவது படிக்குச் சென்றது... பின்பு, வேறு யாரும் இருக்கவே கூடாது என்பதை விட -இந்துத்துவவாதிகள் மட்டும் இருக்கலாம் என்ற நிலைக்குச் சென்றனர்... இப்படியாகப் பரிணாமம் எடுத்துவந்த கட்சி இன்று அதிலிருந்து ஒரு பெரிய மாற்றத்திற்குள் வந்திருக்கிறது என்றால், இன்னும் அது படிப்படியாக தன்னை மாற்றிக் கொள்ளும் என்று நம்புகிறோம், எதிர் பார்க்கிறோம். எது வானாலும், குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கூட்டணி - அடுத்த ஆறு மாத காலத்திற்கு அதன் செயல்பாடுகளை முழுமையாக அவதானித்து அறிந்த பின்பு கருத்துச் சொல்வதே சரியாக இருக்கும் என்று கருதுகிறோம்.

கேள்வி: """"இந்துத்து வாவைக் கைவிட மாட்டோம்!"" என வெளிப் படையாகவும், நேரடியாகவும், பதவியேற்ற வுடனும் சட்டமன்றத்திலேயே கூறியிருக்கிறார்களே...? இந்துத்துவத்தை எதிர்க்கும் நீங்கள், இந்துத்துவாவைக் கைவிடப் போவதில்லை என்று அழுத்தமாகக் கூறும் இவர்களுடனான கூட்டணி தொடர்பாக இன்னும் நேரடியாக உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்!

பதில்: நான் நேரடியாக தான் சொல்லிக் கொண்டிரு க்கிறேன். பாஜகவும், சிவசேனா வும் இந்துத்து வத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டன. தற்போது பாஜக வேண்டாம் என்று சிவசேனா முடிவெடுத்து, இந்துத்துவத்தை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி கொண்டுள்ளது. ஆனால் """"இந்துத்துவத்தை நாங்கள் கைவிடவில்லை"" என்றும் கூறுகிறது என்றால், கூட்டணிக்கு முன் - பின்னான இந்த இரண்டு நிலைபாடும் வேறுபட்டதா அல்லது ஒன்றா என்பது இனிதானே தெரியும்?
நான் ஒரு முஸ்லிம். என்னை நாடாளுமன்றத்தில் நிறுத்தி, """"நீ முஸ்லிமா?"" என்று கேட்டால் ஆமாம் என்றுதான் நான் சொல்வேன். எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமே என என்னால் மாற்றிக் கூற இயலாது. அதைப் போன்றுதான் அவரும் கூறியிருக்கிறார் என்று நல்லெண்ணம் வைக்கிறேன்.

இந்துத்துவா

இவர் கூறும் இந்துத் துவா என்பது இந்துக்களை, இந்து மக்களை வளப் படுத்த - நலப்படுத்தப் பயன்படுத் தப்படும் சொல் எனில் அதில் தவறொன்றும் இல்லை. மாறாக, அது இந்தியாவை உடைக்க, மத நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கத்தான் பயன் படுத்தப்படுகிறது என்று ஆகுமானால் அதை யாரும் ஏற்றுக்கொள்ளப் போவ தில்லை. இங்கே நான் குறிப்பிட விரும்புவது, ‘இந்துத்துவா’ என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் அவர் வாயிலிருந்து உள்வாங்கிக் கொண்டு, நாமாக நம் விருப்பத்திற்குக் கற்பனைக் குதிரையை ஓட்டிக் கொண்டிருக்கக் கூடாது. மாறாக, இப்புதிய அவதாரத்தின் கீழ் அவர் கூறும் ‘இந்துத்துவா’ என்ன என்பதை அவரது இனி வரும் செயல்பாடுகள்தான் விளக்கும்; விளக்கவும் வேண்டும்.

குறைந்தபட்ச செயல்திட்டம்

இப்போது சிவசேனா என்பது தேசியவாத காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிகளுடன் குறைந்தபட்ச செயல்திட்டம் அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ளது. இனி அவர்களது ஆட்சி நடவடி க்கைகள் அதன்படிதான் இருக்கும். அவ்வாறுதான் செயல் படுகிறார்களா என்பதை நாம் பார்த்துத்தான் அறிய வேண்டும் என்பதற்காகத்தான், அடுத்த ஆறு மாதங்களுக்கு அவதானிப்போம் என்று நான் முன்பே கூறினேன்.

கேள்வி: வரும் உள்ளாட் சித் தேர்தலில் திமுக கூட்டணியில் நீங்கள் எத்தனை விழுக்காடுகள் கேட்டிருக்கிறீர்கள்?

பதில்: இந்த விழுக்காட்டு அளவுகளை வைத்தெல்லாம் நாங்கள் கோருவதே இல்லை. அது எங்கள் பழக்கத்திலும் இல்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை நாங்கள் திமுகவுடன் பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து இணக்கமாக இருந்து வருகிறோம். இதர அரசியல் கட்சிகளைப் போல இது அரசியல் ஆதாயங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்ட உறவு அல்ல. மாறாக, கொள்கை அடிப்படையிலானது, மக்கள் நலன் அடிப்படையிலானது என்பதைப் பலமுறை பல இடங்களிலும் நாங்கள் சொல்லி வருகிறோம்.

ஒன்றே குலம்; ஒருவனே தேவன்

கொள்கை ரீதியாக நாங்கள் மிகவும் நெருக்கமானவர்கள். ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ ஆகிய முழக்கங்கள்தான் திராவிட பாரம்பரியத்தின் ஆணிவேர். நாம் அனைவரும் அண்ணன் - தம்பியர், அக்காள் - தங்கையர், ஒரு குடும்பத்தினர் என்பதே இதன் பொருள். இஸ்லாம் வலியுறுத்துவதும் இதைத்தான் என்பதால், கிட்டத்தட்ட 99 சதவிகிதம் உடன்பாடான கொள்கையைக் கொண்டுள்ள திமுகவுடன் தொடர்ந்து இருக்கிறோம். ‘திராவிடம்’ எனும் பெயரை மட்டும் வைத் துக் கொண்டிருப்பதால் எல்லாக் கட்சிகளுடனும் இணைந்துதான் இருக்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இல்லை. திராவிடக் கொள்கையில் தெளிவாக இருப்பது திமுக. அதனால்தான் அவர்களோடு எங்களுக்குத் தொடர்ந்து உறவு இருந்து வருகிறது.

தேர்தல்

இந்த உறவை நாங் கள் வெறுமனே தேர் தலு க்காக மட்டும் வைத்துக் கொள்ள வில்லை. தேர்தல் என்று வரும் போது, எங்கெங்கு எங்களுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளதோ அங்கு கேட்போம். அவர்களும் தருவார்கள். நாங்களும் போட்டியிட்டு, வென்றும் இருக்கிறோம். இத்தனைக் காலமாக இருந்து வரும் வழமை இதுதான். ஆகவே நாங்கள் விழுக்காடு அளவுகோலை வைத்துக் கொண்டெல்லாம் முரண்டு பிடிப்பதில்லை. இதோ இந்தப் புத்தாநத்தம் இருக்கிறது. இங்கு ஐந்தாயிரம் ஆறாயிரம் முஸ்லிம்கள் இருக்கின்றனர். எனவே, இங்கு முஸ்லிம்களைத்தான் போட்டியிடவும் வைப்பர். அப்படி நிறுத்தப்படுபவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பதைத் தேர்தல் நேர உடன்பாடுகள் மூலம் ஆரோக்கியமாகப் பேசி முடிவெடு ப்போம். அவ்வளவு தான்!

கேள்வி: இலங்கையில் புதிதாக அமைந்துள்ள கோத்தபய ராஜபக்ஷ அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் இல்லை. இத்தனைக் காலமாக இருந்து வந்த நிலை இன்று மாறியிருக்கிறது. இதனை வட இந்திய முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளி யிட்டிருக்கின்றன. தமிழகத் திலிருந்து அதுபோன்ற வெளிப்பாடுகள் எதுவும் இதுவரை இல்லையே? உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: இந்தியாவில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக 402 பேரை நிறுத்தியது. மொத்தம் 80 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அம்மாநிலத்தில் பாஜக சார்பில் 75 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுள் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. இன்னும் சொல்வதானால், இன்று பாஜக ஆளும் மாநிலங்கள் எதிலும் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்புகளுக்காக நிறுத்திய ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. ஒரு முஸ்லிமை அரசியல் பிரதிநிதியாக்கக் கூடாது என்பது அவர்களின் கொள்கை. அதை அவர்கள் செய்கின்றனர்.

இலங்கை ராஜபக்சே அரசு

ஆனால் இலங்கையில் நிலை வேறு. முந்தைய ராஜபக்ஷ அரசு முஸ்லிம்களுக்கும், தமிழர் களுக்கும் எதிராக மேற்கொண்ட நடவடிக் கைகளால் அதிருப்தியுற்ற அவர்கள், """"நாம் மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும் சிறு பான்மையினர்... எனவே, நாம் ராஜபக்ஷவுக்கு எதிராகக் களமிறங்கும் பலமான அணியை ஆதரிப்போம்..."" என்று முடிவெடுத்தனர். இலங்கை யிலுள்ள முஸ்லிம்கள், தமிழர்களின் 85 சதவிகித வாக்குகளையும் பெற்றுக் கொடுத்தனர். ராஜபக்ஷ கட்சியை ஒரு சில சிறிய முஸ்லிம், தமிழ் அமைப்புகள்தான் ஆதரித்தன. என்றாலும் அவர்களே வெற்றி பெற்றார்கள். தற்போது அங்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர் இருந்தாலும், அவர்கள் அனைவருமே எதிரணியில் நின்று வென்றவர்கள். எதிர்த் தவர் களுக்கு எப்படிப் பதவி கொடுப்பார்கள்? தொண்டைமான் ஆதரித்தார். அவருக்கு மந்திரி பதவி கொடுத்திருக்கின்றனர். மற்ற தமிழர்கள் எதிர்த்தனர். எனவே பதவி கொடுக்கப்படவில்லை.

நான் சொல்ல வருவது என்னவென்றால், பாஜக இங்கு முஸ்லிம்களுக்கு இட மளிக்காதது கொள்கை அடிப் படையிலானது. ஆனால், இலங்கையில் உள்ள நிகழ்வுகள் கொள்கை ரீதியானவை அல்ல. மாறாக, அந்த நேரத்து அரசியல் சூழல் அடிப்படையிலானது. எனவே, இதில் இங்கிருந்து கொண்டு எதிர்க்கருத்துக் கூற எந்த அவசியமும் ஏற்படவில்லை.

கேள்வி: ரோஹிங்ய அகதிகள் பிரச்சினையில் காட்டிய தீவிரத்தை இலங் கையில் முஸ்லிம்கள் காட்ட வில்லையே...? ஏன்?

பதில்: ரோஹிங்ய அகதிகள் பிரச்சினையும், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளும் ஒன்றல்ல. இரண்டும் அடிப் படையிலேயே வேறுபட்டவை. மியான்மர் எனப்படும் பர்மாவில் முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும் பரவ லாக உள்ளனர். அவர்களுக் கெல்லாம் மியான் மர் பவுத்த அரசு கொடுமை இழைக்கவில்லை. ஆனால், மியான்மரிலுள்ள ராக்கேன் எனும் மாநிலத்தில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு மட்டும் அந்த அரசு எதிராக உள்ளது. அதற்குக் காரணம், ஆங்கிலேயர் காலத்திலேயே அவர்கள் தனி நாடு கோரி, அதற்காக பெரும் தொடர் போராட்டங்கள் எல்லாம் செய்திருக்கிறார்கள். ஜின்னா காலத்தில், அப்படியான போராட்ட த்திற்கு ஆதரவு கேட்டபோது அவர் மறுத்து விட்டார். இப்படி யாக அதன் வரலாறு நீளமானது. அந்த ராக்கேன் மாநிலத்திலுள்ள ரோஹிங்ய முஸ்லிம்களுள் பெரும் பான்மையினர் பெங்காலி மொழி பேசக் கூடியவர்கள். அவர்கள் வங்காளத்திலிருந்து அங்கு சென்றவர்கள் என்ற வரலாறு 150 வருடங்களுக்கு முன்பிலிருந்து இருக்கிறது.

பர்மா முஸ்லிம்கள்

ஆக, பர்மாவிலிருக்கும் எல்லா முஸ்லிம்களையும் அந்த அரசு கொடுமைப் படுத்தவில்லை. இந்தப் பகுதியிலுள்ள வர்களுக்கு - பல்வேறு அரசியல் காரணங் களை முன்வைத்து, னநவநவேiடிn உயஅயீஇல் அவர்களை அடைத்து வைத்து, வெளியில் எங்கும் செல்ல விடாமல் தடுத்து வைத்திருந்தனர். அது இன்று சர்வதேச நாடு களின் கவனத்தை ஈர்த் துள்ள பிரச்சினையாகி இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையிலும் அதுகுறித்து பேசப் பட்டு வருகிறது. பங்களாதேஷ், இந்தியா விலுள்ளவர்கள் எல்லாம்  இதுகுறித்து எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றனர்.

மியான்மர்

இது, மியான்மர் என்ற அந்த நாட்டில் ஒரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் செய்யும் அடிப்படைக் குடியுரிமை மறுப்பு. அது சரியா தவறா என்பதுதான் சர்வதேச அளவிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில் நல்லதொரு முடிவு வரும் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம். எனவே, இதை இலங்கை முஸ்லிம்கள் பிரச்சினையோடு பொருத்திப் பார்க்க எந்த முகாந்தரமும் இல்லை.

கேள்வி: ராமர் கோவில் விவகாரத்தில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீகின் நிலைப் பாடு என்ன?

பதில்: பாபரி மஸ்ஜித் -ராமர் கோவில் விவகாரம் என்பது இன்று நேற்று உருவாக்கப் பட்ட பிரச்சி னையல்ல. ஏறக் குறைய 200 வருடகாலப் பிரச்சினை. அது பலருக்கும் தெரியவில்லை. ஏதோ இப்போது ஏற்பட்ட பிரச்சினை போன்று அதைக் கருதுகின்றனர்.
பாபரி மஸ்ஜித்

பாபரி மஸ்ஜிதைத் தகர்த் தது ஒரு க்ரைம். அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பில் கூட - அதை இடித்தது தப்பு என்று கூறியிருக்கிறார்கள். அதற் கான தண்டனையையும் நீதிமன் றம்தான் கொடுக்க வேண்டும். அது தொடர்பான வழக்குகள் நிறைய நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன.

பாபரி மஸ்ஜித் அமைந்தி ருந்த 2.77 ஏக்கர் நிலத்தில், கி.பி. 1528ஆம் ஆண்டு துவக்கம் 1992 வரை அங்கு பள்ளிவாசல் இருந்தது. ஆனால், அந்தப் பள்ளிவாசல் இருந்த இடம் ராமர் பிறந்த இடம். ராமர் கோவிலை இடித்துத்தான் அதைக் கட்டினார்கள் என்ற வாதம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதை முன்வைத்து, ஆங்கிலேயர் காலத்திலும், அதற்குப் பிறகும் பலமுறை கலவரங்கள் நடைபெற்று, பல்லா யிரக் கணக்கான உயிர்கள் மாய்க்கப் பட்டும், பெரும் பொருட்சேதம் ஏற்படுத்தப் பட்டும் வந்தன என்பது வரலாறு.

இந்திய அரசியல் சாசனம்

இந்தப் பிரச்சினை 1985 - 86இல் பூதாகரமாக்கப் பட்ட போது, எமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் பம்பாயில் ஒன்றுகூடி கலந்தா லோசித்தனர். """"பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி விவகாரம் தீவிரமாகி வரு கிறது... இதை முன்வைத்து பல வகைகளில் கலவரங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது... இதனைத் தவிர்க்கும் பொருட்டு, இந்திய அரசியல் சாசனத்திலுள்ள 143ஆவது ஷரத்து அடிப்படையில், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.. அங்கு தினந்தோறும் முறையாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட வேண்டும்.  அப்படி நடத்தப்படும் விசார ணையின் நிறைவில் என்ன தீர்ப்பு சொல்லப் பட்டாலும், அதற்கு - தொடர் புடைய இரு தரப்பினரும் மனமுவந்து கட்டுப்பட வேண்டும்..."" என 1989இல் நாங்கள் தீர்மான மிட்டோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 

பாபரி மஸ்ஜித் விவகாரம் வரும்போதெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இதைத்தான் நாங்கள் சொல்வோம். ஆனால், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே எங்களை, """"இவங்க கோழை யாயிட்டாங்க... உரிமையைக் கேட்கத் தெரியவில்லை..."" என்றெல்லாம் பலவாறாகப் பொதுவெளியில் விமர்சிப்பர். அண்மையிலும் மிகத் தீவிரமாக விமர்சித்தனர். என்னையே, """"இவன் ஆர்.எஸ்.எஸ். காரன்... பாஜக ஆதரவாளன்... வேகமாகப் பேசத் தெரியவில்லை..."" என் றெல்லாம் கூறுவார்கள். இவை யெல்லாம் நடக்கத்தான் செய்யும்.

ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை 1989ஆம் ஆண்டு நாங்கள் எதைத் தீர்மானமாக இயற்றினோமோ அதுதான் எங்கள் நிலைப்பாடு. அந்தத் தீர்மானத்தை அரசு நிறை வேற்றவில்லை. அதன் தொடர்ச்சியாக, 1992இல் மஸ்ஜிதை இடித்தனர். அதன் பிறகு, அதை முன்வைத்துப் பல கலவரங்களும் நடத்தப் பட்டன.

உச்சநீதிமன்றம்

ஆனால், இன்றுள்ள அரசு - அது தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து, மொத்தமாக விசாரித்து தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வெளியாவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பும் நாங்கள் சொன்னது, """"உச்ச நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் அதை மதிக்க வேண்டும்"" என்றுதான். இந்த நாட்டில் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் ஓர் அமைப்பு கிடையாது.

இந்த வழக்கு மதப் பிரச் சினையல்ல. இடப் பிரச்சினை. உங்களுக்கே தெரியும்... எங்கள் சமுதாயத்தின் எல்லாக் கட்சிகளும், அமைப்புகளும் பாபரி மஸ்ஜித் விவகாரத்தை அரசியலாக்கித்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீகினராகிய நாங்கள் மட்டும்தான் அவ்வாறு செய்யவில்லை. இதற் காக எங்கள் மீது எத்தனை அவதூறான பரப்புரைகள் முன்வைக்கப்பட்டபோதும், அவற்றால் நிலைகுலைந்து விடாமல், எங்கள் தலைவர்கள் எமக்குச் சொன்ன வழிமுறைப் படியே நடந்து வருகிறோம்.

வழிபாட்டுத் தலங்கள்

1989இல் நாங்கள் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகக் கூறினோம். அதாவது, பாபரி மஸ்ஜித் விவகாரத்தை வைத்து, இந்த நாட்டில் பல வழிபாட்டுத் தலங்களை இல்லாமலாக் குவதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத் தினோம். அப்போதைய எங்கள் தலைவர் பனாத்வாலா அவர்கள் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்தி யதன் அடிப் படையில், கூhந ஞடயஉநள டிக றுடிசளாiயீ ஞசடிவநஉவiடிn ஹஉவ என்று கொண்டு வந்தனர். அதன்படி, """"1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியாவில்  உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், கோயில்கள், யூத வணக்கத்தலங்கள், பகோ டாக்கள், குருத்து வாராக் கள், புத்த விஹார்கள், ஜைன மத வழிபாட்டுத் தலங்கள் இருந்தனவோ அந்த வழிபாட்டுத் தலங் கள் அனைத்தையும் இந்திய அரசு பாதுகாக்க வேண் டும்... அவற்றுள் எவை குறித்தும் கேள்வி எழுப்பக் கூடாது... ஆனால் இந்தச் சட்டத்திலிருந்து பாபரி மஸ்ஜித் மட்டும் விதிவிலக்கு... காரணம், அது தொடர்பாக 200 ஆண்டுகால வழக்கு நிலுவையில் இருப்பதால்..."" என்று சட்டமியற்றப்பட்டது. அச்சட்டத்தை இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என எல்லோரும் கைச்சான்றிட்டு அங்கீகரித்தோம். அந்தச் சட்டம் தான் பாராளு மன்றத் தில் நிறைவேற்றப்பட்டு, இன் றும் நடைமுறையில் இருந்து வருகிறது.

அதனால்தான் அன்றும், இன்றும் நாங்கள் சொல்லி வருவது, பாபரி மஸ்ஜித் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு நாளும் விசாரித்து வழங்கும் தீர்ப்பை நாங்கள் மதிப்போம் என்று. இன்று தீர்ப்பு வந்தும் விட்டது. நாங்கள் சொன்னபடியே மதிக்கிறோம். அதே நேரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சொல்வதைத்தான் இந்தியாவிலுள்ள எல்லா முஸ்லிம்களும் நம்புவார் கள், கேட்பார்கள், கடைப்பிடிப் பார்கள் என்று நாங்கள் சொல்ல இயலாது. காரணம், ஒவ்வொரு கட்சிக்கும், அமைப்புக்கும், பொது மக்களுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதை அவர்கள் வெளிப்படுத் துவார்கள். அப்படி எதை வெளியிட்டாலும், """"தீர்ப்பை ஏற்க மாட்டோம்!"" என்று யாரும் கூறக்கூடாது என் பதைத் தொடர்ந்து நாங்கள் கண்டிப்புடன் தெளிவாகக் கூறி வருகிறோம்.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்

இப்போது கூட, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், """"இந்தத் தீர்ப்பின் மீது சீராய்வுக்கு நாங்கள் செல்லப்போகிறோம்..."" என்று கூறியபோது, """"நீங்கள் இந்த வழக்கில் ஒரு வாதியா? சுன்னத் வல் ஜமாஅத் வக்ஃப் வாரியம், ராம் லல்லா, அகாரா ஆகிய மூன்றுதானே இவ்வழக்கின் வாதிகள்...? அந்த மூவருள் ஒருவர் சீராய்வுக்கு முறை யிட்டால்தான் உச்ச நீதிமன்றம் ஏற்கும் என சட்டம் உள்ளதாக எனக்கு நினைவிருக்கிறது... அப்படியானால், இந்த வழக்கைப் பொருத்த வரை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் என்பது மற்றவர்களைப் போல மூன்றாமவர்கள்தானே...? அப்படியிருக்க, நீங்கள் சீராய்வு கோரினால் நீதிமன்றம் ஏற்குமா?"" என்று நான் கேட்டேன். அப்போது, """"என்ன நீங்களே இப்படிச் சொல்கிறீர்கள்?"" என்று கூட கேட்டனர். நான் உள் ளதைச் சொல்வதாகக் கூறி னேன். இன்று அது தான் ஊடகங்களில் உங்க ளாலும் கேள்வியாக எழுப்பப் பட்டிருக்கிறது.

வரும் டிசம்பர் 9-ந்தேதி சீராய்வுக்குச் செல்வதாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கூறியிருக்கிறது. அது அவர்களின் உரிமை. என்றாலும், """"உச்ச நீதிமன் றத்தின் தீர்ப்பை ஏற்கிறோம்... ஆனால், அதில் சில சங்கடங் கள், சந்தேகங்கள் உள்ளன... அவை குறித்து எங்களுக்குத் தெளிவு தேவைப்படுகிறது..."" என்று அவர்கள் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இடபிரச்சினை

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை, பாபரி மஸ்ஜித் விவகாரம் மதப் பிரச்சினையல்ல, மாறாக இடப் பிரச்சினை. அது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிட்டது. அதை மதிக்க வேண்டியது நம் கடமை. அந்தத் தீர்ப்பு சரியா, தவறா என்று ஆராய நாங்கள் நீதிபதிகளோ, சட்ட வல்லுநர்களோ இல்லை. எனவே, உச்ச நீதிமன்றத்திற்கு சட்டமே தெரியவில்லை என்று நான் சொல்ல முடி யாது. அனைத்தையும் ஆராய்ந்து தான் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஒரு விவகாரத்தில் தீர்ப்பு என்றாலே அது எல்லோ ருக்கும் சாதகமாக இருக்காது. அதன்படி, இந்தத் தீர்ப்பு நமக்குச் சாதகமாக வரவில்லை என்றாலும் அதை ஏற்கத்தான் வேண்டும்.

மதக் கலவரங்கள்

தீர்ப்பில் அதிருப்தி இருக் கத்தான் செய்யும். ஆனால், அதை முன்வைத்து மத உணர்ச்சிகளைத் தூண்டி, மதக் கலவரங்களை ஏற் படுத்திக் குளிர்காய நாங்கள் உடன்பட மாட்டோம் என்பது மட்டு மல்ல! அப்படியாக இந்தியா வில் எங்கு முயற்சிக்கப் பட் டாலும் அதைத் தடுத்து நிறுத்தக் களமிறங்குவோம்... இதைத்தான் நாங்கள் அன்றிலிருந்து சொல்லி வருகிறோம். இன்றும் செய்து கொண்டிருக்கிறோம். இதுவே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொள்கை. இதில் எள்முனையளவும் மாற்றம் கிடையாது.
முஸ்லிம் மக்கள் பக