முக்கிய செய்தி

திருச்சி எம்.ஐ.இ.டீ கல்லூரியில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு

திருச்சி எம்.ஐ.இ.டீ கல்லூரியில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு
‘மகத்தான தலைவர் வாய்ப்புகளை உருவாக்குவார்’என்ற இலக்கணத்தின்படி செயல்படும் நிறுவனர் முஹம்மது யூனுஸ்
அடித்தட்டு மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுடன் சமூக நல்லிணக்கத்திற்கு சான்றாக திகழும் எம்.ஐ.இ.டீ கல்வி நிறுவனம்
திருச்சி எம்.ஐ.இ.டீ கல்லூரியில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு

திருச்சி, ஜன. 08-

‘மகத்தான தலைவர் வாய்ப்புகளை உருவாக்கு வார்’என்ற இலக்கணத்தின் படி செயல்படும் நிறுவனர் முஹம்மது யூனுஸ் என்றும் அடித்தட்டு மக்கள் வளர்ச்சிக் கான திட்டங் களுடன்
சமூக நல்லிணக்கத்திற்கு சான்றாக திகழும் எம்.ஐ.இ.டீ கல்வி நிறுவனம் என்று திருச்சி எம்.ஐ.இ.டீ கல்லூரியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி, எம்.ஐ.இ.டி அறிவியல் மற்றும் கலை கல்லூரி மற்றும் எம்.ஐ.இ.டி பல்தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நிறுவனர் தினம் மற்றும் முத்து விழா நேற்று(05-01-2020) காலை 10. மணியளவில் எம்.ஐ.இ.டி கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன்பேசியதாவது:-

சிறப்பான விழாக்கள்

முஹம்மத் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் அன்ட் டெக்னாலஜி என்ற விரிவாக்கத்தைச் சுருக்கமாகக் கொண்ட எம்.ஐ.இ.டீ. கல்வி நிறுவனங்களின் நிறுவன நாளான இன்று, சிறப்பான விழாக்களை ஏற்பாடு செய்து, அதற்குத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிற - நமது பேரன்பிற்கும், பெரு மரியாதைக்குமுரிய ஹாஜி முஹம்மத் யூனுஸ் ஸாஹிப் உள்ளிட்ட உங்கள் அனைவரையும் துவக்கமாக நான் உளமார வாழ்த்துகிறேன்.

நிறுவன நாள்

முஹம்மத் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் அன்ட் டெக்னாலஜி என்ற பெயரில் ஒரு குழுமத்தை உருவாக்கி, அதை எம்.ஐ.இ.டீ. என்று சுருக்கியழைத்து, அதன் சார்பில் 1984ஆம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரி யையும், 1994இல் பொறியியல் கல்லூரியையும், 1998இல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும் துவக்கி, அனைவருக்கும் முன்னு தாரணமாக மிகச் சிறந்த முறையில் 80க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில், வானளாவிய கட்டிடங்களைக் கட்டிய மைத்து, இந்நிறுவனங்களை நடத்தி வந்துகொண்டிருக்கிறீர்கள். இவ்வளவு வளர்ச்சியையும் நினைத்துப் பார்க்கும் வகையில், நிறுவன நாளாக இன்றைய நாளை நிர்ணயித்து, நல்லதொரு விழாவையும் இப்போது ஏற்பாடு செய்து, அதில் நம்மையெல்லாம் பேச அழைத்திருக்கிறார்கள். அதற்காக நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

நிறுவனர் அருமை சகோதரர் யூனுஸ்

இங்கு தலைமையு ரையாற் றிய இந்நிறுவனங்களின் நிறுவனர் அருமைச் சகோதரர் முஹம்மத் யூனுஸ் அவர்கள், தனதுரையில் - """"இதுவரை இந்நிறுவனங்களிலிருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளியேறி, தமிழகத்திலும், இந்தியாவிலும், பல்வேறு உலக நாடுகளிலும் பணியாற்றி, பொருளீட்டிக் கொண்டி ருக்கிறார்கள்"" என்று கூறினார். அப்படிப் பணியாற்றி, தாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைக்கின்ற அந்த பல்வேறு சமயங்களைச் சேர்ந்த சகோதர - சகோதரி களான முன்னாள் மாணவ -மாணவியர் இக்கல்லூரியில் தாம் படித்ததை நினைத்து, இதில் தங்களைச் சேர்த்த இக்கல்லூரியின் தலைவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தார், பயிற்றுவித்த பேராசிரியர்கள் என அனை வரையும் நினைத்து, அவர்கள் நலனுக்காக - தாம் வழிபடும் வழிபாட்டுத் தலங்களில் தொடர்ந்து பிரார்த் தித்துக் கொண்டி ருக்கிறார்கள். தமது  வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் வளர்ச்சிக்காக வித்திட்ட இக்கல்லூரியின் நலனில் அவர்கள் அனைவரும் பேரக்கறை கொண்டி ருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

உன்னத ஒழுக்க வாழ்வுக்கு வழிகாட்டும் கல்வி நிறுவனம்

இங்கே நிறைய சொல்லப் பட்டிருக்கிறது. அனைத் திற்கும் விடையளிப்பது போலவே தலைமையுரையும் அமைந்திருக்கிறது. படிப்பது வெறும் பட்டயங்களைப் பெற்றுச் செல்வதல்ல. உன்னத ஒழுக்க வாழ்வுக்கு வழிகாட்டுவது தான் இந்தக் கல்வி நிறுவனம் என்றும், அதை மனதில் வைத்துக் கொண்டுதான் இரண்டாயிர த்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தொழும் வகையில் மஸ்ஜிதும், அந்த வளாகத்திலேயே நூலகமும் இக்கல்லூரிகளின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகத் தனது தலைமையுரையில் தலைவர் கூறியிருக்கிறார். ஆக, வெறுமனே படித்துப் பட்டம் பெறுவது மட்டுமின்றி, அவர்கள் அப்படிப் பட்டம் பெற்று விடைபெற்றுச் செல்கையில் - தான் ஒரு கல்வியாளன் என்பதோடு, ஒழுக்க சீலர், மாண்புக்குரியவர் என்ற பண்புகளையும் பெற்றவராகத் தான் ஒவ்வொருவரும் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

வேலூர் - பொற்கோயில்

வேலூருக்குச் சென்ற வர்களுக்குத் தெரியும். """"நாராயண பீடம்"" பொற்கோவில் இருக்கிறது. ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் பொருட்செலவில் தங்கத் தாலேயே கட்டப்பட்ட அந்தக் கோயிலின் திறப்பு விழாவின்போது, நானும் அழைக்கப்பட்டுச் சென்றேன். அங்கு, அந்தக் கோயிலின் தலைவர் - தர்மகர்த்தாதான் அதன் சாவியை வைத்திருந்தார். அவர் என்னை அந்த வளாகம் முழுக்கச் சுற்றிக் காண்பித்தார். அந்தக் கோவிலுக்குச் செல்லும் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடத்தில் செல்லுமிடங்களிலெல்லாம் பைபிள், பகவத் கீதை, திருக்குர்ஆன், திருக்குறள், நபிகள் நாயகத்தின் பொன் மொழிகள், ஏசுநாதர், வள்ள லார், திருமூலர் ஆகியோரின் போதனைகள் ஆகியவற்றி லிருந்து வாசகங்களைப் பொதுமக்கள் பார்ப்பதற்காக எழுதி வைத்திருந்தார்கள். அவரிடம் நான், """"இது இந்து மதக் கோவில்தானே...? இங்கு வருவோர் இந்து மத முறைப்படி வணங்கத்தானே வருகின்றனர்...? ஆனால், வழிநெடுக இப்படிப் பல சமயங்களின் வாசகங்களை யெல்லாம் எழுதித் தொங்க விட்டிருக்கிறீர்களே...?"" என்று கேட்டதற்கு, """"எம்.பி. சார்! வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவோர் எப்பொழுதும் ஆன்மிகவாதிகளாகத்தான் இருப்பார்கள்... அப்படிப்பட்ட பக்திமான்களுக்கு நாம் பக்தியை மீண்டும் சொல்ல வேண்டியது மில்லை... ஆன்மிகத்தைக் கற்பிக்க வேண்டியதுமில்லை... மாறாக, அந்தப் பொற்கோவில் உருவாக்கப்பட்ட நோக்கமே - இதைப் பார்க்க வேண்டும் என்று ஒரு பெருங் கூட்டம் வரும்... அவர்கள் அனைவ ரிடத்திலும் ஆன்மிகம், பக்தி என்பனவற்றை யெல்லாம் எதிர்பார்க்க முடியாது... அப்படி வருவோர் இந்த வாசகங்களைப் பார்க்கிற போது, இதில் ஏதாவது ஒரு வாசகமாவது அவர்களது உள்ளத்தைத் தொட்டு, அதனைச் சிந்தனையில் ஏற்றிச் செயல்பட்டு விட மாட்டார்களா...? என்ற எதிர் பார்ப்பிலும், ஆர்வத் திலும் தான் இதை நாங்கள் செய் திருக்கிறோம்..."" என்றார் அவர்.

பள்ளிவாசல்

ஆக - ஒழுக்கத்தைக் கற்பிப்பதற்கு எல்லா மதங் களிலும் கூறப்பட் டிருக்கிற கருத்துக்களை யெல்லாம் நினைவுபடுத்தும் வகையில் இந்த வளாகத்திற்குள்ளேயே பள்ளிவாசலை உருவாக்கி, அதே நேரத்தில் இங்கு பணியாற்றும் அனைவருக்கும் அவரவர் மதப்படி இருக்கும் உரிமை இருக்கிறது என்ற நிலையையும் இங்கே உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இங்கு முதல்வர் தவிர 12 பாடத் துறைகள் - டிபார்ட் மெண்ட்டுகள் இருப்பதாக நான் பார்த்தறிந்து கொண் டேன். முதல்வரையும் சேர்த்து மொத்தம் 13 துறைகள். முஹம்மத் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் அன்ட் டெக்னாலஜி - எம்.ஐ.இ.டீ. என்று பெயரிடப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனங்கள் முஸ்லிம்  களால் துவக்கப்பட்டு, முஸ்லிம் களாலேயே நடத்தப்படும் இந்த நிறுவனத்திலுள்ள 12 பாடத் துறைகளிலும் எத்தனை முஸ்லிம்கள் பணியாற்று கின்றனர் என்று நான் எண்ணிப் பார்த்தபோது, வெறும் இரண்டே துறைகளில்தான் முஸ்லிம்கள் உள்ளனர். மற்ற அனைத்திலும் நம் சகோதர சமயங்களைச் சேர்ந்தவர்கள் தான் பேராசிரியர்களாக உள்ளனர் என்பதை நான் பார்த்தறிந்தபோது, உண் மையில் நான் இறைவனுக்கு நன்றி கூறினேன். இதுதான் இஸ்லாம் காட்டும் வழி.

 பொறுப்புகளுக்குத் தகுதியானவர் களைத் தேர்ந் தெடுத்தல்

ஒரு காலத்தில், ஆயமநச டிக ஆடினநசn ழுநசஅயலே என்று புகழ்ந்துரைக்கப்பட்ட  ஜெர்மனியை உருவாக்கி யவரான பிஸ்மார்க்கிடம், """"றுhயவ ளை வாந ளநஉசநவ டிக லடிரச யனஅinளைவசயவiஎந ளரஉஉநளள - உங்கள் நிர்வாகச் சிறப்பின் வெற்றிக்கான ரகசியம் என்ன?"" என்று கேட்டபோது, """"ஐவ ளை nடிவாiபே ரெவ வாந உhடிiஉந டிக அநn - அந்தந்தப் பொறுப்புகளுக்குத் தகுதியானவர் களைத் தேர்ந் தெடுத்துப் பணிய மர்த்தியதைத் தவிர வேறெந்த ரகசியமும் இல்லை..."" என்று அவர் கூறினார். அந்த பிஸ்மார்க்கியன் பாலிஸியை அருமைச் சகோதரர் முஹம்மத் யூனுஸ் ஹாஜியார் அவர்கள் மிகச் சரியாகக் கடைப்பிடித்து, திறமையுள்ள வர்களை இனங்கண்டு, அவர்களை மதித்து, அவர்களுக்கு உரிய இடத்தையும் - பதவியையும் தந்ததால்தான் இன்று இந்த எம்.ஐ.இ.டீ. கல்வி நிறுவனங்கள் பெயரும், புகழும் பெற்றுச் சிறந்தோங்கிச் சேவையாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய நிலையில் நீங்கள் இல்லை. இக்கல்லூரி இன்று வளர்ந்திருப்பது பத்து சதவிகிதம் என்றால், இன்ஷாஅல்லாஹ் இனி வளரப்போவது நூறு சதவிகி தமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பேராசிரியர்களின் ஆலோசனை

அவர் இன்னும் கூறும் போது, """"இந்தக் கல்லூரியின் வளர்ச்சியில் - இதில் பணி யாற்றும் எனது அன்பிற்குரிய பேரா சிரியர்களின் நல்ல பல ஆலோசனைகளைப் பெற்றே இக்கல்லூரியை நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்..."" என்றார். இந்தப் பாணியில் இயங்கும் நிறுவனத்திற்கு மேலும் மேலும் வெற்றியும், வளர்ச்சியும் பன்மடங்காகக் கிடைக்கும். அப்படிப்பட்ட ரகசியங்களை யெல்லாம் மிக அற்புதமாகத் தெரிந்து வைத்திருக்கிறார் இக்கல்வி நிறுவனங்களின் தலைவர். தான் தெரிந்து வைத்திருப்பதைத் தன் மகனுக்கும் பயிற்றுவித்து, பாரம்பரியமாக இக்கல்விச் சேவையைத் தொடர்ந்து கொண்டி ருக்கிறார் என் பதைக் காண்கையில் மெத்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்நிறுவனம் இன்னும் மென்மேலும் வளர்ச்சி யடைந்து  பொன்விழா, வைர விழா, நூற்றாண்டு விழா என பலப்பல விழாக்களைக் காணும் நல்ல வாய்ப்பை எல்லாம்வல்ல இறைவன் வழங்குவான். அதற்கான அடித்தளம்தான் இன்று இந்த நிறுவனத்தில் நான் கண்டு கொண்டிருக்கிறேன்.

மீலாது விழாக்கள்

இங்கே பேசிய காஜா நஜ்முத்தீன் அவர்கள் கூறு கையில், """"இந்தப் பாலி டெக்னிக் துவக்கியபோது ஜமால் முஹம்மத் கல்லூரி வளாகத்தில் ஒரு ஓலைக் குடிசை அமைத்துத்தான் துவக்கினார்கள்..."" என்று கூறினார். அன்றைய அக்கல் லூரியின் முதல்வர் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிப், வாப்பா அப்துல் காதிர் எஜமான் ஆகியோர் இவர்களுக்காக இடம் கொடுக்க, அதில் கல்விச் சேவையாற்றிய தோடு, ஒவ்வோர் ஆண்டும் மீலாத் விழாக்களை நடத்தி, மாணவ - மாணவியருக்கு நபிகளார் காட்டித் தந்த ஒழுக்க வாழ்வியல் நெறிமுறைக ளையும் கற்றுக் கொடுத்தார்கள்.

அப்படி ஒருமுறை நடத்தப்பட்ட மீலாத் விழாவில், அதிமுகவின் அன்றைய சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதாசன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்றியபோது, """"இங்கே என்னை அழைத்தமைக்கு நன்றி... மீலாத் அவர்கள் மிகச் சிறந்த அறிஞர்... மக்களை மிகச் சிறப்பாக வழிநடத்தியவர்... கடவுள் ஒருவரே என்று கூறியவர்... அந்த மீலாத் அவர்கள் இத்தகைய சிறப்பான வரலாற்றுப் புருஷராக இருக்கிறார்... அப்படிப்பட்ட மீலாத் அவர்களுக்கு இவ்வளவு பெரிய விழாவை நீங்கள் ஏற்பாடு செய்ததற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன்..."" என்று கூறினார். இப்படியாக அவர் பேசியது பதினைந்து நிமிடங்கள். ‘மீலாதுந் நபி’ என்பது நபிகளாரின் புகழைப் பரப்ப, அவர்களது ஒப்பற்ற வாழ்வியலை மக்களுக்கு எடுத்துரைக்க நடத்தப்படும் விழா. ஆனால், ‘மீலாத்’ என்பது நபிகள் நாயகத்தின் பெயர் என்பது போல அவர் புரிந்து கொண்டுள்ளார். அவர் ஒரு நல்ல மனிதர். அந்தக் கூட்டத்தில் நிறைய உலமாக்களும், சமுதாயப் பெரியவர்களும் இருந்த போதிலும் - அவரது உரையைக் கேட்டு ஒருவரும் முகம் சுளிக்கவில்லை. மாறாக, அவர் உரையாற்றி முடித்த பின் அவரிடம், """"நீங்கள் ‘மீலாத்’ என்று சொன்னதோடு ‘நபிகள் நாயகம்’ என்றும் இணைத்துச் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நயம்பட எடுத்துக் கூறி, நபிகளாரைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வழிகாட்டும் நல்ல தலைப்புகளிலான நூல் களையும் அன்பளிப்பாக அளித்தனர்.

பேச்சு, கட்டுரைப்போட்டிகள்

இதை இங்கு நான் நினைவுபடுத்தக் காரணம், இங்கும் மீலாத் விழா நடத்தப்பட வுள்ளதாகவும், அதற்கான முன்னோடியாக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தலைவர் அறிவித்தார். இதைக் கேட்டபோது எனக்கு அன்று நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சிதான் நினைவுக்கு வந்தது. எல்லா சமுதாய மக்களுக்கும் -இஸ்லாம், ஈமான், ஷரீஅத், திருக்குர்ஆன், நபிகள் நாயகம், ஹதீஸ் என அனைத்தைக் குறித்தும் விளக்கம் பெற இந்த மீலாத் விழாவில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பட் டுள்ளது. சுருங்கச் சொன்னால், இஸ்லாம் குறித்தப் புரிதலைத் தர ஓர் அற்புத ஏற்பாட்டைச் செய்திருக்கிறீர்கள். இது ஒரு சமயத்தைச் சேர்ந்தவர்கள் பிற சகோதர சமயங்களைச் சேர்ந்தவர்களைப் புரிந்து கொள்வதற்காக அந்தச் சமயங்களை முதலில் புரிந்து கொள்வது முதல் அம்சம் என்பதைக் கவனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.

""""ஹ றநயம பநநேசயட டடிடிளநள யn டியீயீடிசவரnவைல; ஹ ளவசடிபே பநநேசயட ரளநள வாந டியீயீடிசவரnவைல ரெவ ய பசநயவ பநநேசயட உசநயவநள யn டியீயீடிசவரnவைல"" – அதாவது, """"ஒரு பலவீனமான தலைவர் வாய்ப்புகளை நழுவ விடுவார்... ஒரு வலிமையான தலைவர் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வார்... ஆனால் ஒரு மகத்தான தலைவர் வாய்ப்புகளை உருவாக்குவார்..."" என்று இராணுவத்தில் சொல்வார்கள். இந்த எம்.ஐ.இ.டீ. கல்வி நிறுவனங்களின் தலைவர் இதில் மூன்றாவது ரகத்தவர். அவர் படித்தவர்... பண்பாளர்... சிறந்த சிந்தனையாளர்... ஒரு கல்வி நிறுவனத்தை எப்படி நடத்த வேண்டும் என பல கல்வி நிறுவனங்களை ஆய்ந்தறிந்து, ஆழ்ந்த ஞானத்தைப் பெற்றவர்... வெறும் படிப்போடு நின்றுவிடாமல் தொழிலைத் துவக்கி, அதன் மூலம் வணிக அறிவையும் நன்கு பெற்றவர்...

சமூக கடமைகள்

அந்தத் தொழிலிலிருந்து ஈட்டிய பொருளை வெறுமனே செலவினங்கள் என்று செலவழித்து விட வில்லை. மாறாக, அதைக் கல்வி நிறுவனங்களைத் துவக்க முதலீடு செய்து, அத்தோடு நின்றுவிடாமல் அதை மிகப் பெரிய அளவில் வளர்த்திட தனது பண்பட்ட அறி வாற்றல், சிந்தனைத் திறன், தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றைக் கொண்டு வாய்ப்புகளை உருவாக்கிக் கொண் டிருக்கிறார். இப்படிப் பட்ட நிறுவனங்களின் வாயிலாக சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை கள் என்னென்ன என்பன வற்றை யும் சிந்தித்துக் கண்டறிந்து, அவற்றையும் செயல்ப டுத்திக் கொண்டி ருக்கிறார். தான் எந்த சமுதாயத்திலிருந்து வந்தாரோ அந்தச் சமுதாயத்து மக்களைத் தூக்கி நிறுத்துவதற்காகத் திட்டங்களைத் தீட்டி, அவற்றையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். குறிப் பாக, இந்தச் சுற்று வட்டார த்திலுள்ள என்பது, தொண் ணூறு கிராமங் களிலிருக்கும் ஏழை - எளிய விதவைகள் வாழ் வாதாரத்திற்காகத் திட் டம் தீட்டிப் பொருளுதவி செய்து கொண்டிருக்கிறார் அவரும், அவருடன் இணைந்து பணியாற்றும் அங்கத்தினரும்.
ஆக - சாமான்ய, சாதாரண, சமூகத்தின் அடித்தட்டில் இருக்கிற, ஒதுக்கப்பட்டிருக்கிற மக்களும் நல்ல கல்வியைப் பெற்று, சமூகத்தில் எல்லாத் துறைகளிலும் மின்னி மிளிர, முன்னேறிச் சிறக்க உங்கள் திட்டங்கள் காரணமாக இருப்பது, இந்த நாட்டு மக்களால் மட்டுமல்ல; எல்லா மக்களாலும் வரவேற்றுப் பாராட்டத்தக்க அளவில் இருக்கிறது என்பதை இங்கே மகிழ்வோடு தெரி வித்துக் கொள்கிறேன். அப்பேர்பட்ட இந்தக் கல்வி நிறுவனங்கள் வாழ்வாங்கு வாழ்ந்து சிறக்க வேண்டும். அதை நடத்தும் உங்களுக்கு எல்லாம்வல்ல இறைவன் எல்லா நல வளங்களையும் ஈருலகிலும் நிறைவாக ஈந்தருள வேண்டும் என உங்களுக்காக நான் நெஞ்சம் நெகிழப் பிரார்த்திக்கிறேன்.

நவாஸ் கனி எம்.பி.  - கல்வி உதவித்தொகைகள்

இங்கே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி. அவர்களும், அவரது குடும்பத்தினரும் ஒவ்வோர் ஆண்டும் தனது நிறுவனத்தின் சார்பாக பல்லாயிரக்கணக்கான மாணவ - மாணவியரது கல்விக்காக உதவித் தொகைகளை வழங்கிக் கொண்டி ருக்கிறார்கள். இதை இன்று அவர் செய்யத் துவங்கவில்லை. மாறாக, நாடாளுமன்ற உறுப் பினராவதற்கு முன்பே அவர் செய்து வருகிறார். இப்போதும் அந்த நற்செயலைத் தொடர்ந்து செய்கிறார். கல்லூரியில் பயின்று கட்டணம் செலுத்த வழியில்லாதவர் களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று அவருக்குக் குறிப்பாக உணர்த்தி யதையடுத்து - அவரது குடும்பத்தார் அப்படியான மாணவ - மாணவியருக்கு ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு நிதியொதுக்கி, அதையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இதுவரை இந்த எம்.ஐ.இ.டீ. சேர்க்கப்பட்டதாக எனக்கு நினைவில் இல்லை. இனி தமது பட்டியலில் இந்த நிறுவனத்தையும் தம்பி நவாஸ் கனீ அவர்கள் சேர்த்து, இங்கு பயின்று கொண்டிருக்கும் மாணவ - மாணவியருள் பொருளாதாரத்தில் நலிற்றதன் காரணமாக முதலாமாண்டு பணத்தைக் கட்டி - அடுத்தாண்டுக்கு வழியில்லாத, இரண்டாமாண்டுக்கும் பணத்தைக் கட்டி - நிறை வாண்டுக்குப் பண மில்லா தவர்களை யெல்லாம் கண்டறிந்து உதவிட முன்வர வேண்டும் என்று இந்த நல்ல தருணத்தில் வேண்டுகோளை முன்வைக்கிறேன். அப்படி தமது பட்டியலில் இந்த நிறுவனத்து மாணவ - மாணவி யரையும் சேர்த்துக் கொள்வ தாக என்னிடம் அறிவிக்கவும் சொன்னார் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்து, இந்த நல்ல வாய்ப்பை எனக் களித்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, எல்லோரும் இவர் களுக்காகப் பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டு என துரையை முடிக்கிறேன், நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.