முக்கிய செய்தி

தேசிய தலைவர் பேராசிரியர் கேஎம். காதர் மொகிதீன் பேட்டி

தேசிய தலைவர் பேராசிரியர் கேஎம். காதர் மொகிதீன் பேட்டி
நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பலையை கண்டு 
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்;
தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கேஎம். காதர் மொகிதீன் பேட்டி

சென்னை, பிப். 07-

நாடு முழுவதும் ஏற்பட்டி ருக்கும் எதிர்ப்பலையை கண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கேஎம். காதர் மொகிதீன் கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை மண்ணடியில் நடைபெற்றது.

அப்போது தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்திபுட்÷˜களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கமான முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு இப்போது நடந்துகொண்டிருக்கிறது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் உருவாகி உள்ளது. தமிழகத்தின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

மத்திய அரசு நிறை வேற்றியிருக்கிற குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அதனைத்தொடர்ந்து என்.ஆர்.சி.என்கிற தேசிய குடிமக்கள் பதிவேடு என்.பிஆர். என்கிற தேசிய மக்கள் தொகை பதிவேட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது. சிஏ.ஏ. என்கிற குடியுரிமை திருத்தச் சட்டம்  வந்த பிறகு  இந்திய அரசியல் சாசனம் கேள்விக்குறியாக்கப் பட்டிருக்கிறது. 

இந்திய நாடு அரசியல் அமைப்பு சட்டத்தில் சமயசார் பின்மையை அடிப்படையாக கொண்ட நாடு.  ஆனால், இப்போது கொண்டு வந்துள்ள சட்டம் சமயம் சார்புள்ளதாக இருக்கிறது. இந்து பத்திரிகை ராம் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். சி.ஏ.எ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். என்று அழைக்கப்படுகின்ற சட்டங்கள் இந்தியாவை சமயசார்பற்ற நாடு என்பதை மாற்றி இந்து நாடாக ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கு மாற்றக் கூடியதாக இருக்கிறது என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார். பொதுவாக அது தான் நாடு முழுவதும் பேசப்படுகிறது. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை நாங்கள் இதை தொடர்ந்து எதிர்த்து வருவதற்கு காரணம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டமாக இருக்கிறது என்பதாகும். 72 ஆண்டு கால இந்திய வரலாற்றில் மதத்தை வேறுபடுத்தி மற்ற மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து  இஸ்லாமிய மதத்தை வேறுபடுத்தி எந்தவொரு சட்டமும் இதுவரை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. 

முஸ்லிம் சமுதாயத்தை ஏன் ஒதுக்குகிறார்கள். முஸ்லிம்களுக்கு பாதகம் என்பதை விட இந்திய அரசியல் சட்டத்தில் இந்திய நாடு மதச்சார்பற்ற, சமயசார்பற்ற நாடு என்று வைத்திருக்கிறோம். அந்த தன்மையை கெடுக்கின்ற வகையில் ஏன் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்பது தான் கேள்வி. அதனால் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்முதலில் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்திருக்கிறோம் என்றால் இந்திய நாடு மதச்சார்பற்ற, சமயச்சார்பற்ற நாடு. பாரபட்சமான மதஅடிப்படையிலான, மத ரீதியான எந்த சட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது. இதற்கு மாறாக இச்சட்டங்களை கொண்டு வந்ததால் நாங்கள் எதிர்க்கிறோம். 

நாங்கள் மட்டுமல்ல; இந்திய சாசனத்தில் நம்பிக்கை கொண்ட எல்லா தரப்பு மக்களும், அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் எதிர்க்கிறார்கள். 

ஏதோ முஸ்லிம்கள் மட்டும் எதிர்க்கிறார்கள் என்று கூறி இந்து சமுதாயத்தை ஒன்றுபடுத்தி விடலாம் என்ற பிரிவினைவாதத்தை முன் வைக்கிறார்கள். அது தவறான வாதம். டெல்லியிலே ஷாஹின் பாக்கிலே ஏறக்குறைய ஒன்றரை மாதம் ஆண்களும், பெண்களும் எல்லா மதங்களை சேர்ந்தவர்கள் பனியிலும், வெயிலிலும், மழையிலும் அங்கு உட்கார்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்து கிறார்கள்.  அதேபோன்று டெல்லியில் காந்தி பார்க், நாடு முழுவதும் பெருந்திரளான போராட்டங்கள் நடந்து வருகிறது. தமிழகத்தில் பெருமளவில் போராட்டங்கள் நடக்கிறது.  திமு.க கூட்டணி தலைமையில் அனைத்து கட்சியினர் பேரணி, போராட்டம்நடத்தினோம். 

அதனைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின்தலைமையில்  நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில்  கையெழுத்து இயக்கம் 2-ந்தேதி முதல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு, கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது.  அதில் பல லட்சம் மக்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அதனுடைய நோக்கம் இந்த சட்டம் இந்திய அரசியல் சாசனத்திற்கு முரண்பட்ட ஒரு சட்டம், இந்திய அரசியல் சாசனத்தையே மறைமுகமாக மாற்றி தங்களுடைய விருப் பத்திற்கேற்ப சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறார் கள். அதோடு என்.ஆர்.சி என்பது அசாமுக்கு மட்டுமே சொல்லப்பட்ட ஒரு சட்டமாகும். அதன்மூலமாக அங்கே பல கொடுமைகள் நடை பெற்றிருக்கிறது. அதன் மூலமாக 19 லட்சம் மக்கள் நாடற்றவர்களாக, அகதிகளாக்கப் பட்டுள்ளனர். 
நேற்று பாராளுமன்றத்தில் அசாமில் தடுப்பு காவல் மையம் நாங்கள் உருவாக்ககவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தவறான கருத்தை சொல்லியிருக்கிறார்.  உங்களுக்கு அது தெரியுமோ, தெரியாதோ ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மனித உரிமை ஆணையம் குழுவினுடைய அறிக்கை மூன்று முறை அசாமுக்கு வந்து அந்த குழு தடுப்பு காவல் மையத்திற்கு சென்றுஅங்கே ஆய்வு செய்து அந்த அறிக்கையை 
நமது மத்திய அரசிற்கு, வெளியுறவுத்துறை அமைச் சராக இருந்த மறைந்த சுஷ்மா சுவராஜிடம்  கொடுத் திருக்கிறார்கள். கடந்த ஜூன், டிசம்பர் மாதங்களில் கொடுத்திருக்கிறார்கள். 

அசாமில் பல்வேறு இடங்களில் தடுப்பு காவல் மையம் சிறைபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்களும், பெண்களும் பலபேர் இறந்திருக்கிறார்கள்.  இதையெல்லாம் ஐக்கிய நாடு சபையே தொகுத்து கொடுத்திருக்கிறது.  அப்படி இருக்கும் போது தடுப்பு காவல் மையமே அமைக்கவில்லை என்று சொல்வது மிகப்பெரிய தவறு. இதுபோன்ற தவறான தகவலைத்தான் பாராளுமன்றத்தில் கொடுத்து வருகிறார்கள்.

அதனால் தான் அசாமுக்கு மட்டும் கொண்டு வந்த என்.ஆர்.சி.யை திரும்ப பெற வேண்டும் என்கிறோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ)  திரும்ப பெற வேண்டும்.  எங்களுடைய எம்.பி. நவாஸ் கனி பாராளுமன்றத்தில் இப்போது மட்டும் அல்ல எப்போதும் இச்சட்டங்களை கொண்டு வரக்கூடாது என்று பேசினார். என்.பி.ஆரில் அசாமில் என்னென்ன கேள்விகள் கேட்டு சந்தேகம் அடையும்படியாக தடுப்பு காவலில் வைக்கப் பட்டிருக்கிறார்களோ அப்படிப்பட்ட கேள்விகளை என்.பி.ஆரில் சேர்த்து கேட்டிருக்கிற காரணத்தினால் இப்போது தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று எல்லா மாநிலத்திலும் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. 

நாட்டில் எதிர்க்கட்சிகள்  ஆட்சி செய்யும் எல்லா மாநிலங்களிலும் தீர்மானங்கள் போடப்பட்டிருக்கிறது. இதனை ஒருமுகப்படுத்தும் வகையில்தான் மாணவர் பேரவை இம்மாநாட்டை நடத்தியிருக்கிறது.
 
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய னீபூ² திரும்ப பெற வேண்டும். என்.ஆர்.சியை நடைமுறைப்படுத்த வில்லை என்று தெளிவாக கூற வேண்டும்.  என்.பி.ஆரில் உள்ள குறைகளை நீக்கி அமல்படுத்த வேண்டுமே தவிர மற்றபடி  அப்படியே அமல்படுத்தக்கூடாது என்று தான் நாடு முழுவதும் எதிர்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.  

தமிழக அரசு இந்த எழுச்சியை கண்டு,  மக்கள் கொதித்துபோயுள்ள நிலையை உணர்ந்து குறைபாடுகள் நீக்குகின்ற வகைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மற்ற மாநிலங்கள் குடியுரிமை திருத்தச்சட்டதிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததுபோல்  தமிழக அரசும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் கூறினார்.