முக்கிய செய்தி

கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட துன்பங்கள், வேதனைகளிலிருந்து மீண்டு வெளிச்சத்திற்கு வர மக்கள் விரோத மோடி அரசையும், அதிமுக ஆட்சியையும் தமிழக மக்கள் வீழ்த்த வேண்டும் உதயசூரியன், கை, ஏணி, கதிர் அறிவாள், சுத்தியல் அறிவாள், பானை சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டும்:

கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட துன்பங்கள், வேதனைகளிலிருந்து மீண்டு வெளிச்சத்திற்கு வர மக்கள் விரோத மோடி அரசையும், அதிமுக ஆட்சியையும்  தமிழக மக்கள் வீழ்த்த வேண்டும் உதயசூரியன், கை, ஏணி, கதிர் அறிவாள், சுத்தியல் அறிவாள், பானை சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டும்:
கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட துன்பங்கள், வேதனைகளிலிருந்து மீண்டு வெளிச்சத்திற்கு வர
மக்கள் விரோத மோடி அரசையும், அதிமுக ஆட்சியையும்  தமிழக மக்கள் வீழ்த்த வேண்டும்
உதயசூரியன், கை, ஏணி, கதிர் அறிவாள், சுத்தியல் அறிவாள், பானை சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டும்: பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தமிழக வாக்காள பெருமக்களுக்கு கூறியிருப்பதாவது:-

அன்பார்ந்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு எனது அன்புகலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

17வது நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களில் வாக்களிக்க உள்ளீர்கள். அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் இத்தொகுதியை சேர்ந்த மக்கள் வாக்களிக்க இருக்கிறீர்கள்.
 
கடந்த ஐந்து வருடங்களாக மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசால் எண்ணற்ற துயரங்களையும், வேதனைகளையும் அனுபவித்து வருகிறீர்கள். அதற்கு முடிவு கட்டி தங்களுடைய வாழ்வை வளமாக்கிக்கொண்டு இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வர உங்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும். 
பல்வேறு மதம், மொழி, இனம், கலாச்சாரத்தை கொண்ட இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சார்பின்மை இவைகளை தொடர்ந்து பேணி காத்து வந்தது. ஆனால் மோடி தலைமையிலான அரசு இவைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் ஆதாயம் பெற்று வந்ததெல்லாம் உங்களுக்கு நன்கு தெரியும்.

சர்வாதிகார மனப்பாங்கோடு மோடியும், அமித்ஷாவும் சொந்த கட்சியிலுள்ள மூத்த தலைவர்களையெல்லாம் ஓரங்கட்டி  தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருவதை கட்சிக்கு அப்பாற்பட்டு நடுநிலையாளர்களே இன்று வேதனையடைந் திருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற அதிமுக, பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று மக்களே எல்லா இடங்களிலும் பேசி வருகிறார்கள். கடந்த காலங்களில் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்கள் அதிமுக அரசையும், பா.ஜ.க. அரசையும் எப்படியெல்லாம் விமர்சித்து இந்த அரசு நீடிக்கக் கூடாது என்றெல்லாம் பேசியவர்கள் இன்று கூடா நட்பு கேடாய் முடியும் என்ற வகையில் அணி சேர்ந்திருக்கிறார்கள்.
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன்-கதா நாயகியாக அமைந்தது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகன்- கதாநாயகியாக அமைந்தது. அதிமுக தேர்தல் அறிக்கை மனக்காத காகித பூவாகவும், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வில்லனாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக திமுக-காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்களை முழுவதுமாக ரத்து செய்வோம் என்று கூறியிருக்கிறது. இதை மக்கள் முழுமையாக நம்புகிறார்கள்.. ஏனென்றால் 2006ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அமர்ந்தவுடன் விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.  அதேபோன்று மத்திய காங்கிரஸ் அரசு 66 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. 

நூறுநாள் வேலையை கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு. அதை இப்பொழுது 150 நாட்களாக உயர்த்துவோம் என்று தெரிவித்திருக்கிறது.  மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை தள்ளுபடி செய்வோம் என்றும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரயிலில் செல்ல இலவச பயணம் என்று அறிவித்திருக்கிறது. ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தொழில் தொடங்கிட 50 ஆயிரம் வட்டியில்லா கடன். கல்வியை மாநில அரசின் கீழ் கொண்டு வருவோம் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்றும், சுருக்கமாக சொன்னால் இந்திய மக்களும், தமிழக மக்களும் எதை விரும்பினார்களோ, எதை கனவு கண்டார்களோ, எதை சொல்ல வேண்டும் என்று நினைத்தார்களோ அவையெல்லாம் திமுக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இடம் பிடித்திருக்கிறது.
பெரும்பான்மை - சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசாகவே பா.ஜ.க. அரசு செயல்பட்டு வந்தது.  முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வந்து கணவனுக்கு மூன்றாண்டு சிறைதண்டனை  என்று இஸ்லாமிய ஆண்களை பழி தீர்க்க நினைக்கிறது.

2004ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் - புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்று, மத்தியில் அமைந்த கூட்டாட்சியில் இடம்பெற்று, 13 அமைச்சர்களையும் பெற்றது. வெற்றிபெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அண்ணா அறிவாலயத்திற்கு வரவழைத்த கலைஞர், மத்திய அரசிடம் தமிழகத்திற்காக என்னென்னவற்றையெல்லாம் கேட்டுப் பெற வேண்டும் என ஒரு நாள் முழுக்க அவர்களுக்குப் பெரும் பாடமே நடத்தினார். அதன்படி, 300 திட்டங்கள் தீட்டப்பட்டு, அவற்றுள் 286 திட்டங்கள் நடைமுறைப்படுத்தவும் பட்டுள்ளது. அத்திட்ட ங்களுள் ஒன்றுதான் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம். அது நடைமுறைப்படுத்தப்பட்டு, தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு மேம்பாலங்கள், நான்கு வழிச் சாலைகள், இரட்டை வழித்தட ரயில் தண்டவாளங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் விமான தளம் உருவாக்கல், சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைத்தது, திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் அமைத்தது, துறைமுகத்தில் பறக்கும் சாலை அமைத்தல், தமிழை செம்மொழியாக்கி சட்ட அங்கீகாரம் பெற்றது என  286 திட்டங்கள் நிறைவேற்றப் பட்டன. 

தமிழகத்திலிருந்து 52 பேரை  நாடாளுமன்ற உறுப்பினர்களாக தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுக அனுப்பியது. ஒரேயொரு திட்டத்தை நிறைவேற்றியதாகச் சொல்லிக் காட்டவாவது முடியுமா?  பா.ஜ.க. அரசை எதிர்ப்பது போல் நாடகம் நடத்தி பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி தமிழக மக்களை  ஏமாற்றியது மட்டும்தான் மிச்சம்.
சில ஆண்டுகளுக்கு முன் பாஜக அரசால் பணமதிப்பிழப்பு -னநஅடிnவைளையவiடிn நடை முறைக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் விளைவாக, சிறு - குறு வணிகர்கள், காய்கறி, தள்ளுவண்டியில் வணிகம் செய்தோர், சிற்றுண்டிக் கடைகளை நடத்தியோர், வடை - போண்டா போட்டு விற்றோர் என எல்லோரும் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். சம்பாதித்த பணத்தை யெல்லாம் வட்டிக்காரன் அபகரித்துச் செல்வது போல, 20, 40, 60 சதவிகிதம் என கட்டுக்கடங்காத வரிகளைப் பொதுமக்களின் மீது சுமத்தி, அவர்களது குடும்பங்களையெல்லாம் நாசமாக்கியிருக்கிறது பாஜக அரசு.  ஒருபடி மேலே சென்று வேலையில்லா இளைஞர்களை பக்கோட விற்க சொன்னார்கள்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலமாக பல லட்சக்கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். """"இந்தச் சட்டங்களை யெல்லாம் மாற்றி யமைத்து, வணிகர்களில் வாழ்வில் விளக்கேற்றுவோம். என்று கூறியிருக்கிறார் ராகுல் காந்தி. இந்த நாட்டில் ஒரு தேனீர்க் கடை, வெற்றிலை - பாக்குக் கடை வைப்பதென்றால் கூட, அது எத்தனை அடி பரப்பில் அமைகிறது என கணக்குக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கணக்கிட வரும் அதிகாரிகளுக்கு சில பல ஆயிரங்களை லஞ்சமாகவும் கொடுத்துவிட்டு, நீண்ட காலம் காத்திருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும். ஓரிடத்தில் சிகிச்சையகம் வைத்திருந்த - எனக்குத் தெரிந்த ஒரு ஹோமியோபதி மருத்துவர், அதை மற்றோர் இடத்தில் மாற்றிட அனுமதி  பெறுவதற்கு 6 ஆயிரம் ரூபாய்  லஞ்சம் கேட்பதாகக் கூறினார். எவ்வளவு பெரிய அநியாயம்?
இவற்றுக்கெல்லாம் முடிவெடுக்கும் வகையில்தான், யார் யாரெல்லாம் வணிகம் துவக்க, வணிக நிறுவனம் துவக்க, தொழிற்சாலைகளைத் துவக்க விரும்புகின்றரோ, அவர்கள் எடுத்த எடுப்பிலேயே  அனுமதி பெற அரசை நாடத் தேவையில்லை.மாறாக, மூன்று ஆண்டுகளுக்கேனும் கடுமையாக உழைத்துப் பாடுபட்டு, தமது வணிகத்தை நிலைநிறுத்திய பின், அரசிடம் அனுமதிக்காக வாருங்கள்! அதற்கான வசதி செய்து தரப்படும் என்று கூறி, இப்போது அரசு வைத்திருக்கும் - நடைமுறைச் சிக்கலை மாற்றி அமைப்போம் என்று திமுக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன்னையே மெழுகுவர்த்தியாக உருக்கிக்கொண்டு ஓய்வறியா சூரியனாக இருந்த செம்மொழி காவலர் டாக்டர் கலைஞர் மறைந்தார். அவருக்குக்கூட 6 அடி இடம் கொடுக்க இந்த அதிமுக அரசு கடுமையாக எதிர்த்தது. திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடியை நேரில் சந்தித்து கேட்டும் கூட இடமளிக்க மறுத்து விட்டார்கள். நீதிமன்றத்திற்கு சென்று ஆணையை பெற்று பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தின் அருகில் கலைஞர் உடல்  அடக்கம் செய்யப்பட்டார்.

இதையெல்லாம் தமிழக மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.  நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம், எட்டு வழிச்சாலையை செயல்படுத்தியே தீருவோம் என்று பா.ஜ.க. அமைச்சர்கள் பிரச்சார கூட்டங்களிலேயே திட்டவட்டமாக வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் துரோகத்தை விளைவிக்கும் பா.ஜ.க., அதிமுக , பா.ம.க., தேமுதிக கூட்டணி வேட்பாளர்களை தோற்கடித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு உதயசூரியன், கை, ஏணி, கதிர்அறிவாள், சுத்தியல் அறிவாள், பானை ஆகிய சின்னங்களில் வாக்குகளை அளித்து, மத்தியில்  மோடி தலைமையிலான அரசை வீட்டுக்கு அனுப்பி ராகுல்காந்தி அவர்களை பிரதமராக அமர்த்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதே போன்று 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அத்தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தமிழகத்தில் திமுக தலைமையில் நல்லாட்சி அமைய செய்வது தமிழக மக்களின் தலையாய கடமையாகும்.

அதே நேரத்தில் சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கவும், பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் மோடிக்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் வகையில் சிலர் முயன்று வருகிறார்கள். அந்த முயற்சிக்கு யாரும் விலை போகாமல் மோடி அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோள், ஒரே இலட்சியத்தின் அடிப்படையில் சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காள பெருமக்களும் பெருவாரியான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
                                        தங்கள் அன்புள்ள,                                    பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
                                    தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்