முக்கிய செய்தி

இராமநாதபுரத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உரை

இராமநாதபுரத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உரை
72 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த
இந்திய ஜனநாயகம் மத்திய பா.ஜ.க. ஆட்சியில் கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது
இராமநாதபுரத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உரை

இராமநாதபுரம், அக். 20-
72 ஆண்டுகளாக பாதுகாக் கப்பட்டு வந்த இந்திய ஜனநாயகம் மத்திய பாஜ.க. ஆட்சியில் கேள்வி குறியாக்கப் பட்டுள்ளது என்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ‘’அச்சமற்ற இந்தியா அனைவருக்குமான இந்தியா"" என்ற முழக்கத்தோடு வாக்களர் களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் நாடளுமனற்ற உறுப்பினர் கே.நவாஸ்கனிக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அல் ஹாஜ் ஏ. வருசை முஹம்மது தலைமையில் 18-10-2019 அன்று சந்தை திடலில் நடைபெற்றது. இறை வசனத்தை மாவட்ட உலமாக்கள் அணி துணை அமைப்பாளர் அல் ஹாஜ் முஹம்மது யாசின் யூசுபி ஓதினார்.
மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுதின், மாநில துணை செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ, மாநில ஊடக பிரிவு ஹாஜி எம்.ஜே.ஏ. ஜமால் இப்ராஹீம், ராமநாத புரம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் சார்பில் மதுரை தியாகு, மாவட்ட துணை தலைவர் ஹாஜி அபு முஹம்மது, மாவட்ட துணை தலைவர் எஸ்.எஸ்.சாதுல்லா கான்,  மாவட்ட உதவி செயலாளர் ஆர். முஹம்மது யாகூப், தலைமை நிலைய பேச்சாளர் மௌலவி எஸ்.செய்யது முஹம்மது மன்பஈ, மாவட்ட துணை தலைவர்கள் அல் ஹாஜ் எச்.வி. அப்துல் அஜீஸ், அப்துல் ஹமீது, மாவட்ட உதவி செயலாளர் எம்.அப்துல் லத்திப், மாவட்ட இளைஞர் அணி தலைவர் முஸ்லிம் யூத் லீக்  மௌலவி சுதனா முஹம்மது அருசி ஜமாலி, உலமாக்கள் அணி அமைப்பாளர் ஹாஜி எம்.எஸ்.யூனூஸ் மன்பஈ, மாவட்ட உதவி செயலாளர் எஸ்.டி. கமால் முஸ்தபா, மாநில மாணவர் அணி இணை செயலாளர்  எம்.எஸ்.எப். எஸ்.சிரஜுதின், கீழக்கரை நகர் தலைவர் ஷேய்க் ஜமாலுதின், மாநில ஊடக் பிரிவு பி.எம்.அப்துல் ஜபார், மாவட்ட எஸ்.டி.யு தலைவர் ஏ.எம்.லியாகத் அலிகான், கீழக்கரை ஏ,கமரூஸ் சமான், நெல்லை மாவட்ட முஸ்லிம் யூத் லீக் அமைப்பாளர் ஏ. முஹம்மது கடாபி, மாவட்ட வநிதாளி கே. காமிலா, காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் ஏ. மதன மீரா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக மாவட்ட செயலாளர் ஏ.எல். முஹம்மது பைசல் வரவேற்புரை ஆற்றினார். இதில் திமுக தீர்மான குழு இணை செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சத்திய மூர்த்தி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் முருக பூபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் காசிநாத துரை,  சிவாஜி, விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் கே.முஹம்மது யாசின், மதிமுக மாவட்ட பொறுப்பாளர் பேட்ரிக், முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் வழக்குரைஞர் ரவிசந்திர ராம வன்னி, தமுமுக, மமக மாவட்ட தலைவர் ஏ. பட்டாணி மீரான், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி.வி.வேலுசாமி, ராமநாதபுரம் திமுக நகர செயலாளர் கார்மேகம், கீழக்கரை ஏ.கே.ரிபாய், வழக்குரைஞர் ஹமீது சுல்தான், கீழக்கரை காங்கிரஸ் கட்சி ஹமீது கான், கீழக்கரை திமுக நகர செயலாளர் எஸ்.ஏ.எச் பசீர், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளர் அஹம்மது கபீர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் சிறப்புரை ஆற்றினார். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முன்னாள் எம்பி முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் விழா பேருரையை நிகழ்த்தினார். 

அவர் பேசியதாவது:-

மகத்தான வெற்றி - நன்றி அறிவிப்பு கூட்டம்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்த இராமநாதபுரம் நாடாளு மன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக - அதில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வேட்பாளராக - அதன் சொந்தச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார் அருமைச் சகோதரர் நவாஸ் கனீ அவர்கள். அதற்கான நன்றி அறிவிப்புக் கூட்டமாகவும், வெற்றி பெற்ற அவரை பாராட்டும் கூட்டமாகவும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த அருமையான கூட்டத்தில் உலமாப் பெருமக்கள், பெரியோர்கள், கூட்டணிக் கட்சிகளின் அங்கத்தினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்ட - அனைத்துக் கிளைகளின் நிர்வாகிகள், அங்கத்தினர், இராமநாதபுரம் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எனப் பெருந்திரளாகக் கலந்து கொண்டி ருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் துவக்கமாக எனது மனமார்ந்த நன்றி யையும், வாழ்த்துக் களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞரின் கொள்கை தங்கமாக மிலிர்ந்து கொண்டிருக்கும் தளபதி மு.க. ஸ்டாலின்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் காலந்தொட்டு - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தி வந்த, இன்று நடத்தி வரக்கூடிய எந்த மக்கள் திரள் நிகழ்ச்சியானாலும் - அது சிறியதோ, பெரியதோ... அவற்றிலெல்லாம் நிறைவுப் பேருரையாற்றும் பொறுப்பை கலைஞர் அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தோம். அவருக்குப் பிறகு அவரது கொள்கைத் தங்கமாக மிளிர்ந்து கொண்டிருக்கக் கூடிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில், தளபதியார் அவர்களின் பிரதிநிதியாக இந்தக் கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சர் நண்பர் சத்தியமூர்த்தி அவர்கள் நிறைவுப் பேருரையாற்ற உள்ளார்கள். நாளை சென்னையில் எனக்கிருக்கும் ஓர் அவசரப் பணிக்காக விரை வாகப் புறப்பட வேண்டிய நிலையில் இருப்பதால், இங்கே அவையில் இருக்கின்ற பெருமக்களின் உரைகளை யெல்லாம் கேட்க முடிய வில்லையே என்ற வருத்த த்துடன் எனது கருத்து க்களை மட்டும் பதிவுசெய்து, உங்கள் உள்ளங்களோடு உரையாடும் நிலையில் நான் இருக்கிறேன்.

கூட்டணி கட்சி பேச்சாளர்கள்

இங்கே எனக்கு முன் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பேச்சாளர்கள் நல்ல பல கருத்துக்களை உங்கள் முன் வைத்திருக்கிறார்கள். எனது உரைக்குப் பிறகும் இன்னும் பலர் உரையாற்ற விருக்கிறார்கள். நிறைவாக உங்கள் தொகுதியின் நாடாளு மன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் நவாஸ் கனீ அவர்கள் நன்றி தெரிவிக்கவிருக்கிறார்.

மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான்

இவரை, வெறுமனே ஒரு முஸ்லிம் என்ற எல்லைக்குள் சுருக்கி விடாமல், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் - கூட்டணியின் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததைச் சிரமேற்கொண்டு, அவருக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள் அதற்காக உங்களுக்கும், உங்களோடு இணைந்து வாக்களித்த தாய்க்குலத்திற்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது எங்கள் முதல் கடமை என்பதால், இந்தக் கூட்டத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய் திருக்கிறது. """"மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான்"" என்பது நபிகள் நாயகம் அவர்களின் வாழ்வும், வாக்கும் ஆகும். அதனடிப்படையிலேயே இந்த மாபெரும் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்திய அரசியல் சாசனம்

இந்தியா எனும் இந்த மாபெரும் நாடு - பல்வேறு ஜாதி, மத, இன, மொழி, பிராந்திய, கலாச்சார, வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் என தனித்தனி வாழ்க்கைமுறைகள் உள்ளன. அவையனைத்தையும் தாண்டி, இவர்கள் அனைவரும் ‘இந்தியர்’ என்ற ஒரே குடையின் கீழ் ஒன்றாக இருப்பவர்கள். இதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தது இந்திய அரசியல் சாசனம். இந்தியாவிலிருக்கும் அனைத்துத் தரப்பு மக்களின் பலதரப்பட்ட வடிவங்களை உள்வாங்கிய நிலையில்தான் இந்த அரசியல் சாசன சட்டத்தை அமைத்துத் தந்திருக்கிறார்கள் கூhந குடிரனேiபே குயவாநசள டிக கூhந ஐனேயைn ஊடிளேவவைரவiடிn என நாம் பெருமையுடன் புகழும் பெருந்தலைவர்கள். 
மக்களாட்சியை அமைத்துத் தருவதற்காக பாடுபட்ட பெருந்தலைவர்கள்

அப்படிப் பட்ட இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் அடிப் படையில்தான் கடந்த 72 ஆண்டு காலமாக இந்தியா வில் மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி நடத்தப்பட்டுக் கொண் டிருக்கிறது. நாட்டிலுள்ள அனைத்து மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு, அனை வருக்குமான ஆட்சியாக நடத்தப்பட்டு கொண்டிருப்பதால்தான் இது ஜனநாயக ஆட்சி, மக்களாட்சி என்றும் கருதப்படுகிறது. இந்த மக்களாட்சியை அமைத்துத் தருவதற்காகத்தான் மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆஸாத், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் எல்லாம் பாடுபட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத், மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் என்று புகழப்பட்ட எம்.ஜி.ஆர்., அவருக்குப் பிறகு ஆட்சி நடத்திய ஜெயலலிதா அம்மை யார், ஐந்துமுறை இந்தத் தமிழகத்தில் முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் என அனைவரும் இந்த ஜனநாயகத்தின் அடிப் படையில்தான் ஆட்சியை நடத்தினார்கள்.

பெரும்பான்மை மக்களுக்கும் கூட உடன்பாடு இல்லாத இந்துத்துவ கொள்கை

ஆக, 72 ஆண்டுகாலம் பாதுகாக்கப்பட்டு வந்த இந்திய ஜனநாயகம், இன்றைய மத்திய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியால் கேள்விக் குறியாக்கப்பட்டுக் கொண்டி ருக்கிறது. இந்தியாவில் நடத்தப்படும் ஆட்சி இங்கு உள்ள அனைத்து மக்களுக்கு மான ஆட்சி என்றுதான் இத்தனைக் காலமாக இருந்து வருகிறது. அந்த மரபைப் புறக்கணித்து விட்டு இந்த நாட்டில் இருக்கும் ஒரே ஒரு பெரும்பான்மைச் சமுதாயத்தின் பெயரை வைத்துக்கொண்டு, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்களுக்கும் கூட உடன்பாடில்லாத இந்துத்துவக் கொள்கையை அவர்களின் மதத்தின் பெயராலேயே வடிவமைத்து, அதை நடைமுறைப்படுத்தத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறது இன்றைய மத்திய அரசு. இதைத்தான் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் - இயக்கங்களும் இன்று நாடு முழுக்க வன்மையாகக் கண்டித்து கொண்டிருக்கின்றன.

இந்துத்துவ கொள்கையை திணிப்பதாலேயே எதிர்ப்பு

பொதுவாக மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி... ஒரு கட்சி நடத்தும் ஆட் சியை பிற கட்சிகள் சில பல காரணங்களுக்காக எதிர்ப்பார்கள். அவர்கள் எதிர்க்கட்சியினர். ஆனால் இப்பொழுது மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் பாரதீய ஜனதா அரசை அவர்களை - அவர்களது கூட்டணி யினரைத் தவிர உள்ள இந்த நாட்டின் அனைத்து கட்சியினரும் எதிர்ப்பது இந்த வகையான எதிர்ப்பல்ல. பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றபோதிலும் இத்தனை ஆண்டுகாலம் எல்லாக் கட்சியினரும் எதை அடித் தளமாகக் கொண்டு செயல் பட்டார்களோ அந்த இந்திய அரசியல் சாசனச் சட்டத்தை மதிக்காமல் இந்துத்துவக் கொள்கை யைத் திணிப்ப தாலேயே இப்படிப்பட்ட எதிர்ப்பை இந்த நாட்டு மக்கள் அனைவரும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

பசு பாதுகாப்பு

‘கவ்ரக்ஷா’ - பசு பாதுகாப் பாளர்கள் என்று தங்களை அவர்கள் சொல்லிக் கொள் கிறார்கள் ஆனால் உண்மை யில் கவ்ரக்ஷகற்களாக அவர்கள் இல்லை மாறாக, கவ்ராக்ஷகர் களாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள் பசுவைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் இந்த நாட்டில் தமக்குப் பிடிக் காதவர்களையெல்லாம் பிடித்து, இழுத்து, அடித்து, மிதித்து, கடுமையாகத் துன்புறுத்தி, படுகொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பசு பாதுகாப்பு என்ற பெயரில் மட்டும் இதுவரை இந்த நாட்டில் கொல்லப் பட்ட வர்கள் 252 பேர். அவர்களுள் நான்கில் மூன்று பேர் முஸ்லிம் கள்.

49 அறிவுஜீவிகள்

இப்படியான செயல் பாடுகள் விரும்பத் தக்கதல்ல... இவையனைத்தும் தவறு என்று சுட்டிக்காட்டி, குறைகளைச் சரி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு - அதன் பிரதமருக்கு இந்த நாட்டில் உள்ள 49 அறிவுஜீவிகள் கடிதம் எழுத, அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது என்பதை மனந்திறந்து பரிசீலிப்பதை விட்டுவிட்டு, கொடுத்த அவர்களையே குற்றவாளி களாகக் கருதி, அவர்கள் மீது வழக்குத் தொடுத்து, நீதிமன்றத்திற்கு இழுத்தது இந்த மத்திய அரசு. 
கடிதம் எழுதுவது கூட ஒரு பெருங்குற்றமாக கருத ப்படுகிறது

பிறகு பொதுமக்கள் அனைவரின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்குப் பணிந்து அவர்கள் மீது பதிவு செய்யப் பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்றிருக்கிறது. இந்த ஜனநாயக நாட்டில் கடிதம் எழுதுவது கூட ஒரு பெருங்குற்றமாக கருத ப்படுவது இன்றைய ஆட்சியில்தான். இவற்றை யெல்லாம் உடனுக்குடன் நாம் எதிர்க்கவில்லையெனில் இவைதான் நம் மீது சட்டங் களாகத் திணிக்கப்படும்.

சிறுபான்மையினர் மட்டுமல்லாது இந்துத்துவ கொள்கையை எதிர்ப்பவர்களும் ஒன்றுசேர வேண்டும்

இவற்றை எல்லாம் இங்கே நான் தெரிவிப்பதற்குக் காரணம், இன்று இந்தியாவை ஆளும் மத்திய பாரதீய ஜனதா அரசு முன்வைக்கும் இந்துத்துவக் கொள்கையை இந்நாட்டில் உள்ள பெரும்பான்மைச் சமுதாயமான இந்து மதத்தினர் அனைவரும் ஏற்றுக் கொண்டிருப்பதாக - ஆதரித்து கொண்டிருப்பதாகத் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்து சமுதாயத்தில் பெரும்பான்மை யானவர்களுக்கு இந்துத்துவக் கொள்கை மீது நம்பிக்கை இல்லை என்பதை விட, அதனை எதிர்க்கிறார்கள் என்பதே உண்மை. ஒரு சில இந்துத்துவவாதிகள் மட்டுமே இந்த இந்துத்துவக் கொள்கையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக் கிறார்களே தவிர, மற்ற அனைவரும் இங்கே மதமாச் சரியங்களுக்கு அப்பார்பட்டு அண்ணன் - தம்பிகளாக, அக்காள் - தங்கைகளாக, ஒரு தாய் மக்களாக உறவாடவே நினைக்கிறார்கள். ஆக, ஒத்த கருத்தில் உள்ள இவர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இங்கிருக்கும் முஸ்லிம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் என சிறுபான்மையினர் மட்டுமல்லாது - இந்த நாட்டில் உள்ள - இந்துத்துவக் கொள்கையை எதிர்க்கும் இந்து சமுதாயத்தின் பெரும்பான்மை மக்களையும் ஒன்றிணைத்து, நாடு முழுக்கக் களமிறங்க வேண்டியது காலத்தின் கட் டாயம்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கால் பதிக்க முடியாத பா.ஜ.க.

அதைத்தான் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி செய்திருக்கிறது, செய்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய பாரதீய ஜனதா கட்சியால் தமிழகத்தில் கால் பதிக்கக் கூட முடியவில்லை. அந்தளவுக்குப் பேரிடியைத் தேர்தல் முடிவாகத் தந்திருக்கிறது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் அருமைச் சகோதரர் நவாஸ் கனீ அவர்களுக்கும் நீங்கள் மகத்தான வெற்றியை வழங்கி யிருக்கின்றீர்கள். இங்கே பேசிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சொன்னது போல இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் - இந்த இராமநாதபுரம் தொகுதியில் மட்டும்தான் இந்துத்துவத்தை மட்டும் தூக்கிப்பிடிக்கும் பாரதீய ஜனதா கட்சியும், இந்திய ஜனநாயகத்தை மட்டும் தூக்கிப்பிடிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் நேருக்கு நேர் களம் கண்டு, இந்துத்துவம் தோற்கடிக்கப் பட்டு, இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப் பட்டிருக்கிறது.

ஜனநாயக கடமையை சரியாக செய்துள்ள இராமநாதபுர தொகுதி மக்கள்

இந்த இராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு நீங்கள் அளித்துள்ள இந்த வெற்றி சாதாரணமானதல்ல! இந்த நாட்டின் பிரதமரே இங்கு வந்து பரப்புரை செய்து எடுபடாமல் போயிருக்கிறது. இந்திய ஜனநாயகம், இந்திய மக்களின் ஒற்றுமை, கலாச்சாரப் பாதுகாப்பு, சமய நல்லிணக்கம், வளர்ச்சித் திட்டங்கள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் பராமரிப்பு என இவற்றைத்தான் இந்தியப் பிரதமர் பொறுப்பிலிருப்பவர் பேசியிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி அவர்களோ, ""இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களித்தால் இந்த நாட்டில் தீவிரவாதம் வளர அது காரணமாகி விடும்"" என்று பேசினார். """"நாட்டின் பிரதமர் அல்லவா பேசுகிறார்?"" என்று அதற்குச் செவிமடுத்து விடாமல், சொல்லும் கருத்து தவறானது என்பதை மிகத் தெளிவாக புரிந்தவர்களாக இந்தத் தொகுதி மக்கள் நீங்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை மிகச் சரியாகச் செய்திருக்கிறீர்கள்.

இந்திய அரசியல் சாசனம் உருவாக பாடுபட்டவர்கள் இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர்கள்

ஒரு நாட்டின் பிரதமராக இருந்துகொண்டு, இப்படி அவதூறாகப் பேசி இருக்கிறாரே? இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் தீவிரவாதிகளா? இந்த நாட்டின் இருபது கோடி முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? இந்த நாட்டில் அனைவருக்குமான அம்சங் களையும் உள்ளடக்கிய இந்திய அரசியல் சாசனம் உருவாவதற்குப் பாடு பட்டவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர்கள். இந்திய ஜனநாயகத்தைத் தலைமேல் தாங்கிக் காத்துக் கொண்டிருப்பவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர்.
அனைவரும் மனிதர்கள், சகோதரர்கள் என்ற கொள்கையை கொண்டவர்கள் தான் முஸ்லிம்கள்

""""இந்த உலகில் பிறந்த அனைவரும் ஒரே தாய் தந்தைக்குப் பிறந்தவர்களே!"" என்று திருமறை குர்ஆன் அழுத்தமாகக் கூறுகிறது. ஆக, நாம் அனைவரும் சகோதரர்களே! இங்கே இருக்கின்ற முஸ்லிம்கள் மட்டுமல்ல; முஸ்லிமல்லாத தலைவர்கள் பலர் இங்கே இருந்து கொண்டிருக்கிறீர்கள்... முஸ்லிமல்லாத மக்கள் பலர் இங்கே நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டி ருக்கிறீர்கள்... இந்த இடத்தையும் தாண்டி நமக்கு முரண்பட்ட இந்துத்துவ கொள்கையைக் கொண்டுள்ள அவர்களும் மனிதர்கள்தான். ஆக, அவர்களும் சகோ தரர்களே. இதை வெறுமனே ஒரு பேச்சுக்காக நான் சொல்ல வில்லை. உள்ளபடியே இந்த நம்பிக்கையை மனதில் கொள் ளாதவன் முஸ்லிமே அல்ல. இந்த உண்மையை இந்துத்து வவாதிகள் அறியவில்லையா அல்லது அறிந்தும் மறைத்துக் கொண்டிருக்கிறார்களா?

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் 447 விஞ்ஞானிகள் சேர்ந்து, உலகத்தில் உள்ள அனைத்து நிறங்களை - இனங்களைச் சேர்ந்தவர்களின் டி.என்.ஏ.வை எடுத்துப் பரிசோதனை செய்துவிட்டு, ""இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் யாராயினும் - அவர்கள் எந்த நிறத்தைக் கொண்டு உள்ளவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்து பல்கிப் பெருகி வளர்ந்தவர்களே!"" என்று கூறியிருக்கிறார்கள். இதைத்தான் இந்தத் தமிழகத்தில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றும், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றும் தொன்றுதொட்டு முழங்கி, அதன்படியே நமது வாழ்வியலையும் அமைத்துக் கொண்டுள்ளோம்.
உன்னதமான மார்க்கத்தை பின்பற்றுவர்களை தீவிரவாதிகள் என்று சொல்வதா?

ஆக, இங்கே இருக்கும் அருமை நண்பர் சத்தியமூர்த்தி அவர்களை நான் ‘சகோதரர் சத்தியமூர்த்தி’ என்று அழைத்தால் அது வெறும் வாய்ச்சொல் அல்ல! அலங்காரச் சொல் அல்ல! மாறாக, அது என் உள்ளத்தில் இருந்து எழும் சொல். இந்த நம்பிக்கை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கிறது, இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவர் முஸ்லிமாக இருக்க முடியும். இப்படிப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்று பவர்களைத் தீவிரவாதிகள் என்று சொல்லத் துணிகிறார்கள் என்றால் அவர்கள் உண்மையை மறைக் கிறார்கள் அல்லது இஸ்லாம் என்றால் என்ன, முஸ்லிம்கள் என்றால் யார், தீவிரவாதம் என்றால் என்ன என்பன பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக இருந்து கொண்டி ருக்கிறார்கள். ஆனால் இந்த நாட்டு மக்கள் உண்மையை நன்கு அறிந்தவர் களாகத்தான் இருக்கிறார்கள். உண்மையில் இந்த இஸ்லாமிய மார்க்கம் இந்தியாவில் மட்டுமல்ல! உலகத்தில் உள்ள அனைவரையும் சகோதரர் களாக மதிக்கவும், இணக்கத் தோடு செயல்படவும் வழிகாட்டு கின்ற உன்னதமான மார்க்கம் என்பதாலேயே அதை முஸ்லிம் கள் பின்பற்றிக் கொண்டிருக் கிறார்கள்.

மக்கள் ஆட்சி தத்துவத்தை பாதுகாத்தல்

இங்கே பிரச்சினை என்னவென்றால், இன்றைய ஆட்சியாளர்கள் தூக்கிப் பிடிக்கும் இந்துத்துவக் கொள்கையை மிகக் கடுமையாக எதிர்க்க கூடிய அல்லது ஏற்றுக் கொள்ளாத மக்கள்தான் இந்த நாட்டில் உள்ள இந்துத்துவவாதிகள் அல்லாத அனைத்து தரப்பு மக்களும். ஆனால் அவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்படாமல் இருக்கிறார்கள். ஆக நம் மீது இப்பொழுது உள்ள ஒரே கடமை - அவர்கள் அனைவரையும் ஒருங் கிணைத்து, ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது மட்டுமே. அதை எப்பாடு பட்டாவது மிகச் சரியாகச் செய்தால் மட்டுமே - இத்தனை ஆண்டு காலம் நாம் பாதுகாத்து வந்த நமது இந்திய ஜனநாயகத்தை மக்களாட்சித் தத்துவத்தை, இந்திய அரசியல் சாசனச் சட்டத்தைப் பாதுகாக்க முடியும். இதை நாம் அனைவரும் கடமையாகக் கருதி, மிக விரைவாக இணைந்து களமிறங்க வேண் டிய நிலையில் இருக்கிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை பெறுவதற்கு முன்பே மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் நவாஸ் கனி எம்.பி.

அந்த வகையில்தான் இந்த இராமநாதபுரம் நாடாளு மன்றத் தொகுதியில் அருமை தம்பி நவாஸ் கனி அவர்களுக்கு நீங்கள் அனைவரும் இணைந்து மகத்தான வெற்றியை வழங்கியிருக்கின்றீர்கள் இதற்காக என் உள்ளம் திறந்து உவகையுடன் கோடானு கோடி நன்றிகளை இத்தொகுதி மக்களாகிய உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் சேவை என்பது தம்பி நவாஸ் கனி அவர்களுக்குப் புதிதல்ல! அவர்களது குடும்பம் தாராளத்தன்மை கொண்ட குடும்பம். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக் காரர்கள் அக்குடும்பத்தி லுள்ளவர்கள். நவாஸ் கனி அவர்களும், அவர்களது சகோதரர்களும் இன்று அதனைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியைப் பெறுவதற்கு முன்பே மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள இவர், நாடாளுமன்ற உறுப்பினரானதைக் கொண்டு தனது சேவையின் எல்லையை விரிவுபடுத்தி இருக்கிறார். பரந்த முறையில் தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.

நாடாளுமன்றத்திலும் அவரது பங்களிப்பு மிகச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இங்கே பேசிய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் சொன்னது போல - ஏதோ பத்துப் பதினைந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து செயல்படுபவர் போல செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார். ஆக நல்லதொரு செயல்வீரரை - சிறந்த சேவையாளரை நீங்கள் தேர்ந் தெடுத்து நாடாளு மன்றத்திற்கு அனுப்பி இருக்கிறீர்கள். அதற்காக இப்போது அவரைப் பாராட்டிக் கொண்டும் இருக்கிறீர்கள். வெறும் பாராட்டுடன் நின்றுவிடாமல், அவரது தன்னலமற்ற சேவைகளுக்கு உற்ற துணையாக இருப்பதோடு, எல்லாத் தகுதிகளையும் கொண்டுள்ள அவரை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என உங்கள் அனைவரையும் உரிமையோடு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு எனது உரையை முடிக்கிறேன், நன்றி.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் பேசினார்.

கூட்டத்தில் நகர செயலாளர் ஹதியதுல்லா, கமுதி மீரான் படேல், எமனேஸ்வரம் காஜா முஹிதீன், ஜமால் முஹைதீன், இராமநாதபுரம் முஹம்மது பக்ருதின், ராஜா முஹம்மது, முஹம்மது அபூபக்கர், பாக்கர், அமீர்தின், காஜா முஹிதீன், சுலைமான் சேட், நாசர் அலி, அஸ்கர், அப்துல் சுக்கூர்,ரவுத்தர் அலி, முஹம்மது புஹாரி, அலிகான் பாதுஷா, செய்யது இப்ராஹீம், நிருபர் அன்வர் அலி, ஷேய்க் அப்துல்லா, ஆலிம் மஊஹம்மது இஸ்மாயில், ஏர்வாடி நவ்பாதுஷா, பேரையூர் சாகுல் ஹமீது, பனைக்குளம் முஹம்மது இக்பால், முஹம்மது மதானி, தேவிப்பட்டினம் சித்திக், முஹம்மது இப்ராஹீம், ஆர் எஸ்.மங்களம் அமானுல்லா கான், மண்டபம் அமீர், கீழக்கரை ஹபிப் தம்பி, முஸ்தபால் அமீன், அல்நூர் ஹசன் கக்கா, பயாஸ், சாயல்குடி சுலைமான், நத்தர்சா, முகமது நாசர், மாரியூர் ஹபிப் முஹம்மது, சிக்கல் நிஹார் சுல்தான், கனி, தேரிருவேலி புர்ஹானுதின், சுல்தான், ஹாஜா மைதீன்,  திருபாலைக்குடி மீரா ஹுசைன், பரமக்குடி அப்துல் ஹக்கீம், முதுகுளத்தூர் முஹம்மது மைதீன், கீழசெல்வனுர் அயுப்கான், இதம் பாடல் சுலைமான், பெரியப்பட்டினம் அப்துல லத்திப், கொட்டியக்காரன் வலசை தையூப், பாம்பன் சஹுபர் சாதிக், கலீல் ரஹ்மான், பக்ருதின், கீலக்கிடாரம் இக்பால், மேலசெல்வனுர் பீர் முஹம்மது, வாலாந்தரவை சாலிகு, செம்படையார்குளம் பிலாலுதின், குயவன்குடி ஜெயனுலாபுதின், கோட்டை யேந்தல் அயூப்கான், காக்கூர் நாகூர் கனி, கீரனூர் முத்து பட்டாணி, வாணி ஷாஜஹான், கண்ணிராஜபுரம் டோனி, குருவாடி விஜயன், சாதிக், ராமநாதபுரம் 19வது வார்டு செயலாளர் அப்துல் சுக்கூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தலைமை நிலைய பாடகர் நகர் தலைவர் ஹாஜி எஸ்.ஏ. சீனி முஹம்மது கீதம் பாடினார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உலமாக்கள் அணி நகர் அமைப்பாளர் மௌலவி ஏ. அன்வர் ஆலிம் துஆ ஓத கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.