முக்கிய செய்தி

தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு

தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு
ஏற்கனவே அங்கம் வகிப்பவர்களும், இன்று பேரணியாக வந்து இணைந்துள்ளவர்களும்
இ.யூ. முஸ்லிம் லீகை வலுவான பேரியக்கமாக வளப்படுத்த வேண்டும்
சமுதாய பிரபலங்கள் தாய்ச்சபையில் இணையும் விழாவில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு
சென்னை, அக். 26-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் அங்கம் வகிப்பவர் களும்,  இன்று பேரணியாக வந்து தன்னை இணைத்து கொண்டவர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை வலுவான பேரியக்கமாக வளப்படுத்த வேண்டும் என்று
சமுதாய பிரபலங்கள் தாய்ச் சபையில் இணையும் விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

ðஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மத்திய சென்னை மாவட்ட பொதுக்குழு மற்றும் சமுதாய பிரபலங்கள் தாய்ச்சபையில் இணையும் விழா 25-10-2019 வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மினி மஹாலில் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் யூசுப் குலாம் முஹம்மது தலைமையில் நடைபெற்றது.

Þ‚பிஙீஸிˆகு™ ம்ஷிஊபு ஷி¬யூஷ˜ ம்ðபூட்ஊமுபு˜ ம்லி.ணின். லிட்ஷி˜ ந்வூட்ஹbக் ஊக்ஷிஞ்¹ ¬பூபுட்ள்ஞறூட்˜. னீஷ˜ ம்ðஊபு ஷிட்ஷ¶ : 
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயர் போற்றித் துவக்குகிறேன்.
யூசுப் குலாம் முஹம்மத் அன்புச் சகோதரர்களான யூஸுஃப் குலாம் முஹம்மத், முதஸ்ஸிர் காலித், அவர்களது நண்பர்கள்  இணைந்து, தங்களை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைத்துக் கொள்வதாகவும், அந்த இணைப்பை ஒரு விழாவாக நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட தையடுத்து, மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக இந்த விழாவுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டு, """"சமுதாயப் பிரபலங்கள் தாய்ச்சபையில் இணையும் விழா"" என அதற்குத் தலைப்பும் தரப்பட்டுள்ளது.

முத்தஸ்ஸிர் காலித் - ஹஜ் உம்ரா ட்ராவல் ஏஜென்ஸி

சமுதாயப் பிரபலங்கள் என்றால் யார்? இங்கிருக்கும் சன்மார்க்க அறிஞர்களான உலமாக்கள், சமுதாயப் பெரியவர்கள், தோல் வணிகக் கோமான்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கக் கூடிய பெரியவர்கள் என - மக்களால் அறியப் பட்ட இவர்கள்தான் சமுதாயப் பிரபலங்கள். இந்தப் பட்டியலில் தான் சகோதரர் முத்தஸ்ஸிர் காலித் அவர்கள் ஹஜ் உம்ரா ட்ராவல் ஏஜென்ஸி நிறுவனத்தை நடத்துபவராக இருக்கிறார். அவரைப் போன்றே, அவரோடு இன்று தங்களைத் தாய்ச்சபையில் இணைத்துக் கொண்டுள் ளவர்களும் பல்வேறு தொழில் துறைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, பாடுபட்டு உழைத்துப் பொருளீட்டி, அதன் மூலம் தம் குடும்பங்களைக் காப்பாற்று வதோடு, சமுதாயத்திற்கும் தேவையான நேரங்களில் செலவழித்துப் பணியாற்று பவர்களாத்தான் இருந்து கொண்டிருக் கிறார்கள். இப்படிப்பட்ட சமுதாயப் பிரபலங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வருவதை இருகரம் நீட்டியல்ல... இதயம் திறந்து வரவேற்பது நமது கடமையாக உள்ளது. வருக, வாழ்க, வெல்க, வீறுகொண் டெழுக, சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உங்கள் அருந்துணையை மென்மேலும் தருக என்று கூறி உங்கள் அனைவரையும் உளமார வரவேற்கிறோம்.

தோல் வணிகத்தில் கொடிகட்டி பறந்த சீமான்கள்

சென்னையிலுள்ள இந்த பெரியமேட் பகுதியில் ஒரு காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மிகப் பலம் பொருந்திய இயக்கமாக இருந்தது. இங்கிருக்கும் நமது சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூ பக்கர் ஒரு காலத்தில் இங்கு தான் வசித்து வந்தார். பன் மொழிப் புலவர் அண்ணன் எம்.ஏ.அப்துல் லத்தீஃப் ஸாஹிப் இந்தப் பகுதியில் தான் வசித்து வந்தார். ஆம்பூர், வாணியம் பாடி, வேலூர், குடி யாத்தம் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த பெரியவர்கள், வணிகப் பெருமக்கள் -குறிப்பாக, தோல் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த சீமான்கள் இந்தப் பகுதியில் செறிவாக வாழ்ந்த காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் இங்கு கொடி கட்டிப் பறந்தது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்காக தொண்டாற்றியவர்கள்

வேலூர் ஹபீபுல்லாஹ் ஸாஹிப்,  ஸஈத் ஸாஹிப், வாணியம்பாடி அப்துல் மஜீத் ஸாஹிப், மறைந்த காலிக் ஸாஹிப், குடியாத்தம் சுபுஹான் ஸாஹிப், அண்மையில் காலமான ரஹ்மத்துல்லாஹ், அக்பர் கான் போன்றோரெல்லாம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து வளர்த்தவர்கள். அந்தப் பாரம்பரியத்தில் இன்று எஸ்.டீ.நிஸார் அஹ்மத் வாணியம்பாடி தலை வராகவும், எஸ்.எஸ். பி.ஃபாரூக், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் அன்புத் தம்பி எச்.அப்துல் பாஸித், இக்பால், அஜீஸ், ஸஹாபுத்தீன், ஜான் பாஷா, முஹம்மத் ஹனீஃப் என வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் களும், அருமைப் பெரியவர் களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மிகச் சிறந்த தொண்டைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வரிசையில்தான் இன்று முத்தஸ்ஸிர் காலித் அவர்களும், அவர்களோடி ணைந்து வந்துள்ள சகோதரர் களும் - வேலூர் மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வழங்கியிருக்கிற அந்தப் பாரம்பரியம், வரலாறு, பங்களிப்பு ஆகியவற்றை மென்மேலும் சிரமேற் கொண்டு எடுத்துச் செல்லக் கூடிய வகையில் இன்று தங்களை இணைத்துக் கொண் டிருக் கிறார்கள். அவர்களின் பணி இறைவன் அருளால் அவ்வாறாக இருக்கும் என்று நம்புவதோடு, இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவும் செய்கிறேன். அந்தத் தம்பி இங்கு உரையாற்றும்போதும் - சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய தொண்டுகள் குறித்துதான் அந்த உரையின் உள்ளடக்கம் இருந்தது.

மக்கள் சேவையால் இறைவனே கிடைப்பான்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை - மற்ற அரசியல் கட்சிகளைப் போல இது வெறும் தேர்தல், வாக்கு, பொறுப்புகளைப் பெறு வதற்காக மட்டும் துவக்கப் பட்டதல்ல. இந்தச் சமுதாயத்தை, சன் மார்க்கத்தை வளர்ப்ப திலும், பாதுகாப் பதிலும், தேவையான நேரங்களில் தொண்டாற் றுவதிலும் முனைப்புடன் முன்னின்று செயல்படுவதற்காகவே இவ்வி யக்கம் தோற்றுவிக்கப்பட்டது. சுருக்கமாகச் சொல்வதானால், """"வணக்க வழிபாடுகளால் ஜன்னத் எனும் சுவனம் கிடைக்கும்; ஆனால் மக்கள் சேவையால் இறைவனே நமக்குக் கிடைப்பான்"" என்ற உர்தூ பொன்மொழிக்கேற்ப இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயல்பாடுகள் அமைந் திருக்கின்றன.

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் காலந்தொட்டு, நமது தேசியத் தலைவர்களாக விளங்கிய அப்துர் ரஹ்மான் பாஃபகீ - இப்றாஹீம் சுலைமான் சேட், ஜி.எம்.பனாத் வாலா, தங்ஙள், அண்மையில் நம்மை விட்டும் பிரிந்த இ.அஹ்மத் ஸாஹிப், தங்ஙள் ஸாஹிப், தமிழகத்தில் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அ.கா.அப்துஸ்ஸமத் ஸாஹிப், பன்மொழிப் புலவர் எம்.ஏ.அப்துல் லத்தீஃப் ஸாஹிப், அப்துல் வஹ்ஹாப் ஜானி ஸாஹிப், திருப்பூர் முஹ்யித்தீன்,  ஏ.கே. ரிபாயி, ரவணசமுத்திரம் பீர் முஹம்மத் என பெரும்பெரும் தலைவர் களெல்லாம் நமக்குக் காட்டிச் சென்ற வழி என்னவெனில், """"இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எனும் இந்தச் சமுதாயப் பேரியக்கத்தை - சமுதாயத் திலுள்ள உல மாக்கள், பெரியவர்கள், தாய்மார், படித்த வர்கள், வர்த்தகக் கோமான்கள், சீமான்கள் கட்டிக் காப்பதன் மூலமாக, முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமின்றி - இந்த நாட்டு மக்களுக்கும் மிகச் சிறந்த சேவையை வழங்கிட அருமையான களமாக இருக்கிறது என்பதால் இதனை நீங்கள் வளப்படுத்துங்கள்! பலப்படுத்துங்கள்!!"" என்று வலியுறுத்தி, வழிகாட்டிச் சென்றுள்ளார்கள்.

வழிமுறைகள்

இவர்களெல்லாம் காட்டி த்தந்த வழிமுறைகளை ஒ வ்வொரு காலகட்டத்திலும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி, முறைப்படிக் கடைப்பிடித்து ஒழுகுவோமே யானால் இந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எனும் பேரியக்கத்தைக் கொண்டு நம் சமுதாயம், சன்மார்க்கம் ஆகியவற்றுக்கு மட்டுமின்றி, நமது இந்திய தேசத்திற்கும் மிகச் சிறந்த தொண்டாற்றக் கூடியவர்களாக நாம் ஆவோம்.

தாய்ச்சபை

நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீகை ‘தாய்ச்சபை’ என்று பொதுவாக அன்போடு அழைக்கிறோமே...? ஏன் இது ‘தாய்ச்சபை’ என்றழைக்கப் பட்டு வருகிறது தெரியுமா? இந்தியாவில் இன்று 2 ஆயிரத்து 218 அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும். அந்த அமைப்பு களெல்லாம் எழுப்பும் முழக்கங்கள், அவர்கள் ஏற்றும் கொடிகளை யெல்லாம் கேட்டும், பார்த்தும் எந்த முஸ்லிம் தாய்மாரும் தமது சேலை முந்தாணையைத் தலைமேல் போட்டுக் கொள்ளும் பழக்கம் இந்தியாவில் கிடையாது. 

பச்சிளம் பிறைக்கொடி

ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உள்ளவர்கள், """"நாரே தக்பீர்! அல்லாஹு அக்பர்!!"" என்று முழங்கியவர்களாகப் பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றும் நேரத்தில் மட்டும் நம் சமுதாயத் தாய்மார்கள் அதைப் பார்த்துவிட்டால் உடனடி யாகத் தமது தலைகளில் முக்காடிட்டு, இரு கையேந்தி அல்லாஹ்விடம் துஆ செய்யும் காட்சியை தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியா முழுக்கவும் நாம் காண்கிறோம். இந்தப் பாரம்பரிய வழக்கம் இந்திய முஸ்லிம் தாய்மாரிடம் இருப்பதைப் பார்த்தறிந்த காரணத்தால்தான் இதற்கு ‘தாய்ச்சபை’ என சிராஜுல் மில்லத் அவர்கள் பெயர் சூட்டி னார்கள். அந்தப் பெயரால்தான் இந்தப் பேரியக்கம் இன்றளவும் அனைத்துத் தரப்பு மக்களாலும் அன்பொழுக அழைக்கப்பட்டு வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட நேரத்தில் கராச்சிக்குச் சென்ற காயிதேமில்லத் ஸாஹிப், அவர்களது தம்பி கே.டீ.எம்.அஹ்மத் இப்றாஹீம் ஸாஹிப், ஏ.கே.ஜமாலீ ஸாஹிப், வேலூர் அன்வர் ஸாஹிப் ஆகியோர் அங்கு காயிதே ஆஸம் முஹம்மத் அலீ ஜின்னா அவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு, இந்தியாவுக்குத் திரும்புகையில், இந்தியாவில் முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய இக்கட்டான சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்த வேளையில் - """"நாங்கள் இந்தியா வுக்குப் போகி றோமே...? அங்கு என்ன செய்ய வேண்டும்?"" என்று கேட்ட நேரத்தில், """"முஸ்லிம் லீகை பலப்படுத்துங்கள்! ஐக லடிர னடிn’வ னநஎநடடியீந ஆரளடiஅ டுநயபரந in ஐனேயை, லடிர றடைட நெ கiniளாநன- இந்தியாவில் முஸ்லிம் லீகை நீங்கள் பலப்படுத்த வில்லையானால், நீங்கள் அழிக்கப்பட்டு விடுவீர்கள்"" என்று எச்சரித்து வழியனுப்பி வைத்தார்கள்.

இறை அருளாளல் தனி ஒருவனாக இருந்து...
அதன் பிறகுதான் இந்தியா திரும்பிய அண்ணல் காயிதேமில்லத் அவர்கள், இதுவரை இந்தியாவிலிருந்து அகில இந்திய முஸ்லிம் லீகில் அங்கம் வகித்தவர்களெல்லாம் கட்சியை விட்டும் ஓடிய நேரத்தில், கட்சியைக் கலைத்து விட்டோம்... இனி கட்சி இல்லை என்று வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் சொன்னார்கள்: """"இந்தியாவிலிருந்து இந்தக் கட்சியில் இதுவரை இடம் பெற்றிருந்த அனைவருமே ஓடிச் சென்று விட்டாலும் கூட, இறையருளால் தனியொரு வனாக இருந்து, இந்தப் பச்சிளம் பிறைக்கொடியைத் தூக்கிப் பிடித்து - நாரே தக்பீர்! அல்லாஹு அக்பர்! என நான் தன்னந்தனியாகவேனும் முழங்குவேன்"" என்று துணிந்து கூறி, அதனைத் தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்தியும் காட்டிய காரணத்தால்தான்,  இன்று இந்தியாவில் 19 மாநிலங்களில் இந்தக் கட்சி இன்று வலுப்பெற்று வந்துகொண்டிருக்கிறது.

வரலாறு

இங்கே தம்பி அபூபக்கர் சொன்னது போல, 1952 துவங்கி இன்று வரை இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதித்துவம் வகிக்காத பாராளுமன்றமே இல்லை"" எனும் வரலாற்றுக்குச் சொந்தக் காரர்கள் நாம். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து இந்த வரலாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு மட்டுமே உண்டு.  இந்த வரலாறு படைப்பதற்கு நமக்கு வித்திட்டு வழிகாட்டிய பெருந்தலைவர் கண்ணியத் திற்குரிய காயிதேமில்லத் அவர்கள்தான். அந்த வழியில் நாம் சறுகாமல் சென்றால் - அதுதான் நாம் வெல்லும் வழி, மிகச் சரியான வழி என்று இந்தத் தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிலாஃபத்

நிறைவாக, மறைந்த நம் தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் சொல்லித் தந்த பாடத்தை மட்டும் இங்கு நினைவூட்டிவிட்டு, விடைபெறுகிறேன். அவர் சொல்வார்: """"மனிதர்களாகப் பிறந்ததால் நாமெல்லாம் முதலில் மனிதர்கள்... பிறகு நாம் இந்தியாவில் வசிப்பதால் இந்தியர்கள்... இந்த உலகம் ஒரே சாம்ராஜ்யமாக இருந்த காலம், கிலாஃபத் இருந்த காலம், உதுமானிய சாம்ராஜ்ய காலம், ப்ரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இருந்த காலம் என அனைத்துக் காலங்களும் மலையேறி விட்டன. இன்று, உலகில் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் 197 நாடுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இன்று உலகத்தில் நமக்குள்ள அடையாளம், ஒவ்வொரு நாட்டிலும் - அந்த நாட்டைச் சேர்ந்த மக்களாக வாழ்வதுதான்! அந்த வகையில் இந்தியா எனும் இந்த நாட்டில் வாழும் நாம் இந்தியர்கள் ஆவோம். மூன்றாவதாக, நாம் இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறியைக் கடைப்பிடிப்பதால் நாம் முஸ்லிம்கள்...

மனித நேயத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய மனிதர்கள்

ஆக, முதலில் நாம் மனித நேயத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய மனிதர்கள். பின்பு இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி நடக்க வேண்டிய இந்தியர்கள். அதன் பிறகு நாம் இஸ்லாமிய வாழ்வியலைப் பின்பற்றும் முஸ்லிம்கள். ஆக, இந்திய முஸ்லிம்கள் தமது ஒரு கையில் இந்திய அரசியல் சாசன சட்டப் புத்தகத்தையும், மறு கையில் இறைமறை திருக்குர்ஆனையும் ஏந்திச் செயல்பட்டால், நாம்தான் மிகச் சிறந்த மனிதர்களாகவும், மிகச் சிறந்த இந்தியர்களாகவும், மிகச் சிறந்த முஸ்லிம்களாகவும் திகழ்வோம்... நம்மை எல்லோரும் விரும்புவார்களே தவிர யாரும் நம்மை வெறுக் கவோ, ஒதுக்கவோ வாய்ப்பே இல்லை"" என்று நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருப்பவர்கள்  மட்டுமின்றி, இந்தியாவில் இன்று எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் 20 கோடி முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவரும் இந்த இனிய வழிகாட் டலைப் பின்பற்றி நடந்தால், இந்த நாட்டில் இந்திய முஸ்லிம் களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டு விடப் போவதில்லை. உலக மக்களுக்கெல்லாம் முன்மாதிரி யான மக்களாக நாம் திகழ முடியும்.

இந்த இனிய அரிய வழிகாட்டல்களையெல்லாம் மனதில் ஏற்றி, இன்று வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் அங்கம் வகிக்கும் நாமும், இன்று நம்முடன் இணைந்து கொண்டுள்ள தம்பி முத்தஸ்ஸிர் காலித் அவர்களும், அவர்களது தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இன்று பேரணியாக வந்து தம்மை இணைத்துக் கொண்டுள்ள பெருமக்களும், அருமைத் தாய்மார்களும், அன்புத் தோழர்களும் செயல்பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீகை இந்த நாட்டில் இன்னும் வலுவான பேரியக்கமாக வலுப் படுத்தவும், வளப்படுத்தவும் வேண்டும். அதன் மூலம், இந்த நாட்டில் சமய நல்லிணக்கம் தழைக்கவும், சகோதரவாஞ்சை சிறக்கவும் - நம் தலைவர்கள் சொல்லித் தந்துள்ள பாடத்தின் கீழ் நாம் நின்று, நிறைவாகக் களப்பணியாற்றுவதன் மூலம் சிறந்த வழியில் செல்வோம்! அல்லாஹ்வின் பேரருளை வெல்வோம்! என்று கூறி எனதுரையை முடிக்கிறேன்.