முக்கிய செய்தி

இ.யூ.முஸ்லிம் லீக் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உறுப்பினர்களாக இருக்கும் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை

இ.யூ.முஸ்லிம் லீக் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உறுப்பினர்களாக இருக்கும் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை
இ.யூ.முஸ்லிம் லீக் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உறுப்பினர்களாக இருக்கும்
வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது
தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்திலுள்ள வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடு வதற்கு முடிவெடுத்திருப்பதை பெருத்த 
மகிழ்ச்சியோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்கிறது.
வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர்தான் காமெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். அந்த தொகுதியிலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 சட்டமன்ற தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றிபெற்றுள்ளது. இது என்றென்றும் நீடித்து கொண்டிருக்கின்ற அரசியல் நிலைமை ஆகும்.
அடுத்துள்ள மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். காங்கிரரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் அங்குள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் , ஊழியர்கள் பெரும் பங்காற்றி வருகிறார்கள். வயநாடு நடாளுமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஆதரவாக 65 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் என்பது வரலாற்று செய்தியாகும். இத்தகையை நாடாளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதின் மூலம் வயநாடு தொகுதி மக்களின் ஆதரவு மட்டுமல்லாமல், கேரளா மக்கள் அனைவருடைய ஆதரiவும், நன்மதிப்பையும் அவர் பெருவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

முதன் முறையாக பண்டித ஜவஹர்லால் நேரு குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர் ராகுல்காந்தி கேரளா மாநிலத்தில் போட்டியிடுவதால் தென் மாநிலங்களுடைய ஒட்டுமொத்த ஆதரiவுயும் காங்கிரஸ் கட்சிக்கு திருப்பக்கூடிய சந்தர்ப்பமாக இது அமைந்து புதிய சரித்திரம் படைக்கும் என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வலிமைமிக்க வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலிருந்து ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டு இந்தியாவின் பிரதமராகும்போது நரேந்திர மோடியை வெறுக்கின்ற இந்திய முஸ்லிம் சமுதாயம் மற்றும் சிறுபான்மை சமுதாயங்கள் மட்டுமின்றி அனைத்து பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் சிறப்பாக வரவேற்று இந்திய திருநாட்டில் மதசார்பற்ற நல்லாட்சி ஏற்படுவதையும், சமூக நல்லிணக்கம் ஓங்குவதையும், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்பதை வெகுவாக பாராட்டுவார்கள். இதன் மூலம் பிரதமர் ராகுல் காந்தியை இந்திய மக்கள் தங்களின் இதயங்களில் ஏற்றி போற்றும்படியான வரலாற்று திருப்புமுனை ஏற்படும் என்பதிலும் சந்தேகம் கிடையாது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தங்கள் அன்புள்ள,

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்